Published:Updated:

ஆருத்ரா கோல்டு நிதி மோசடி விவகாரம்; இயக்குநருக்கு ஜாமீன் மறுப்பு

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

மக்களிடமிருந்து சட்ட விரோதமாக ரூ.2,425 கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததில் மனுதாரருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை எடுத்துக்காட்டி, ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு நிதி மோசடி விவகாரம்; இயக்குநருக்கு ஜாமீன் மறுப்பு

மக்களிடமிருந்து சட்ட விரோதமாக ரூ.2,425 கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததில் மனுதாரருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை எடுத்துக்காட்டி, ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
ஆருத்ரா கோல்டு நிறுவனம்

ஆருத்ரா கோல்டு நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி பல ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து நிதித் திரட்டி மக்களை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட இயக்குநர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நிறுவன இயக்குநர் பட்டாபிராம் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நிதி மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்
ஆருத்ரா கோல்டு நிறுவனம்

`ஆருத்ரா கோல்டு டிரேடிங்’ என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் சமீப ஆண்டுகளாக மாதம்தோறும் 10 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. ஆனால், சொன்னபடி முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தராததால் விரைவிலேயே விசாரணை வலையில் சிக்கியது.

இந்நிறுவனத்தின் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்ததும் பொருளாதார குற்றப்பிரிவு இந்நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. சோதனைகளைத் தொடர்ந்து அலுவலகங்களுக்கு சீல் வைத்ததோடு, நிறுவன இயக்குநர்கள் உட்பட பலரை கைது செய்தது.

இந்த வழக்கு விசாரணையில் இருந்துவரும் நிலையில் இந்நிறுவனத்தின் இயக்குநர் பட்டாபிராம் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்துவரும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது.

ஆருத்ரா நிறுவனம்
ஆருத்ரா நிறுவனம்

ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜி.கருணாநிதி, மக்களிடமிருந்து சட்ட விரோதமாக ரூ.2,425 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செய்ததில் மனுதாரருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை எடுத்துக்காட்டி அதற்கான விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்து உத்தரவிட்டார்.