Published:Updated:

வீட்டுக் கடன் அளவும், இரண்டு வகை வட்டி விகிதமும்... அடிப்படைப் புரிதல்கள்!

கடன் தொகையையும் கடனுக்கான வட்டியையும் கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாகவும் ஆகலாம் என்பதால், ஒரே ஒரு சதவிகித வட்டி மாற்றம் கூட லட்சக்கணக்கான ரூபாயைக் கூடுதலாகச் செலுத்த வைத்துவிடும்.

கடன் அளவு:

ஒருவர் பெறத்தக்க வீட்டுக் கடன் தொகை என்பது, கடன் பெறுபவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியைப் பொறுத்தது. திருப்பிச் செலுத்தும் தகுதி என்பது மொத்த வருமானத்தின் பேரிலும் தீர்மானிக்கப்படலாம். அல்லது நிகர வருமானத்தில் செலவு போக மிஞ்சக்கூடிய தொகையின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படலாம்.

இத்துடன் மனைவி / கணவரின் வருமானம், சொத்து, கடன் பொறுப்பு மற்றும் வருமானத்தின் நிரந்தரத்தன்மை ஆகியவையும் தகுதியான கடன் தொகையைத் தீர்மானிக்கும் காரணிகள். திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் வட்டி விகிதம் முதலானவையும் கடன் தொகையைக் கணக்கிட அடிப்படையானவை.

வட்டி விகிதம் எவ்வளவு?

வீட்டுக்கான `கடன் தொகை' என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆனால், கடனுக்கான வட்டி நிச்சயமானதோ, நிலையானதோ அல்ல. மாற்றத்துக்கு உட்படக் கூடியது. எனவே, இயன்ற மட்டும் வட்டி குறித்த சந்தேகங்களைத் திரும்பத் திரும்ப கடன் தரும் வங்கியிடம் கேட்டுத் தெளிவு பெறுவது அவசியமாகிறது. கடன் தொகையையும் கடனுக்கான வட்டியையும் கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாகவும் ஆகலாம் என்பதால், ஒரே ஒரு சதவிகித வட்டி மாற்றம் கூட லட்சக்கணக்கான ரூபாயைக் கூடுதலாகச் செலுத்த வைத்துவிடும்.

இரண்டு வகை வட்டி விகிதம்:

* மாறுபடும் (Floating) வட்டி விகிதம்.

* நிலையான (Fixed) வட்டி விகிதம் என இரண்டு வகை உள்ளன.

இதில் மாறுபடும் வட்டி என்பது ஒவ்வொரு காலாண்டுக்கும் மாறுபடக் கூடியது. அதாவது, பொருளாதார நிலைக்கேற்ப இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் அடிப்படை வட்டி (Base Rate) விகிதத்தின்படி கணக்கிடப்படுவது.

நிலையான வட்டி விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலோ, ஒட்டுமொத்த கடன் முடியும் வரையிலோ மாறுதல் இன்றி ஒரே அளவாகத் தொடர்வது. இது தொடர்பாகத்தான் கடன் வாங்குபவர் தூண்டித் துருவி வங்கியாளரைக் கேள்வி கேட்டு விவரம் பெற வேண்டும். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குத்தான் நிலையான வட்டி எனில், காலவரையறை எத்தனை ஆண்டு வரை, அதன்பிறகு வட்டி மறு நிர்ணயம் (Reset) செய்யும் விதிமுறை என்ன என்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.

- வீடு வாங்குவதற்கு இது சரியான நேரம் என்பது இந்த முதலீட்டில் அனுபவசாலிகளின் கருத்து.

காரணம், கடந்த சில ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருந்த ரியல் எஸ்டேட் துறை, தற்போது கொரோனா காரணமாக இன்னும் தொய்வடைந்துள்ளது. இன்றைக்கு வீடு வாங்க நினைப்பவர்கள் தாராளமாக விலையைக் குறைத்துக் கேட்க முடியும். அந்த விலை விற்பவருக்கு நஷ்டம் தராதபோது, அவரும் வீட்டை விற்கவே விரும்புவார்.

வீட்டுக் கடன் (மாதிரி படம்)
வீட்டுக் கடன் (மாதிரி படம்)

மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டி என்கிறபோது, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வட்டி விகிதம் தற்போது இருப்பதால், வீட்டுக் கடன் மூலம் பலரும் வீடு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் ஒருபக்கமிருக்க, வீட்டுக் கடன் பெற நினைப்பவர்கள் கஷ்டப்படாமல் அதைப் பெற சில வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிகளின்படி ஒருவர் நடப்பாரேயானால் பணவிரயம், கால விரயம், மன உளைச்சலைத் தவிர்த்து சுலபமாக வீட்டுக் கடனைப் பெற முடியும்.

அந்த வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்று விவரிக்கும் நாணயம் விகடன் இதழின் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/32DFonD

சுலபமாக வாங்கலாம் வீட்டுக் கடன்! - கவனிக்க வேண்டிய 15 அம்சங்கள்! https://bit.ly/32DFonD

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு