Published:Updated:

கிராஜுவிட்டி பலன் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

பணிக் கொடை
பிரீமியம் ஸ்டோரி
பணிக் கொடை

கிராஜுவிட்டி

கிராஜுவிட்டி பலன் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

கிராஜுவிட்டி

Published:Updated:
பணிக் கொடை
பிரீமியம் ஸ்டோரி
பணிக் கொடை

மாதச் சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்குப் பணிக்கொடை (Gratuity) என்கிற கிராஜுவிட்டி தொகை பணி ஓய்வின்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஆர்.ஜெகதீஷ் 
ஆடிட்டர், தேனி
ஆர்.ஜெகதீஷ் ஆடிட்டர், தேனி

அடிப்படைத் தகுதி...

பத்து அல்லது அதற்கு மேல் பணியாளர் களைக் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் பணி செய்தால், இந்தப் பணிக்கொடை பலன் பெறத் தகுதியானவர்கள்.

இந்த பணிக்கொடை என்பது சம்பளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. பணிக்கொடைச் சட்டம் 1972-ன் (Payment of Gratuity Act 1972) கீழ், பணிக்கொடை என்பது பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தின்போது மொத்தத் தொகையாக வழங்கப்படும் ‘வரையறுக்கப்பட்ட நன்மை’ (‘Defined Benefit’) ஆகும். இது ஊழியர்களின் சேவைகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் பரிசு போன்றது.

பணிக்கொடை என்பது ஐந்து ஆண்டு களுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் பணி செய்த ஒருவர் ஓய்வு பெற்றாலோ, பணி விலகினாலோ, அதுவரை எவ்வளவு காலம் பணி செய்தார் என்பதை வைத்து கணக்கிட்டு வழங்கப்படும்.

பணிக்கொடை எதன் அடிப்படையில் கணக்கிடப்படும்?

பணியாளர் கடைசியாகப் பெற்ற சம்பளத் தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப் படி போன்ற இரண்டையும் இந்தப் பணிக் கொடையைக் கணக்கிட கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஓராண்டு பணிக்கு 15 நாள் சம்பளம் என்பதுதான் பணிக்கொடை கணக்கிடுவதற்கான கால அளவாகும்.

பெண் ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பதும், தற்போதைய விதிமுறைகளின்படி, 26 வாரங்கள் வரையிலான விடுப்பு எனில், பணியில் இருந்த தாகக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கான பணிக்கொடை கணக்கிடப் படும் என்பது முக்கியமான விஷயம் ஆகும்.

கிராஜுவிட்டி பலன் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

வருமான வரி உச்ச வரம்பு...

வருமான வரிச் சலுகை கிடைக்கும் கிராஜுவிட்டி தொகையின் உச்சவரம்பு அண்மையில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி, இந்த மாற்றங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், நீண்ட காலம் பணி செய்து ஓய்வு பெறும் ஒரு நபர், அந்த நேரத்தில் பெறும் ஓய்வுகாலப் பலன்களில் பணிக்கொடையின்கீழ் பெறும் ரூ.20 லட்சத்தை வரி எதுவும் இல்லாமல் பெறலாம்.

பணியாளர் பணிக் காலத்தில் இறக்கும்பட்சத்தில் இந்த ஐந்து வருட சேவைக் காலம் எல்லாம் கிடையாது. அவர் வேலைக்குச் சேர்ந்து எப்போது இறந்தாலும் பணிக் கொடை வழங்கப்படும். இந்தத் தொகை அவரின் சட்டப் படியான வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

பணிபுரியும் காலத்தில் பணிக் கொடை பெறும்பட்சத்தில் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அந்தத் தொகைக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. முழுத் தொகைக்கும் வரி கட்ட வேண்டி வரும்.

மூன்று விதமாக வழங்கப்படும் பணிக் கொடை...

இறப்பின்போது வாரிசுகள் பெறும் கிராஜுவிட்டி தொகை மற்றும் பணி ஓய்வின்போது கிராஜுவிட்டி தொகை மூன்று விதமாக வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், கிராஜுவிட்டி சட்டம் 1972-ன்படி கிராஜுவிட்டி பலன் பெறுபவர்கள், இதர பணியாளர்கள் என மூன்று விதமாக கிராஜுவிட்டி வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள்:

மத்திய மற்றும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பாதுகாப்புச் சேவைகள் (Defence Services) பணியாளர்களால் பெறப்படும் பணிக் கொடைத் தொகைக்கு வருமான வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கிராஜுவிட்டி சட்டம் 1972-ன்படி, கிராஜுவிட்டி பலன் பெறுபவர்கள், கீழ்க்கண்ட மூன்று நிலைகளில் எது குறைவோ, அந்தத் தொகைக்கு வரி இல்லை. அதற்கு மேற்படும் தொகைக்கு வரி கட்ட வேண்டும்.

1. சேவை முடிக்கப்பட்ட ஆண்டு களுக்கு, ஆண்டுக்கு 15 நாள்கள் சம்பளம் மற்றும் வருடத்தின் ஆறு மாதங்களுக்கு மேலான காலத்தின் ஒரு பகுதி; 2. ரூ.20 லட்சம்; 3. பெறப்பட்ட பணிக்கொடை.

இங்கே சம்பளம் என்பது அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்ந்ததாகும். கடைசி யாக வாங்கிய மாதச் சம்பளம் கிராஜுவிட்டி கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும். ஒரு மாதத்தில் அதிகபட்சம் பணிபுரிந்திருக்கும் 26 நாள்களால் மாதச் சம்பளம் வகுக்கப்பட்டு, அந்தத் தொகை எடுத்துக்கொள்ளப்படும்.

உதாரணமாக, ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சம்பளம் மாதத் துக்கு ரூ.30,000 எனில், கிராஜு விட்டி கணக்கிட ரூ.26,000 எடுத்துக் கொள்ளப்படும்.

கிராஜுவிட்டி சட்டத்தில் வராத இதர பணியாளர்கள்...

கீழ்க்கண்ட மூன்று நிலைகளில் எது குறைவோ அந்தத் தொகைக்கு வரி இல்லை. அதற்கு மேற்படும் தொகைக்கு வரி கட்ட வேண்டும்.

1. பூர்த்தி செய்யப்பட்ட சேவையின் ஒவ்வொரு வருடத் துக்கும் 15 நாள் சம்பளம். (கடந்த 10 மாதங்களுக்கான சராசரி சம்பளத்தின் அடிப்படையில் இந்த 15 நாள் சம்பளம் கணக்கிடப்படு கிறது) அல்லது; 2. ரூ.20 லட்சம்; 3. பெறப்பட்ட பணிக்கொடை மேலே குறிப்பிட்டுள்ள பிரிவு 1-ன் நோக்கத்துக்கான சம்பளம், அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி (வழங்கப்பட்டால்) மற்றும் கமிஷன் ஆகியவை பணியாளரால் நிறுவனத்துக்குக் கிடைத்த விற்று முதலின் (Turnover) சதவிகிதமாக இருக்கும்.

பணிக்காலம் கணக்கிடப்படும் முறை...

பணி ஓய்வு பெற்றால் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேல் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக் காலம் மட்டுமே பணிக்கொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால், 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ளப்படும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக் காலமாக கணக்கில் கொள்ளப்படும்.

கிராஜுவிட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

ஒருவரின் பணிக் கொடை என்பது அவருக்கு இறுதியாக வழங்கப்பட்ட சம்பளம் (Last Pay Drawn) மற்றும் பணிபுரிந்த காலம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொறுத்தவரையில் அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் கொண்டு பணிக் கொடை கணக்கிடப்படுகிறது

பணியாளர் ஒருவர் கிராஜுவிட்டி சட்டம் 1972-ன் கீழ் வருகிறார் எனில், இவர் 31.07.2022 அன்று பணி ஓய்வு பெறும்போது அவரது மாதச் சம்பளம் ரூ.42,000 (அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி). இவரின் பணிக்காலம் 30 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள். இவருக்கு எப்படி கிராஜுவிட்டி கணக்கிடப்படுகிறது என்பதை அட்டவணையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

கிராஜுவிட்டி பலன் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

கிராஜுவிட்டி கணக்கிடுவதற்கான இந்திய வருமான வரித் துறையின் இணைப்பு: https://www.incometaxindia.gov.in/Pages/tools/Gratuity-calculator.aspx

பணிக்கொடை கவனிக்க வேண்டியவை..!

* மொத்தப் பணி செய்த ஆண்டுக்கு 15 நாள்கள் ஊதியம் வீதம், குறைந்தபட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிகபட்சமாக பதினாறரை (16½) மாத ஊதியமும் பணிக் கொடையாக வழங்கப்படும்.

* ஏதாவது பிரச்னை, மோசடி காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.

* பணியாளர் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதாவது இருந்தால் அது பணிக் கொடையிலிருந்து பிடிக்கப்பட்டு மீதி வழங்கப்படும்.

* பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியம் பணிக் கொடையாக வழங்கப்படும். ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்குமேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு 15 நாள் சம்பளம் வீதம் கணக்கிட்டு பணிக் கொடை வழங்கப்படும்.