Published:Updated:

`மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா விருது, ரூ.15 லட்சம் பரிசு!' - விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட `ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் முதல்முறையாக `நேஷனல் ஸ்டார்ட் அப் - 2020' என்ற விருதை அறிவித்துள்ளது.

ஸ்டார்ட் அப் விருது
ஸ்டார்ட் அப் விருது

இந்தியாவில் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும்விதமாக, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட `ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் முதல்முறையாக `நேஷனல் ஸ்டார்ட் அப் - 2020' என்ற விருதை அறிவித்துள்ளது.

Representational image
Representational image

தேசிய அளவிலான ஸ்டார்ட் அப் விருதானது, ஒரு ஸ்டார்ட் அப்பின் நிறுவனத்தின் டர்ன் ஓவர் என்பதைத் தாண்டி, புதுமை, சமுதாயச் செயல்பாடுகள், வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட உள்ளது.

வீட்டிலிருந்தே பிசினஸ்... 
உதவுகிறது இன்ஸ்டாகிராம்!

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இன்குபேட்டர்கள், ஆக்ஸிலேட்டர்கள் என ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மூன்று பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட உள்ளன. சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தேர்வு செய்யப்படுவதற்கு  ஐந்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். ரன்னர் அப்பாக நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். இந்த ஐந்து நிறுவனங்களுமே அரசு சார்ந்த நிறுவனங்களுக்குச் செயல்படும் வாய்ப்பை எதிர்காலத்தில் பெறுவார்கள். 

ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப்

விருதுக்குத் தேர்வு செய்யப்படும் இன்குபேட்டர் நிறுவனத்துக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். விருது பெறும் ஆக்ஸிலேட்டர்கள் நிறுவனத்துக்கும் ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம், தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாவது நிறைவு பெற்று இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பதிவு செய்யப்பட்டதாகவும் தற்போது செயல்பாட்டில் இருப்பதும் அவசியம். 

இன்குபேட்டர் நிறுவனத்துக்கான விருதுக்கு விண்ணப்பிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 நிறுவனங்களுக்கு வழிகாட்டியிருக்க வேண்டும். ஆக்ஸிலேட்டர் நிறுவனம் எனில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 நிறுவனங்களுக்கு வழிகாட்டியதாக இருந்திருக்க வேண்டும். நிறுவனத்தைப் பதிவு செய்தற்கான சான்றிதழ், அரசுக்கு வரி செலுத்தியதற்கான ஆதாரங்கள் என ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்டுள்ளவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப்

https://www.startupindia.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று தொடங்கி டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியல் 2020-ம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அரசின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.