Published:Updated:

``செப்டம்பருக்குள் உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்..!” - `கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

கவின்கேர் ரங்கநாதன்
News
கவின்கேர் ரங்கநாதன்

ஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸரைப் போலவே, வருகிற மே மாத இறுதியில் 50 பைசாவுக்கும் ஹேண்ட் சானிடைஸர் ஷாசேக்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

கொரோனாவின் பிடியில் இந்தியா சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு காரணமாகப் பெரும்பாலான தொழில் நிறுவனங்களும் விற்பனையகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்த நேரத்தில் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்? இனி வரும் நாள்களில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகுமா? ஏற்றமதித் தொழில்கள் ஏற்றம் பெறுமா? எந்தெந்தத் துறைகளில் வேலையிழப்புகள் இருக்கும் என்கிற பல கேள்விகளுடன், தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான ’கவின்கேர்’ குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதனிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``பெரும்பாலான நிறுவனங்கள் `வொர்க் ஃப்ரம் ஹோம்' உத்தியைக் கையில் எடுத்திருக்கின்றன. இதுபற்றி உங்களுடைய கருத்து..?”

"பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு பழக்கப்படுத்தாத நிறுவனங்கள்கூட, இன்று 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வழியைக் கையிலெடுத்திருக்கின்றன. இது நல்ல விஷயம்தாம். அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ததைவிட, வீட்டிலிருந்து பணியாளர்கள் வேலை செய்வதால்,' புராடக்டிவிட்டி' அதிகரித்திருப்பதாகவே பெரும்பாலான நிறுவனங்கள் சொல்கின்றன. இதனால் இனி வரும் காலங்களிலும், இந்த முறையைத் தொடரலாம் என்பது அவர்களின் ஐடியாவாக இருக்கிறது. 

எங்களுடைய நிறுவனத்திலும் பலர் தற்போது வீட்டிலிருந்துதான் வேலை செய்துவருகிறார்கள். அவர்களின் அன்றாட வேலைகளை உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவார்கள். வீட்டில் இருக்கும்  நேரத்தைப் பயன்படுத்தி, வேலை சார்ந்த நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஊக்கமளித்துவருகிறோம்.

இந்த 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையானது, அனைத்து துறைகளுக்கும் பொருந்துமா என்றால், இல்லை என்பதுதான் என்னுடைய பதில். ரகசியமான விஷயங்களை இந்த முறையின் மூலம் பத்திரமாக வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான். அப்படியான துறைகள், தங்களின் தொழில்நுட்ப பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்வது நல்லது.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

”கொரோனாவுக்குப் பிறகு வேலை வாய்ப்பு, வேலையிழப்பு எப்படி இருக்கும்?”

"உலகம் இப்படி ஒரு மோசமான சூழலை இதற்கு முன்பு சந்தித்த கதைகளை சொல்லித்தான் கெள்விப்பட்டிருக்கிறோமே தவிர, நாம் பார்த்தது இல்லை. அதனால், 'கொடிய அரக்கனிடம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்' என்பதை உணர்ந்தவர்களாக, ஒரு மன அழுத்தத்துடன், பதற்றத்துடன் நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

இந்தியா உட்பட, சர்வதேச  நாடுகளின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியிருப்பது போல, வேலை வாய்ப்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு, வேலை இழப்பு கண்டிப்பாக ஏற்படும் என்பதால், புதிய வேலைவாய்ப்புகள் வருவது கடினமான ஒன்றாக இருக்கும். ஒருவேளை புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டாலும் சற்று குறைந்த அளவிலேயே இருக்கும். 

job
job
pixabay

ஊரடங்கிலிருந்து மக்கள் வெளியில் வந்தாலும், 'சமூக விலகல்' என்பது குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங்கள் வரை கட்டாயம் இருக்கும். அதனால் விமானத் துறை, ஹோட்டல் மற்றும் உணவுத்துறை, சுற்றுலாத்துறை, பொழுதுபோக்கு போன்றவை  இன்னும் சில காலங்களுக்கு இப்படியே நீடிக்கும். அதனால் இந்தத் துறை சார்ந்த வேலையிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. 

இன்றைய நிலையில் மக்களுக்கு 'செல்ஃப் ஹைஜீன்' மேம்பட்டிருப்பதால், ஹேண்ட் சானிடைஸர், ஹேண்ட்வாஷ் லிக்விட் மற்றும் சோப்பு, வீட்டை சுத்தம்செய்யப் பயன்படும் உபகரணங்கள், கெமிக்கல்கள் என அனைத்துப் பொருள்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. இது சார்ந்த தொழில்களும் வேலை வாய்ப்புகளும் மேம்படும்."

உலகப் பொருளாதாரம் செப்டம்பருக்குப் பிறகுதான் மெல்ல மீண்டுவரத் தொடங்கும். இதனால் இந்த வருடம் தொழில்துறைக்கு சற்று கடினமானதுதான்.
சி.கே.ரங்கநாதன்

”இந்த இக்கட்டான சூழ்நிலையில், தொழில்முனைவோர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அவர்களுக்கு உங்களுடைய ஆறுதலும், அட்வைஸூம்...”

"இப்போதுள்ள சூழலில், தொழில் முனைவோர்கள் தொழில்துறையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களையும், புதிய தொழில் உத்திகளையும் இந்த நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். புதிய தொழில் வாய்ப்புகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். சமீபகாலமாக, இணையம் மூலம், அப்ளிகேஷன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்கள் வளர்ச்சியடைந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி, உங்கள் பிசினஸ் தொடர்பான அறிவை அப்டேட் மற்றும் அப்கிரேடு செய்துகொள்ளுங்கள்.

CKR
CKR

கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைத்து வாடிக்கையாளர்களும் பொருளாதாரரீதியான நெருக்கடியைச் சந்திப்பார்கள் என்பதால், செலவுகளைக் குறைக்கவே விரும்புவார்கள். உலகப் பொருளாதாரம் செப்டம்பருக்குப் பிறகுதான் மெல்ல மீண்டுவரத் தொடங்கும். அதனால், அனைத்து தொழில்முனைவோரும் பொருளாதார ரீதியாக இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதே சமயம், அடுத்த 2021-2022-ம் ஆண்டில், தொழில்துறைகள் அனைத்தும் முழுமையாக மீள வாய்ப்பிருக்கிறது. நம்பிக்கையாக இருப்போம்."

மத்திய அரசாங்கம் இதை நல்ல முறையில் அணுகி, ஏற்றுமதி வாய்ப்புகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
சி.கே.ரங்கநாதன்

”கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவின் ஏற்றுமதி குறையுமா, அதிகரிக்குமா?”

‘‘இப்போது, உலகம் முழுக்கவே கொரோனா காரணமாக சீனா மீது ஒருவிதமான கோபம் இருக்கிறது; கொஞ்சம் பயமும் இருக்கிறது. எனவே, சீனாவின் ஏற்றுமதி வாய்ப்புகள் கொஞ்சம் குறையலாம். கடந்த சில வாரங்களாக இந்தியாவிலிருந்து இந்த இந்தப் பொருள்கள் கிடைக்குமா எனப் பல நாடுகள் விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஏற்றுமதி
ஏற்றுமதி

சீனாவிலிருந்து அவர்கள் பொருட்களை வாங்கத் தயாராக இல்லை. மத்திய அரசாங்கம் இதை நல்ல முறையில் அணுகி, ஏற்றுமதி வாய்ப்புகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்." அதனால்தான் அவர்களின் கவனம் இப்போது இந்தியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது. பல சலுகைகளை இந்திய அரசாங்கம் வழங்கிவருவதும், இந்திய ஏற்றுமதி அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாகும். மத்திய அரசாங்கம் இதை நல்ல முறையில் அணுகி, ஏற்றுமதி வாய்ப்புகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்."

இந்த நிலை இப்படியே தொடராது. படிப்படியாக இந்தச் சூழலில் இருந்து மக்கள் வெளியே வருவார்கள்.
சி.கே.ரங்கநாதன்

”கொரோனாவுக்குப் பிறகு வாடிக்கையாளர்களின் செலவுசெய்யும் மனநிலை மாறுமா?”

‘‘நிச்சயமாக மிகப்பெரிய அளவில் மாறும். இதுவரை இரண்டு ரூபாய் ஷாம்பூ வாங்கியவர்கள், இனி ஒரு ரூபாய் ஷாம்பூ கிடைக்குமா என்று தேடுவார்கள். வருமானம் குறைவது, வேலை இழப்பு போன்ற நிகழ்வுகளால் மக்கள் செலவழிப்பது குறையும். இதன் பாதிப்பு எல்லாப் பொருள்களின் மீதும் தெரியும். ஆனால், இந்த நிலை இப்படியே தொடராது. படிப்படியாக இந்தச் சூழலில் இருந்து மக்கள் வெளியே வருவார்கள். அந்த நேரத்தில், இதுவரை இருந்த தேவையைவிட, அளவுக்கு அதிகமான தேவை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தொழில்முனைவோர்கள் இப்போது விட்டதை, அப்போது சம்பாதித்துக்கொள்ளலாம். கவலை வேண்டாம்."

”கொரோனா காலத்தில் உங்கள் பிசினஸில் நீங்கள் செய்த மாற்றங்கள் என்னென்ன?”

‘‘கொரோனா நெருக்கடி ஏற்படத் தொடங்கியபோதே புதிய பிசினஸ் வாய்ப்புகளை உன்னிப்பாகக் கவனித்துவந்தோம். ஷாம்பு தயாரிப்பதுதான் எங்கள் தொழில். ஆனால், சானிடைஸருக்கு மிகப் பெரிய அளவில் தேவை இருப்பதைப் பார்த்து, அதைத் தயாரிக்கும் முடிவை கடந்த மார்ச் 5-ம் தேதி எடுத்தோம். அடுத்த 15 நாள்களுக்குள் அதற்கான இயந்திரங்களை வாங்கி, சானிடைஸர்களைத் தயார் செய்து, அழகான பாட்டில்களில் அடைத்து, 20-ம் தேதி அன்று சந்தைக்குக் கொண்டுவந்துவிட்டோம்.

சானிடைசர் சாஷே
சானிடைசர் சாஷே
vikatan

இதேபோல நாங்கள் நடத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கான மருத்துவ சேவையை ஆன்லைன் மூலம் அளிக்கும் வசதியையும் தொடங்கினோம். சுத்தமாக இருக்கத் தேவையான அனைத்து வகையான பொருள்களையும் தயாரிக்க நிறைய ஆய்வு செய்துவருகிறோம்."

”ஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸர் பற்றி சொல்லுங்கள்... எப்படி இந்த ஐடியா உருவானது?”

"இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன்படும் விதமாகச் செயல்படும் சமூகப் பொறுப்புணர்வோடுதான் ஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸரை அறிமுகப்படுத்தியுள்ளோம். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, சானிடைஸர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அதன் விலை அதிகமாக இருப்பதால், அடித்தட்டு மக்களால் சானிடைஸர்களை வாங்கி பயன்படுத்த முடியவில்லை.

ஹேண்ட் சானிடைசர்
ஹேண்ட் சானிடைசர்
சர்ஃபேஸ் மற்றும் கேட்ஜெட்' சானிடைஸர்களை ஸ்ப்ரே வடிவத்தில் அறிமுகப்படுத்துகிறோம்.
சி.கே.ரங்கநாதன்

இதை உணர்ந்துகொண்ட நாங்கள், எங்களிடமுள்ள திறமையான ரிசர்ச் & டெவெலப்மென்ட் குழுவைக் கொண்டு, இந்த முயற்சியில் இறங்கினோம். ஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸர்களை சந்தைக்குக் கொண்டுவந்தோம். இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ”

”கவின்கேர் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் என்ன?” 

ஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸரைப் போலவே, வருகிற மே மாத இறுதியில், 50 பைசாவுக்கும் ஹேண்ட் சானிடைஸர் ஷாசேக்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதேபோல, மே மாதத்தின் முதல் வாரத்தில், 'சர்ஃபேஸ் மற்றும் கேட்ஜெட்' சானிடைஸர்களை ஸ்ப்ரே வடிவத்தில்  அறிமுகப்படுத்துகிறோம். 

இதைக் கொண்டு  மக்கள் தங்களுடைய வீட்டு சோபாக்கள், கார் சீட்டுகள் , டெஸ்க்டாப், ஸ்மார்ட்போன், கீபோர்டு போன்ற உபகரணங்களை சுத்தப்படுத்தலாம். இன்னும் அடுத்தடுத்த வாரங்களில், 13-15 வரையிலான புதிய புராடக்ட்களை நாங்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். எங்களுடைய குழு, காலத்துக்கேற்ப சிந்தித்து முடிவெடுத்து, சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயலாற்றிவருகிறது. இதன்மூலம் எங்கள் நிறுவனம் சரியான பாதையில் செல்கிறது என்பதையும் புரிந்துகொண்டோம். கொரோனா நாள்களில் இழந்த வருமானத்தை, அதற்குப் பிறகான நாள்களில் சம்பாதித்து விடுவோம்."

”தற்போதைய நிலையில் தொழில் தொடங்கலாமா?”

"தாராளமாகத் தொடங்கலாம். இப்போது, புதிதாக நிறைய வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. புதிதாகத் தொழில் தொடங்க அரசும் கடன் கொடுக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் மக்களிடம் எந்தப் பொருள்களுக்குத் தேவை அதிகமாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்து, அது சார்ந்த தொழில்களை ஆரம்பிப்பது நல்லது. 

ரூ.40,000 கோடி
ஹேண்ட் சானிடைஸருக்கு அதிகரித்துள்ள சந்தை வாய்ப்பு!

இன்றைய நிலையில் 'ஹேண்ட் சானிடைசர்' சந்தைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை 100 பேரில் ஒருவர்கூட தொடர்ந்து ஹேண்ட் சானிடைஸரை பயன்படுத்தவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பிறகு 100 பேரில் 90 பேர் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் 800 கோடி ரூபாயாக இருந்த சந்தை வாய்ப்பு, சுமார் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த மதிப்பு இப்படியே தொடராவிட்டாலும், கொரோனா தாக்கம் குறைந்தபிறகு 10,000 கோடி ரூபாய் அளவுக்குத் தங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது".

”சிறு, குறு தொழில்களும், அரசின் ஒத்துழைப்பும்..?”

"இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது, சிறு குறு தொழில் நிறுவனங்கள். விபத்தின்போது, கை கால்களில் அடிபட்டுவிட்டால், சிரமப்பட்டாவது அதைச் சரி செய்துகொள்ளலாம். ஆனால், முதுகெலும்பு முறிந்துவிட்டால்... எழுந்து நடக்க முடியாமல் படுத்தபடுக்கையாகிவிடுவோம். 

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நிலைமையும் இன்று அப்படித்தான் இருக்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், நாட்டின் பொருளாதாரம் தூக்கி நிமிர்த்த முடியாதபடி படுத்துவிடும்.  சிறு, குறு தொழில்கள் நலிந்துபோகாதபடி, வேலைவாய்ப்புகள்  குறையாதபடி நிதித் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும்."

சிறுதொழில் நிறுவனங்கள்
சிறுதொழில் நிறுவனங்கள்
vikatan

”இந்த இக்கட்டான சூழலில், ஒரு முன்னோடியாக  தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களுக்கும்  நீங்கள் சொல்ல நினைப்பது?”

"பணியாளர்கள் இல்லாமல் எந்தவொரு நிறுவனமும் இல்லை. ஒவ்வொரு நிறுவனத்தின் முதுகெலும்பாய் இருப்பது அவர்கள்தான். இதுவரை அவர்களால் வளர்ந்துவிட்டு, இக்கட்டான சூழ்நிலையில் மட்டும் அவர்களைக் கைகழுவிவிடுவது நியாயமில்லை. அதனால், நிலைமை சரியாகும் வரை வேலையிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

அதே சமயம், அனைத்துப் பொருள்களுக்கான தேவை, சந்தையில் குறைந்துகொண்டேவருகிறது. பெரும்பாலான நிறுவனங்களுக்கு போதிய வருமானம் இல்லை. அதனால், நீண்ட நாள்கள் வரை பணியாளர்களை சும்மா வைத்துக்கொண்டு, எந்தவொரு நிறுவனமும் சம்பளத்தைக் கொடுக்காது. இதையும் பணியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்."