Published:Updated:

̀2021-ல் 87 சதவிகித நிறுவனங்களில் ஊதிய உயர்வு இருக்கும்!' - ஆய்வறிக்கையில் தகவல்

2021-ம் ஆண்டுக்கான சராசரி ஊதிய உயர்வு 7.3 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாகப் பெரும்பாலான தொழில்கள் வீழ்ச்சியடைந்தன. பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் காரணமாக, ஊதிய உயர்வைப் பற்றிய சிந்தனையே ஊழியர்கள் மத்தியில் இல்லாமல் இருந்தது என்றே கூறலாம்.

Covid-19 Pandemic
Covid-19 Pandemic

நஷ்டத்தைச் சந்திக்காத சில நிறுவனங்களும் குறைவான ஊதிய உயர்வையே வழங்கின. நடப்பாண்டில் (2020) வழங்கப்பட்ட சராசரி ஊதிய உயர்வு 6.1% மட்டுமே. இந்தியாவில் கடந்த 25 ஆண்டுக் காலத்தில் இதுதான் மிகவும் குறைவு. இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, சராசரி ஊதிய உயர்வு 6.3 சதவிகிதமாக இருந்ததே குறைவானதாக இருந்தது.

இந்தச் சூழலில், இந்தியாவில் ஆய்வு மேற்கொண்ட Aon என்ற சர்வதேச நிதி நிறுவனம், 2021-ம் ஆண்டில் 87% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கத் திட்டமிட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த 1,050 நிறுவனங்களிடம் நடந்திய ஆய்வு முடிவில் இது கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் 61% நிறுவனங்கள் 5-10% ஊதிய உயர்வு வழங்கத் திட்டமிட்டு வருகின்றனவாம். 2021-ம் ஆண்டுக்கான சராசரி ஊதிய உயர்வு 7.3 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Salary hike
Salary hike

பெருந்தொற்று காலத்தில் இழப்பு ஏற்படாமல் தப்பித்த 29% நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வே அளிக்கவில்லையாம். 46% நிறுவனங்கள் 5-10%, 16% நிறுவனங்கள் 10% உயர்வும் வழங்கியுள்ளன. ஐ.டி, பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள்தான் அதிக அளவில் ஊதிய உயர்வை அளித்துள்ளன. மற்றொருபுறம், ஹாஸ்பிடாலிட்டி, ரியல் எஸ்டேட், பொறியியல் சேவை துறைகள் ஆகியவை ஊதிய உயர்வில் மிகவும் மோசமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியு நார்மல் நிலை தொடங்கியுள்ளதால், பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன. அதன் காரணமாக, 2021-ம் ஆண்டில் ஊதிய உயர்வை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன. இருந்தாலும் 14% நிறுவனங்கள் 2021-ம் ஆண்டில் ஊதிய உயர்வு வழங்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் பெருந்தொற்று நேரத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை 2021-ம் ஆண்டில் திரும்பக் கொடுக்கவும் முடிவுசெய்துள்ளன.

Recruitment
Recruitment

இது தவிர, இந்த ஆய்வில் மற்றொரு முக்கியமான விஷயமும் தெரியவந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் அதிகமாக புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அந்தப் பணியை நிறுத்தி வைத்திருந்தன. ஆள்குறைப்பையும் செய்தன. அதுபோன்ற நிறுவனங்களில் 2021-ம் ஆண்டின் மூன்றாவது நான்காவது காலாண்டு வரை இதே நிலைதான் தொடரும். புதிய பணி நியமனங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரியவந்துள்ளது.

ஊதிய உயர்வில் மாற்றம், வீடு-குடும்ப வேலைப் பளு - பேசுகிறார்கள் ஐ.டி பெண்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு