Published:Updated:

புதிய CEO, உள்ளமைப்பில் மாற்றங்கள்; IPO-க்கு தயாராகிறதா கவின்கேர்?

 கவின்கேர் சி.கே.ரங்கநாதன்
கவின்கேர் சி.கே.ரங்கநாதன்

கவின்கேர் நிறுவனம் தனது நிறுவனப் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதற்கான முயற்சியில் இறங்கவிருப்பதாகத் தெரிகிறது. இதன் முதல்படியாக, இந்தக் குழுமத்தின் சி.இ.ஒ-ஆக வெங்கடேஷ் விஜயராகவன் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

தமிழகத்தின் பிரபல எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான கவின்கேர் குழுமத்திற்கு புதிய சி.இ.ஒ-ஆக வெங்கடேஷ் விஜயராகவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமாக இருக்கும் சி.கே.ரங்கநாதனின் மகனும், மகளும் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

Cavincare
Cavincare
https://cavinkare.com/
முதல்வர் நிவாரண நிதி: கவின்கேர் ரூ.1 கோடி நிதியுதவி!

கோவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் பிசினஸில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பல வகையான தொழில்களை செய்துவந்தது. இனி அந்தத் தொழில்கள் எஃப்.எம்.சி.ஜி, இ-காமர்ஸ், சில்லரை விற்பனை, ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் என நான்கு பிரிவுகளாக பிரித்து செய்யப்படும் என இந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவின்கேர் நிறுவனம் தனது நிறுவனப் பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதற்கான முயற்சியில் இறங்கவிருப்பதாகத் தெரிகிறது.

Venkatesh Vijayaragavan
Venkatesh Vijayaragavan

இதன் முதல்படியாக, இந்தக் குழுமத்தின் சி.இ.ஒ.வாக வெங்கடேஷ் விஜயராகவன் நியமிக்கப் பட்டிருக்கிறார். எஃப்.எம்.சி.ஜி பிசினஸ் பிரிவை இனி இவர் தலைமை தாங்கி நடத்துவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமாக இருக்கும் சி.கே.ரங்கநாதனின் மகன் மனுரஞ்சித், ரீடெய்ல் விற்பனைப் பிரிவைத் (Retail) தலைமையேற்று நடத்தவிருக்கிறார்.

 மனு ரஞ்சித்  ரங்கநாதன்
மனு ரஞ்சித் ரங்கநாதன்
ராஜசேகர்

அதே போல, சி.கே.ரங்கநாதனின் மகள் அமுதா, இ-காமர்ஸ் பிரிவைத் தலைமையேற்று நடத்தவிருக்கிறார். ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பிரிவை தொடர்ந்து சி.கே.ரங்கநாதனே கவனித்துக்கொள்ள இருக்கிறார்.

நிறுவனத்தின் நிர்வாகத்தில் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள்மூலம் இந்த நிறுவனத்தின் டர்ன் ஓவர் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.5,000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amudha Ranganathan
Amudha Ranganathan

இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ரூ.900 கோடி முதலீடு செய்யப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரூ.900 கோடியில் பால் உற்பத்தித் தொழிலுக்கு ரூ.400 கோடியும் மீதமுள்ள பணம் பிற தொழில்களின் வளர்ச்சிக்கும் முதலீடு செலவிடப்படும் எனத் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய வருவாய் ரூ.1,700 கோடியாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு