Published:Updated:

ரூ.7 கோடி நிதி திரட்டிய `சாய் கிங்ஸ்' நிறுவனம்! - எதற்காக தெரியுமா?

சாய் கிங்ஸ்
சாய் கிங்ஸ்

தற்போது சாய் கிங்ஸ் ஒரு நாளைக்கு 25,000 கப் தேநீர் விற்பனை செய்கிறது.

தொழில் வளர்ச்சியில் மிகக் குறுகிய காலத்தில், வேகமான முன்னேற்றத்தை அடைந்திருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் சாய் கிங்ஸ். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாய் கிங்ஸ் நிறுவனம் ஹைதராபாத் ஏஞ்சல்ஸ், டை இந்தியா ஏஞ்சல்ஸ் (டிஐஇ), தி சென்னை ஏஞ்சல்ஸ் (டிசிஏ) ஆகிய ஏஞ்சல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனங்களிடமிருந்து மில்லியன் டாலர் பணத்தை நிதியாகத் திரட்டியிருக்கிறது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய். 

ஆன்லைன் மூலம் டீ விற்பனை... ஆண்டுக்கு 70 கோடி ரூபாய்... கலக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!

சாய் கிங்ஸ் ஒருநாளைக்கு 25 ஆயிரம் கப் தேனீர் விற்பனை செய்கிறது. இதில் டெலிவர் மற்றும் கார்ப்பரேட் ஆர்டர்களும் அடங்கும். சராசரியாக, அதன் 40 கடைகள் மூலம் ஒரு மாதத்துக்குப் 7.5 லட்சம் கப் தேநீர்கள் விற்கப்படுகின்றன.

``காபி மற்றும் தேநீருக்கு சென்னையில் எப்போதுமே மவுசு அதிகம். அதற்கான தேவைகள் இங்கு குறைந்ததே இல்லை. கடந்த 2016-ல் சாய் கிங்ஸ் ஆரம்பித்தபோது, சரியான விலை நிர்ணயம், பிராண்டை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தல், உயர்தரம் ஆகிய மூன்று விஷயங்களிலும் மிகப்பெரிய சவாலை சந்தித்தோம். ஆனால், தற்போது சாய் கிங்ஸ் தரம் மற்றும் சுவையினால் லட்சக்கணக்கான தனது வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்தியிருக்கிறது.

சாய் கிங்ஸ்
சாய் கிங்ஸ்
நிறுவன விரிவாக்கத்துக்காக கடந்த ஆகஸ்ட், 2018-ல் 2 கோடி ரூபாய் நிதியைத் தனிமனித முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியது போலவே, இப்போதும் சுமார் 7 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறோம். இந்த நிதி எங்களுடைய எதிர்கால இலக்குகளில் ஒன்றான 100 கடைகள் விரிவாக்கத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை அடைவதே எங்களின் குறிக்கோள். கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட புதிய சந்தைகளில் கடைகள் விரிவாக்கத்துக்காகத் திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்துவோம்" என்கிறார் சாய் கிங்க்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜஹாபர் சாதிக்.

அடுத்த கட்டுரைக்கு