Published:Updated:

4000 பேரை வீட்டுக்கு அனுப்பும் பைஜூஸ்... என்ன நடக்கிறது?

பைஜூஸ்

வீட்டிலிருந்தபடி வேலை என்பது முடிவுக்கு வந்து நேரடியாகப் பணி செய்யும் இடத்துக்கு வர வேண்டும் என்று நிறுவனம் அறிவுறுத்தியதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களுடைய சொந்த ஊரிலிருந்து வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து பணியாற்றி வந்தனர்...

இந்தியக் கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தப் போகிறது என்று கொண்டாடப்பட்ட பைஜூஸ் நிறுவனம் சமீப காலங்களில் தொடர்ந்து சர்ச்சையில் அடிப்பட்டுவருகிறது.

ஆன்லைன் வழி கற்றல் முறையிலான கல்வி கற்பிக்கும் பிசினஸை ஸ்டார்ட் அப்-பாக தொடங்கி குறுகிய காலத்திலேயே யுனிகார்ன் நிறுவனமாக மாறியது பைஜூஸ். பைஜூஸின் வளர்ச்சியைத் தொடர்ந்து அதே பாணியில் பல புதிய நிறுவனங்கள் ஆன்லைன் வழி கற்றலைத் தொடங்கின.

4000 பேரை வீட்டுக்கு அனுப்பும் பைஜூஸ்... என்ன நடக்கிறது?

இதுபோன்ற நிறுவனங்களில் பணி செய்ய ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறியவிலாளர்கள் ஆர்வமுடன் சேர ஆரம்பித்தனர். கொரோனா காலத்தில் ஆன்லைன் வழி கற்றல் தொழில் மேலும் வேகமெடுக்க ஆரம்பித்தது. இருந்த இடத்திலிருந்தே கல்வி கற்பிக்க முடியும் என்பதால் பலரும் இந்த நிறுவனங்களில் பணியில் சேர்ந்தனர்.

பைஜூஸ் நிறுவனத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் நிறுவனத்தின் நிதி நிலையை லாபகரமானதாக மாற்றுவதற்காக 5 சதவிகிதம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்போவதாக சமீபத்தில் நிறுவனர் ரவீந்திரன் அறிவித்தார். அறிவிப்பைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்வதற்கான வேலைகளையும் தொடங்கியிருக்கிறது.

இதற்கு ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு நிலவிவருகிறது. சிலர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கவும் தயாராகியுள்ளனர்.

ஆன்லைன் கல்வி
ஆன்லைன் கல்வி

இடையில் வீட்டிலிருந்தபடி வேலை என்பது முடிவுக்கு வந்து நேரடியாகப் பணி செய்யும் இடத்துக்கு வர வேண்டும் என்று நிறுவனம் அறிவுறுத்தியதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களுடைய சொந்த ஊரிலிருந்து வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து பணியாற்றிவந்தனர். இந்நிலையில் வேலையிலிருந்து பலரை நீக்கம் செய்ய உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளதால், பல ஊழியர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.