Published:Updated:

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனை... உயரும் கட்டணங்கள்..! சமாளிக்கும் வழிமுறைகள்...

ஏ.டி.எம் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
ஏ.டி.எம் கார்டு

A T M

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனை... உயரும் கட்டணங்கள்..! சமாளிக்கும் வழிமுறைகள்...

A T M

Published:Updated:
ஏ.டி.எம் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
ஏ.டி.எம் கார்டு

ஜனவரி 2022-ம் ஆண்டு 1-ம் தேதி முதல் ஏ.டி.எம் மையங்களில் மேற்கொள்ளப் படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தையும், வருகிற ஆகஸ்ட் மாதத்திலிருந்து வங்கிகளின் இதர பணப் பரிவர்த்தனைக் கட்டணம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு வங்கியின் வாடிக்கை யாளர், அதே வங்கியின் ஏ.டி.எம், வாயிலாக மாதம் ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்-களின் மூலம் மூன்று முறையும் பணப் பரிவர்த்தனை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதுள்ள இலவசப் பரிவர்த்தனைகளுக்குமேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக வருகிற ஜனவரி 1-ம் தேதியிலிருந்து அதிகரிக்கப்படுவ தாகவும், வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைக்கான கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பிற சேவைகளுக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் ஆகஸ்டில் இருந்து உயர்த்தப்படுவ தாக ஆர்.பி.ஐ அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்துவரும் வேளையில், இது மாதிரியான கட்டணங்களை அதிகப் படுத்துவது, மேலும் அவர்களின் நிதி நெருக்கடியை அதிகப்படுத்துவதாக இருக்கும் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏ.டி.எம் பணப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் அதிகரிப்பது குறித்தும், ஏ.டி.எம் கார்டுகளை லாபகரமாக நிர்வகிப்பது எப்படி என்பது குறித்தும் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் விரிவாக எடுத்துச் சொன்னார்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

ஏ.டி.எம் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்...

“ஆரம்ப காலத்தில் ஏ.டி.எம் சேவையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கிய வங்கிகள், தற்போது கட்டணம் வசூலிக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வங்கியில் வைத்து தேவைப்படும் போது ரூ.500, ரூ.1,000 என ஏ.டி.எம்-களிலிருந்து எடுத்து பயன்படுத்தி னார்கள். அதற்காக வங்கிகள் பிடித்த கட்டணம் குறித்து முழுமையான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை.

வங்கிகள் வழங்கும் எட்டு ஏ.டி.எம் இலவசப் பணப் பரிவர்த்தனைக்குள் பணத்தை எடுத்து, அதைக் குடும்பத்தின் நிதிச் செலவு களுக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்தும்போது, தேவையில்லாத கட்டண விரயத்தைத் தடுக்க முடியும். பாமர மக்களில் பெரும்பாலானவர்கள், தனது வங்கிக் கணக்கில் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வெல்லாம் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல.

இந்த கொரோனா காலகட்டத்தில் ஏ.டி.எம் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது மிக மிக நல்லது. முடிந்த வரை ஏ.டி.எம்-களுக்கு போகாமல் இருக்க என்ன வழி என்பதை யோசித்து, அதை நடைமுறைப் படுத்துங்கள்.

சம்பளதாரர்கள், மாதச் சம்பளம் வந்ததும் அந்த மாதத்துக்குத் தேவையான நிதியை மொத்தமாக எடுத்து, அதைச் சரியாகத் திட்டமிடும்போது மாதத் துக்கு ஒருசில பணப் பரிவர்த்தனை போதுமான தாக இருக்கும். அல்லது வாரம் ஒருமுறை எடுத்து பயன்படுத்தினால், ஒரு மாதத்துக்கு நான்கு ஏ.டி.எம் பணப் பரிவர்த்தனைகள் மட்டுமே தேவைப்படும். இதனால் எக்ஸ்ட்ரா கட்டண விரயம் ஏற்படாது. தேவையில்லாத கட்டணச் செலவுகளைத் தவிர்ப்பதுடன், பட்ஜெட் போட்டுச் செலவு செய்யும் நிதிப் பழக்கமும் அதிகரிக்கும்.

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனை... உயரும் கட்டணங்கள்..! சமாளிக்கும் வழிமுறைகள்...

ஒரு ஏ.டி.எம் கார்டு போதும்...

இன்றைய நிலையில், பலரும் பல வங்கிகளில் கணக்குகளை வைத்திருப்ப தால், அனைத்து வங்கிகளிலிருந்தும் ஏ.டி.எம்-களை வாங்கி வைத்திருக் கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது ஒருவரிடம் குறைந்தபட்சம் நான்கு ஏ.டி.எம் கார்டுகளாவது இருக்கின்றன. இத்தனை கார்டுகளை ஒருவர் வைத்திருக்கத் தேவையில்லை. தேவை யில்லாத ஏ.டி.எம் கார்டு கட்டணச் செலவுகளைத்தான் அதிகரிக்கும். அதிகபட்சம் ஒருவரிடம் ஒரு ஏ.டி.எம் கார்டு மற்றும் இரண்டு வங்கிக் கணக்குகள் இருந்தால் போதுமானது. இந்த இரண்டு வங்கிக் கணக்குகளில் ஒன்றை பொதுத் துறை வங்கிகளிலும், மற்றொன்றைத் தனியார் வங்கிகளிலும் வைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டில் எது சம்பளம் அல்லது குடும்ப நிதிகளைச் சேமிக்கும் வங்கிக் கணக்கோ அதற்கு மட்டும் ஏ.டி.எம் கார்டு வைத்திருக்கலாம்.

கேஷ்லெஸ் பரிவர்த்தனைகள்...

பணமாக எடுத்துச் செலவு செய்ய வேண்டிய தேவைகளுக்கு மட்டும் ஒரு ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி, கூகுள் பே, நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற சேவைகளைப் பயன்படுத்தி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ளலாம். இன்றைய நிலையில், தெருவில் இளநீர் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்பவர் முதல், தினமும் வீட்டுக்கு பால் மற்றும் பேப்பர் போடுபவர் என அனைவரிடமும் கூகுள் பே, பேடிஎம் வசதி இருக்கிறது. கேஷ்லெஸ் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கேஷ்லெஸ் பணப் பரிவர்த் தனை முறைகளுக்கு மக்கள் மாறும்போது, ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை உயர்த்துவது பற்றி நாம் துளியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது’’ என்று முடித்தார் லலிதா ஜெயபாலன்.

திட்டமிட்டுச் செயல்பட்டால், தேவையில்லாமல் பணத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்படுவோம்!

20 செக் லீஃப்கள் மட்டுமே இலவசம்..!

இந்த நிதியாண்டின் தொடக்கம் முதலே பல்வேறு வங்கிகள் தங்களது சேவைகளுக்கான விதிமுறைகளை மாற்றியமைத்து வருகின்றன. இந்த நிலையில், ஐ.டி.பி.ஐ வங்கியும் காசோலைப் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை மாற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1-ம் தேதி முதல் குறிப்பிட்ட அளவைத் தாண்டிய காசோலைப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, இனி, ஐ.டி.பி.ஐ வங்கி வாடிக்கையாளர் ஒருவர், ஓராண்டுக்கு அதிகபட்சமாக 20 செக் லீஃப்கள் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும். அதைத் தாண்டினால் லீஃப் ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். ‘சப்கா சேவிங் அக்கவுன்ட் (Sabka Saving Account)’ கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தாது. தற்போதைய நிலையில், ஐ.டி.பி.ஐ வாடிக்கையாளர்கள் கணக்கு திறந்த முதல் ஆண்டில் ஓராண்டுக்கு 60 செக் லீஃப்களை இலவசமாகப் பயன்படுத்தலாம். அதற்கடுத்த வருடங்களில் ஓராண்டுக்கு 50 லீஃப்களை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.