Published:Updated:

உலகப் பெரும் பணக்காரர்களையே கலங்கடித்த பங்குச்சந்தை; ஒரே நாளில் இழந்த தொகை எவ்வளவு தெரியுமா?

உலகப் பெரும் பணக்காரர்கள்

பணவீக்கம் 8.1 சதவிகிதமாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், கணித்திருந்த அளவை விடவும் அதிகமாக 8.3 சதவிகிதமாக இருப்பதால் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது.

உலகப் பெரும் பணக்காரர்களையே கலங்கடித்த பங்குச்சந்தை; ஒரே நாளில் இழந்த தொகை எவ்வளவு தெரியுமா?

பணவீக்கம் 8.1 சதவிகிதமாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், கணித்திருந்த அளவை விடவும் அதிகமாக 8.3 சதவிகிதமாக இருப்பதால் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது.

Published:Updated:
உலகப் பெரும் பணக்காரர்கள்

உலகின் முன்னணி பெரும்பணக்காரர்கள் பட்டியல் இருக்கும் எலான் மஸ்க். ஜெஃப் பெசோஸ், பில்கேட்ஸ், மார்க் சூகர்பர்க், வாரன் பஃபெட் ஆகிய பலரையும் பங்குச் சந்தை கலங்கடித்த சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் பணவீக்க உயர்வு குறித்த செய்திதான்.

அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கடந்த சில மாதங்களாகவே சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

பங்குச் சந்தை சரிவு
பங்குச் சந்தை சரிவு
share market down

தொடர்ந்து பொருட்களின் விலை உயர்வு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் உயர்த்தியது. மேலும் பணவீக்கம் தொடர்ந்து உயர்வில் இருக்கும் என்பதால் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று ஃபெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பாவெல் கூறியிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில் அமெரிக்காவின் பணவீக்கம் 8.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 8.1 சதவிகிதமாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், கணித்திருந்த அளவை விடவும் அதிகமாக 8.3 சதவிகிதமாக இருப்பதால் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது.

பணவீக்கம்
பணவீக்கம்

அமெரிக்க பங்குச் சந்தைகளான எஸ் அண்ட் பி 4.32 சதவிகிதமும் நாஸ்டாக் 5 சதவிகிதம் வரையிலும் வீழ்ச்சி கண்டன. பங்குச் சந்தையில் உண்டான கடும் சரிவால் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை சரிந்து வர்த்தகமாயின.

முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், டெஸ்லா, அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அனைத்து பங்குகளும் விலை குறைந்ததால் அந்த நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்களின் பங்கு மதிப்புகள் கடுமையாக சரிந்தது.

அமேசான் நிறுவனத்தின் சொந்தக்காரர் ஜெஃப் பெசோஸுக்கு இதனால் ரூ.80 ஆயிரம் கோடியும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கு ரூ. 70 ஆயிரம் கோடியும் ஒரே நாளில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மார்க் சூகர்பர்க், லாரி பேஜ், செர்கி பிரின், ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் பங்கு மதிப்பும் கிட்டதட்ட 4 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவு கண்டுள்ளது.

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

அதேசமயம் வாரன் பஃபெட் 3.4 பில்லியன் டாலரும், பில்கேட்ஸ் 2.8 பில்லியன் டாலரும் இழந்துள்ளனர். அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீழ்ச்சி இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. காலை வர்த்தகம் தொடங்கியதும் சரசரவென இறக்கம் கண்ட பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1100 புள்ளிகள் அளவுக்கு இறக்கம் கண்டது. நிஃப்டி 180 புள்ளிகள் இறக்கம் கண்டது. அதன்பிறகு மெல்ல இறக்கத்தின் வேகம் குறைந்து மீண்டு வந்தது.

ஆனால் காலை கண்ட இறக்கத்தினால் முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.