Published:Updated:

சம வயது, சமமான சம்பள வளர்ச்சி... ஓய்வுக்காலப் பணமும் சமமாகக் கிடைக்குமா?

ஓய்வுக்கால ஊதியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்கால ஊதியம்

ஓய்வுக்கால ஊதியம்

சம வயது, சமமான சம்பள வளர்ச்சி... ஓய்வுக்காலப் பணமும் சமமாகக் கிடைக்குமா?

ஓய்வுக்கால ஊதியம்

Published:Updated:
ஓய்வுக்கால ஊதியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்கால ஊதியம்

நம்மில் பலர், தனக்கான ஓய்வுக்கால நிதித்தேவை எவ்வளவாக இருக்கும் என்ற சிந்தனையிலிருந்து விலகி நிற்கின்றனர். இன்றைய மூத்த குடிமக்களில் ஒரு பகுதியினர் பணப்பற்றாக்குறையால் அனுபவித்துவரும் இடர்ப்பாடுகளைப் பார்த்த பிறகும்கூட ‘இப்போது எதற்கு ஓய்வுக்கால சிந்தனை... பிறகு, பார்த்துக்கொள்ளலாம்’ என்பதே அவர்களின் மனோபாவமாக இருக்கிறது.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

சம்பளதாரர்களில் ஒரு பகுதியினரும் இத்தகைய எண்ணம் உடையவராகவே உள்ளனர். ஆனால், தற்போதைய நாட்டு நிகழ்வுகளைப் பார்க்கும்போது இந்த எண்ணம் சரியா என்று சிந்தனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் தன் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்குக்குக் கொண்டு வரப்போவதாக வந்த செய்தியைத் தொடர்ந்து, “மத்திய அரசு ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம் அமலாக்கம் பெறுமா?’ என்ற கேள்விக்கு, ‘அப்படி ஒரு திட்டம் இல்லை’ என்பதுதான் மத்திய அரசின் பதிலாக உள்ளது.

“பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருவது நாட்டின் வளர்ச்சிக்கு விபரீதமான ஒன்றாக இருக்கும்” என்கிறது பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுக் குறிப்பு. “இக்கட்டான நிதிநிலை காரணமாகப் பழைய பென்ஷன் திட்ட முடிவை எடுக்க இயலாமல் உள்ளது” என்பது தமிழக அரசுத் தரப்பு தகவலாக உள்ளது.

“பென்ஷனுக்காக இ.பி.எஃப் வரம்பான ரூ.15,000 என்பதை நீக்கி ஊழியரின் கடைசி சம்பளத்துக்கே பென்ஷன் கணக்கிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

இவற்றை எல்லாம் கண்டு மனம் தளர வேண்டியதில்லை. ஏனென்றால், காலம் இப்படியே தொடராது. நிலைமைகள் மாறும். அதே சமயம், வரக்கூடிய மாற்றமானது சாதகமாகவும் அமையலாம். எதிர்மறையாகவும் இருக்கலாம் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ‘வரும்... வராது...’ என்கிற எதிர்கால முடிவுகளுக்குக் காத்திராமல், வருமானம் உள்ள காலத்திலேயே நமது சொந்தப் பணத்தில் பாதுகாப்புக்கான வேலியை அமைத்துக் கொண்டுவிட்டால், எதிர்பார்க்கும் பணப் பலன் வந்து சேரும்போது சுற்றுச்சுவர், கட்டிக்கொள்ளலாம்.

சம வயது, சமமான சம்பள வளர்ச்சி... ஓய்வுக்காலப் பணமும் சமமாகக் கிடைக்குமா?

நான்கு வகை ஊழியர்கள்

அந்த வகையில், இன்றைய நிலையில் உள்ள நான்கு வகை சம்பளதாரர்களைப் பற்றிப் பார்க்கலாம். அதாவது, அகமது என்பவர் 31.03.2003 அன்று தமிழகப் பணியில் சேர்த்து விட்டார். இவருக்கு பழைய பென்ஷன் திட்ட பணப்பலன் கிடைக்கும். எனவே, பென்ஷனுக்காக இவருடைய சம்பளத்தில் பிடித்தம் இருக்காது.

பிரிட்டோ என்பவர் 31.03.2003 அன்று அரசு கார்ப்பரேஷன் ஒன்றில் பணியில் இணைந்தார்.இவருக்கு இ.பி.எஃப் எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதித்திட்டம் உரியதாக இருக்கும். இந்தத் திட்டத்தின்கீழ் ஓய்வுக்கால பணப்பலனுக்காக இவருடைய சம்பளத்தில் 12% மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும். நிறுவனமும் அதே அளவு சந்தா செலுத்தும்.

சிவபாலன் என்பவர் 1.04.2003 அன்று தமிழக அரசு ஊழியரானார். இவருக்கு, சி.பி.எஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உரியதாக இருக்கும். இதற்காக இவருடைய மாதச் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும். அரசும் அதே அளவு பங்கைச் செலுத்தும்.

நான்காவதாக, தர்மராஜா என்பவர் 1.1.2004 அன்று மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். இவருக்கு என்.பி.எஸ் எனப்படும் நேஷனல் பென்ஷன் திட்டம் உரியதாக இருக்கும். இந்தத் திட்டத்தின்கீழ் இவருடைய சம்பளத்தில் மாதம் 10% பிடித்தம் செய்யப்படும். அரசு தனது பங்களிப்பாக 1.1.2004 முதல் 10% தொகையைச் செலுத்தி வந்தது. 1.4.2019 முதல் அரசின் பங்களிப்பு 14 சதவிகிதமாக உயர்ந்து நிற்கிறது.

சம வயது, ஒரே அளவில் சம்பளம்...

பணியில் சேர்ந்தபோது இவர்கள் அனைவருக்கும் சம வயதுதான். அதாவது, 30 வயது. அனைவருக்கும் ஆரம்ப சம்பளம் ரூ.10,000. அனைவருடைய சம்பளமும், ஒரே அளவாக ஆண்டுக்கு ஆண்டு (Year one Year) 10% வளர்ச்சி பெறுகிறது. இவர்கள் அனைவரும் 2033-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள்.

ஓய்வுக்கால பணப்பலன்

சம வயதில், சம சம்பளத்தில், சமமான சம்பள வளர்ச்சியில் பணியில் சேர்ந்த இந்த நான்கு பேரின் ஓய்வுக்கால பணப்பலன் சமமாக இருக்குமா? இருக்காது என்பதற்கு இப்போதைய அளவுகோள்களின்படி அட்டவணை காண்க.

சம வயது, சமமான சம்பள வளர்ச்சி... ஓய்வுக்காலப் பணமும் சமமாகக் கிடைக்குமா?

அட்டவணை விவரம்

* கடைசி சம்பளம் 1,74,500 என்பதில் அடிப்படை சம்பளம் 60% அகவிலைப்படி 30%

இதர படிகள் 10% (1,04,700 + 52,350 + 17,450 = 1,74,500) இந்த சம்பளப் பகுப்புக்குக் காரணம்,

2026-ல் எதிர்பார்க்கப்படும் 8-வது சம்பளக் கமிஷன். எனவே, உத்தேசமான, யூக அடிப்படையில் அடிப்படைச் சம்பளம் முதலானவை பென்ஷன், பணிக்கொடை, கம்யூடேஷன் கணக்கீட்டுக்காக இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, வித்தியாசம் ஏற்படலாம்.

* மத்திய அரசில் அதிகபட்ச விடுப்பு சம்பளம் 10 மாதம். தமிழக அரசில் 11 மாத சம்பளம்.

* மத்திய அரசில் கம்யூடேஷன் என்பது அடிப்படை பென்ஷனில் 40%, தமிழக அரசில் 33.33%.

* பென்ஷன் என்பது அரசு தனது தொகுப்பு நிதியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்குவது. அன்யூட்டி (Annuity) என்பது ஊழியரின் என்.பி.எஸ். முதலீடுக்கு அவ்வப்போது நிலவும் வட்டி வருமான அடிப்படையில் மாதம்தோறும் வழங்குவது.

* என்.பி.எஸ் மொத்த முதிர்வுத் தொகையில் 60% ரொக்கமாகத் தரப்படுகிறது. அன்யூட்டி வழங்குவதற்காக 40% தொகை என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடாக உள்ளது. அட்ட வணையில் உள்ள அன்யூட்டி தொகை 40 சதவிகிதத்துக்கு 8% வட்டியின்படி கணக்கிடப் பட்டது. மொத்தத் தொகை யையும்கூட அன்யூட்டிக்கு முதலீடு செய்யலாம்.

* இதேபோல், சி.பி.எஸ், இ.பி.எஃப் தாரர்களும் தங்களுடைய முதிர்வுத் தொகை (100%) முழுவதையும் 10% வருமானம் (Return) கிடைக் கும் திட்டத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் மாத வருமானம் அட்டவணையில் உள்ளது. ஊழியரின் விருப்பத் தைப் பொறுத்து இந்தத் தொகையைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இது தொடர்பாக ஒரு நல்ல நிதி ஆலோசகரை அணுகி செயல்படுவது அவசியம்.

* சி.பி.எஸ், இ.பி.எஃப் ஊழியர் கள் இப்போதைய தன்னுடைய சம்பளத்தில் 20% அளவுக்கு சந்தா செலுத்தி என்.பி.எஸ் திட்டத்தில் பங்கேற்கலாம்! (அரசுப் பங்களிப்பு கிடைக்காது).

* என்.பி.எஸ் திட்டத்தில் தற்போதைய நிலையில், 10% அளவுக்கு வருமானம் கிடைக் கிறது. இது வட்டி வருமானம் அல்ல. சந்தை முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம். இதே வருமானம்தான் முதிர்வுக்குக் கணக்கிடப்பட்டுள்ளது.

* இ.பி.எஃப் வட்டியானது 2003 முதல் தற்போது வரை அதிகபட்சம் 9.5% முதல் குறைந்தபட்சம் 8.5% வரை வட்டி தந்துள்ளது. தற்போது 8.1% எனக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, முதிர்வுக் காலம் வரை 8.5% வட்டி கணக்கிடப் பட்டுள்ளது.

* சி.பி.எஸ். வட்டி விகிதம் என்பது ஜி.பி.எஃப்-க்கான வட்டி விகித அடிப்படையில் அமைகிறது. இது 2003 முதல் இன்று வரை அதிக பட்சம் 8.80% முதல் குறைந்தபட்சம் 7.1% வரை உள்ளது. எனவே, இதற்கான வட்டி விகிதம் 8% என்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

* பணிக்கொடை, கம்யூடேசன் வரம்புகள் அப்போதைய நிலையில் மாறுபடக்கூடும்.

அட்டவணையில் கண்ட கணக்கீட்டின்படி தன் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் எவ்வளவு தேவை என்பதைக் கணக்கிடவும் அதற்கான முதலீட்டை இப்போதே தொடங்கவும் ஒரு நல்ல நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறலாம். பழைய பென்ஷன் அமலாக்கம் பெற்றால், மேலும் ஆனந்தமாக ஓய்வுக்காலத்தைக் கழிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism