Published:Updated:

11 கிரிப்டோகரன்சி சந்தைகளில் ₹81.54 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? அரசு சொல்வது என்ன?

Cryptocurrency ( Pixabay )

2022-ம் ஆண்டின் பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி முதல் எந்தவொரு டிஜிட்டல் பரிமாற்ற சொத்தின் லாபத்திற்கும் 30 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

11 கிரிப்டோகரன்சி சந்தைகளில் சுமார் 81.54 கோடி வரி ஏய்ப்பு செய்யபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு வட்டி மற்றும் அபராதமாக சுமார் 95.86 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி.

பங்கஜ் சவுத்ரி
பங்கஜ் சவுத்ரி
Twitter Photo

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2022-ம் ஆண்டின் பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி முதல் எந்தவொரு டிஜிட்டல் பரிமாற்ற சொத்தின் லாபத்திற்கும் 30 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், WazirX கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் பெரும் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வரி ஏய்ப்பு செய்த வழக்குகளை ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகமும் தீவிரமாக கண்டறிந்தது. அதன்படி சுமார் 81.54 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்காக நாட்டில் உள்ள CoinDCX மற்றும் CoinSwitch Kuber உள்ளிட்ட 11 கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுமார் ரூ.40.5 கோடி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளது WazirX. இதற்காக வட்டி மற்றும் அபராதமாக 49.18 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய வரி ஏய்ப்பில் சிக்கிய CoinDCX 15.7 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்காக வட்டி மற்றும் அபராதமாக ரூ.17.1 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. Buy Uncoin ரூ.1.05 கோடி வரி ஏய்ப்பு வழக்குக்காக அபராதமாக ரூ.1.1 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

Cryptocurrency
Cryptocurrency

அதேபோல் CoinSwitch Kuber வழக்கில் ரூ.13.76 கோடி வரி ஏய்ப்புக்காக ரூ.16.07 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. Awlencan Innovations India (Zebpay) நிறுவனம் 2.01 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்காக 2.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. UnoCoin ரூ.2.97 கோடி வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணையில் 4.44 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism