Published:Updated:

என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வான ஆசிஸ் செளஹான்... இனி பி.எஸ்.இ-க்கு யார் தலைவர்?

என்.எஸ்.இ

பி.எஸ்.இ எக்ஸ்சேஞ்சின் சி.இ.ஓ-வாக கடந்த 2021-ம் ஆண்டிலேயே நியமிக்கப்பட்ட ஆசிஸ் செளஹானின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் அவருடைய பதவிக் காலம் முடிவடைவதால், அவர் என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சுக்கு மாறியிருக்கிறார்.

என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வான ஆசிஸ் செளஹான்... இனி பி.எஸ்.இ-க்கு யார் தலைவர்?

பி.எஸ்.இ எக்ஸ்சேஞ்சின் சி.இ.ஓ-வாக கடந்த 2021-ம் ஆண்டிலேயே நியமிக்கப்பட்ட ஆசிஸ் செளஹானின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் அவருடைய பதவிக் காலம் முடிவடைவதால், அவர் என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சுக்கு மாறியிருக்கிறார்.

Published:Updated:
என்.எஸ்.இ

நம் நாட்டில் உள்ள இரு முக்கியமான பங்குச் சந்தைகளில் ஒன்றான நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் (NSE) நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆசிஸ் செளஹான். இவர் இந்தியாவின் மிகப் பழைமையான மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக இருந்தார்.

ஆசிஸ் செளஹான்
ஆசிஸ் செளஹான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2016-ம் ஆண்டு டிசம்பரில் என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா அதிகார துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்குப் பின் ஏழு மாதங்களுக்குப் பிறகு என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ ஆனார் ஐ.டி.எஃப்.சி வங்கியின் சி.இ.ஓ-வாக இருந்த விக்ரம் லிமாயி. அவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் கடந்த 16-ம் தேதியுடன் முடிந்தது. அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு கிடைக்காத நிலையில், அவர் தொடர்ந்து இந்தப் பதவியில் இருக்கப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், இந்தப் பதவிக்குப் பலரும் விண்ணப்பித்தனர். அவர்களில் ஆசிஸ் செளஹானைத் தேர்வு செய்திருக்கிறது. ஆசிஸ் செளஹான் இந்தப் பதவியில் ஐந்து ஆண்டுக் காலம் இருப்பார். பி.எஸ்.இ எக்ஸ்சேஞ்சின் சி.இகோ-வாக கடந்த 2021-ம் ஆண்டிலேயே நியமிக்கப்பட்டார் ஆசிஸ் செளஹான். முதலில் ஐந்து ஆண்டுகள் நியமிக்கப்பட்டார். பிற்பாடு, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அவருடைய பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. வருகிற நவம்பரில் அவருடைய பதவிக் காலம் முடிவடைவதால், அவர் என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சுக்கு மாறியிருக்கிறார்.

Bombay Stock Exchange (BSE)
Bombay Stock Exchange (BSE)
AP Photo/Rafiq Maqbool

ஆசிஸ் செளஹான், பி.எஸ்.இ-யின் வளர்ச்சிக்கு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தவர். டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் என்.எஸ்.இ ஆரம்பம் தொட்டே முன்னணியில் இருந்தது. இனி பி.எஸ்.இ-யிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகக் கொண்டு வந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று நினைத்த ஆசிஸ், அதற்கான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து, என்.எஸ்.இ-யுடன் போட்டி போட வைத்தார். தவிர, என்.எஸ்.இ தந்த அத்தனை முதலீட்டு வாய்ப்புகளையும் பி.எஸ்.இ-யிலும் கொண்டு வந்தார் ஆசிஸ். இதனால், சில முதலீட்டு வாய்ப்புகள் பி.எஸ்.இ-யில் கிடைக்காது என்கிற நிலை மாறி, என்.எஸ்.இ-யில் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளும் பி.எஸ்.இ-யிலும் கிடைக்கும் என்கிற நிலையை உருவாக்கினார். பி.எஸ்.இ நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் பட்டியல் இட்டதும் இவருடைய சாதனை என்றே சொல்லலாம்.

மிக முக்கியமான காலகட்டத்தில் என்.எஸ்.இ-யின் தலைமைப் பொறுப்பை ஆசிஸ் ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்.எஸ்.இ-யில் பதவி துஷ்பிரயோகம், டேட்டாக்களைக் குறிப்பிட்ட சிலருக்கு முன்கூட்டியே வழங்கியது போன்ற புகார் சித்ரா ராமகிருஷ்ணா மீது எழுந்து அதற்கு இன்னும் முடிவு கிடைத்தபாடில்லை. இந்தப் பிரச்னைகள் சீக்கிரமாக முடிக்க ஆசிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.

தவிர, பி.எஸ்.இ-யின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியல் இட்டதுபோல, என்.எஸ்.இ.யின் பங்குகளையும் பங்குச் சந்தையில் பட்டியல் இட வேண்டும் என்கிற முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. பல்வேறு காரணங்களால் இந்த நடவடிக்கை காலம் தாழ்ந்து கொண்டே போனது. இனி இந்த வேலையைத் துரிதப்படுத்தும் வேலையையும் ஆசிஸ் செய்தாக வேண்டும்!

Stock Market Index
Stock Market Index

பி.எஸ்.இ-யின் செயல்பாடுகளை 10 ஆண்டுகளாகத் தலைமை தாங்கி நடத்தியவர் என்பதால், என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சை அவரால் என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சை இன்னும் சிறப்பாக நடத்த முடியும். அவருடைய அடுத்த ஐந்து ஆண்டு காலத்திலாவது என்.எஸ்.இ. நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால், ஆசிஸ் செளஹான் இப்போது என்.எஸ்.இ-க்கு மாறியிருப்பதால், பி.எஸ்.இ-க்கு அடுத்த யார் தலைவர் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது மாதிரியான எக்ஸ்சேஞ்சுகளுக்குத் தலைமை ஏற்று நடத்துபவர்கள் குறைவான நபர்களே இருக்கிறார்கள். அதனால், என்.எஸ்.இ-யின் தலைவர் பதவி ஆசிஸ் செளஹானுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது பி.எஸ்.இ எக்ஸேஞ்சுக்கு யாரை நியமிப்பது என்கிற கேள்வி பிறந்திருக்கிறது. பி.எஸ்.இ-யின் தலைவர் யார் என்பது இனிவரும் காலங்களில் தெளிவாகும்!