Published:Updated:

வெளிநாட்டு வேலைக்குச் செல்பவரின் பாதுகாப்புக்காக விரைவில் செயலி! - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ( Facebook - Gingee masthan )

இதுவரை வெளிநாட்டில் சிக்கித்தவித்த 1,674 பேரை மீட்டிருக்கிறோம். சமீபத்தில் கம்போடியா மற்றும் மியான்மரில் இருந்து 64 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது, ``ஒவ்வொரு வருடமும் அயலக தமிழர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற அரசு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி வரும் ஆண்டு ஜனவரி 11 மற்றும் 12-ம் தேதி அயலகத் தமிழர் தினத்தைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

அயலகத் தமிழர்
அயலகத் தமிழர்

இந்த விழாவில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தங்களது பெயரை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை தொடங்கி யுள்ளோம். மேலும், பிற தகவல்களை அதே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள், தமிழக அரசிடம் தங்களின் பெயரை பதிவு செய்துவிட்டுச் சென்றால் அவர்களுக்கான தகுந்த சட்டப்பாதுகாப்பை அரசு அளிக்க முடியும். அதுதொடர்பான செயலியைத் தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார். அதில் மேலும் பல நலத்திட்டங்களும் இருக்கும்.

பெயர் பதிவு...
பெயர் பதிவு...

இதுவரை வெளிநாட்டில் சிக்கித்தவித்த 1,674 பேரை மீட்டிருக்கிறோம். சமீபத்தில் கம்போடியா மற்றும் மியான்மரில் இருந்து 64 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் எந்த நாட்டுக்கு, எந்த வேலைக்குச் செல்கிறோம்? என்பதைத் தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். தவிர, வேலை வாய்ப்பு தகவல் தருபவர்கள், பதிவு செய்யப்பட்ட முகவர்தானா? அவர்கள் கூறும் வேலையின் உண்மைத்தன்மை என்ன? என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், மக்கள் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வெளிநாட்டுக்குச் சென்று சிக்கிக்கொள்கின்றனர்.

வெளிநாட்டு வேலை!
வெளிநாட்டு வேலை!

இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளோம். போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்மீது அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சார்பில் கூறியிருக்கிறோம்" என்று பேசினார்.