Published:Updated:

மாறிவரும் இந்தியப் பொருளாதாரம்... வளர்ச்சிக்கு வழிவகுக்கும் 3 வணிகத் துறைகள்..!

பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

பொருளாதாரம்

மாறிவரும் இந்தியப் பொருளாதாரம்... வளர்ச்சிக்கு வழிவகுக்கும் 3 வணிகத் துறைகள்..!

பொருளாதாரம்

Published:Updated:
பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

சுகுமார் ராஜா, மூத்த நிர்வாக இயக்குநர் - போர்ட்ஃபோலியோ மேலாண்மை, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் ஈக்விட்டி

சீனாவில் 2000-ம் ஆண்டுகளில் நகர மயமாக்கல் ஏற்பட்டதுடன், நடுத்தர மக்களின் வருமானமும் அதிகரித்தது. அதே நிலை, இப்போது இந்தியாவிலும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நகர்ப்புற இந்தியர்களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.1,76,000 (2,200 அமெரிக்க டாலர்) இருக்கிறது. இது வரும் 2030-ம் ஆண்டுக்குள் சுமார் ரூ.3,76,000-மாக (4,700 அமெரிக்க டாலர்) அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளது.

சுகுமார் ராஜா, 
மூத்த நிர்வாக இயக்குநர் - போர்ட்ஃபோலியோ மேலாண்மை, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் ஈக்விட்டி
சுகுமார் ராஜா, மூத்த நிர்வாக இயக்குநர் - போர்ட்ஃபோலியோ மேலாண்மை, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் ஈக்விட்டி

இந்தியர்களின் செலவழிக்கும் திறன்...

இந்தியர்களின் ஆண்டு வருமானம் 3,000 டாலரைத் தாண்டும்போது, இந்தியர்களின் செலவழிக்கும் திறன் வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய மக்களில் 40% பேர் நகரங்களில் வசிப் பவர்களாக இருப்பார்கள்.

வேலைவாய்ப்பில் பெண்களில் பங்கை நகர மயமாக்கல் அதிகரிக்கச் செய்யும். தற்போதைய நிலையில், கல்வி, போக்குவரத்து, ஆரோக்கியப் பராமரிப்பு ஆகிய துறைகளில் பெண்களின் வேலைவாய்ப்பு தேசிய சராசரி 30 சதவிகித மாக உள்ளது. இது அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 2% உயரும்.

நிதித் திட்டங்களில் முதலீடு...

ஸ்மார்ட் போன் பயன்பாடு மூலம் நடுத்தர வருமான நுகர்வோர்கள் மிகவும் பயன் அடைவார்கள். அவர்கள் செல்போன் வழியாக அதிகமாக இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும், முன்பை விட அதிக நிதித் திட்டங்களில் (Financial Products) முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். டிஜிட்டல் வழிநுகர்வு, பணப் பரிமாற்றம் மிகவும் அதிகரித்துள்ளது. குறைந்த வருமானப் பிரிவினர் சுமார் 28% பேர் டிஜிட்டல் வழி பணப் பரிமாற்றத்தில் ஈட்டுபட்டு வருகிறார்கள். 50% நடுத்தர வருமானப் பிரிவினர் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகிறார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறிவரும்  இந்தியப் பொருளாதாரம்... வளர்ச்சிக்கு  வழிவகுக்கும் 3  வணிகத் துறைகள்..!

உள்நாட்டு நுகர்வு...

எங்கள் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் முதலீட்டு ஆராய்ச்சிக் குழு, உள்நாட்டு நுகர்வுக் கருத்தின் அடிப்படையில் எதிர்கால வளர்ச்சிக்கான மூன்று வணிக மாதிரிகளை அடையாளம் கண்டுள்ளது. பகிர்வுப் பொருளா தாரம், சேவை ஒருங்கிணைப்பு மற்றும் சந்தா சேவைகள் (Sharing economy, Service Aggregation and Subscription Services) ஆகியவையே அந்த மூன்று வணிக மாடல்களாகும்.

இந்திய நுகர்வோரின் தேவைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் சைவ உணவு வகைகள் தொடங்கி, வாழ்க்கைமுறை நுகர்வுப் பொருள்கள் வரை அவற்றின் அளிப்பை அதிகரித்து வருகின்றன. இந்திய நுகர்வோர்கள் அமைப்புசாரா முறையில் இருந்து அமைப்பு சார்ந்த முறைக்கு மாறி வருகிறார்கள். இதனால், தனியார் பிராண்டட் பொருள்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், அமைப்பு சார்ந்த நுகர்வு, ஆடைகள் மற்றும் மளிகைப்பிரிவில் 5 - 10 சதவிகிதமாக உள்ளது. இது 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிற வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளதைப் போலவே, இந்திய நுகர்வோர்களுக்கு டிஜிட்டல் உள்ளடக்கம் (இணையதளங்கள், யூடியூப் போன்றவை) பெரும்பாலும் இலவசமாகக் கிடைத்து வருகிறது. தற்போது, இந்தியர்கள் உலக அளவில் பொழுது போக்குக்காக தங்கள் சம்பாத்தியத்தில் மிகக் குறைவாகவே 2%-3% செலவிடுகின்றனர். இது சீனாவில் 11%, அமெரிக்காவில் 16 சதவிகிதமாக உள்ளது. வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த சந்தைகள் இரண்டிலும் வருமானம் அதிகரிக்கும்போது, நுகர்வோர் பணம் செலுத்தும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்துக்கு முன்பைவிட அதிகமாக மாறுவார்கள்.

இன்று 10 சதவிகிதத்துக்கும் குறைவான இந்திய பார்வை யாளர்கள் வீடியோக்களைக் கட்டணம் செலுத்திப் பார்க் கிறார்கள். கட்டணச் சேவைகளுக்கான சந்தா செலுத்துவது வேகமாக அதிகரித்து வருகிறது; ஆண்டுக்கு ரூ.1,200 (15 டாலர்) அளவுக்கு இப்போது கட்டணம் கட்டி வருகிறார்கள். உயரும் வருமானத்தால் 2030-க்குள் இந்தியாவில் 200 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தப் பிரிவின் மதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உள்நாட்டு நுகர்வு அம்சம் கொண்ட மூன்று வணிக மாதிரிகள்..!

1. பகிர்வுப் பொருளாதாரம்...

இந்தியர்கள் செலவுகளைக் குறைக்க பகிர்வுமுறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஷேர் ஆட்டோ, கார் பூல் என்பது அதன் ஆரம்ப நிலையாகும். இப்போது பணிபுரியும் இடத்தை நிறுவனங்கள் பகிர்ந்துகொள்கின்றன. இதனால், சிறிய நிறுவனங்களுக்கு செலவு கணிசமாகக் குறைகிறது. கூடவே சேவை பெறுபவர்களுக்கான கட்டணமும் குறைகிறது.

கிழக்காசிய மக்களுடன் ஒப்பிடும்போது, இந்திய நுகர்வோர், பயன்படுத்திய நுகர்வோர் பொருள்கள் மற்றும் பழைய கார்கள், மோட்டார் பைக் ஆகிய வற்றையே அதிகம் பயன் படுத்தி வருகிறார்கள்.

2. சேவை ஒருங்கிணைப்பு

அதிகரித்துவரும் நகரமய மாக்கல் காரணமாக, துப்புரவு பணிகள், பழுது பார்ப்பு மற்றும் அழகு சேவைகள் ஆகியவை ஒருங்கிணைக்கப் பட்டதாக மாறி இருக்கின்றன. இவற்றில் பல டிஜிட்டல் தளங்களில் கிடைக்கின்றன.

3. சந்தா மாதிரி

புதிய பிராண்டுகள் மற்றும் திட்டங்களை சிறிய தொடர்ச்சியான கட்டணத் தில் முயற்சி செய்து பார்க்கும் ஆசை வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போலவே இந்தியாவிலும் வளர்ந்து வருகிறது. முன்பைவிட விளையாட்டு சேனல்கள், சினிமா சேனல்களுக்கு சந்தா கட்டுவது மிகவும் அதிகரித்து வருகிறது.

விநியோக சங்கிலி: இந்தியாவுக்கு லாபம்...

கோவிட் 19 வைரஸ் பரவல் பாதிப்புக்குப் பிறகு, சர்வதேச அளவில் பொருள்கள் விநியோக சங்கிலியில் (Supply Chain) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா லாபம் அடைந்து வருகிறது. இந்த லாபம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

சர்வதேச உற்பத்தி நிலை யில் சீனா முக்கியமான இடத்தில் இருந்தது. ஆனால், சீனாவில் விநியோக சங்கிலி யில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தென் கொரியா, தைவான் நாடுகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன. இந்தியா தொழில் நிறுவனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள் அளிக்கும் நாடு, மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு கொண்ட நாடு, படித்த மற்றும் திறமையான தொழிலாளர் களைக் கொண்ட நாடு என்பது இந்தியாவுக்கு பாசிட்டிவ்வான விஷயமாக இருக்கிறது.

திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்...

அனைத்து குடிமக்களுக் கும் வங்கிக் கணக்கு வசதியை வழங்கும் ஜந்தன் திட்டம், உலகின் மிகப்பெரிய பயோ மெட்ரிக்ஸ் அடிப்படை யிலான அடையாள அமைப்பான ஆதார் திட்டம், தேசிய அளவிலான சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி ஆகிய சீர்த்திருத் தங்களின் விளைவாக உலக வங்கியின் வணிக செயல்பாட்டு குறியீட்டில் இந்தியாவின் நிலை மேம்பட் டுள்ளது. அதாவது, 2014-ம் ஆண்டில் 142 ஆக இருந்தது, 2021-ம் ஆண்டில் 63 ஆக உயர்ந்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு...

கோவிட் பரவல் விளை வாக அந்நிய நேரடி முதலீடு (FDI) உலக அளவில் பாதிக்கப் பட்டது. 2020-ம் ஆண்டில் சர்வதேச எஃப்.டி.ஐ முதலீடு 35% வீழ்ச்சி கண்டு, 1 டிரில்லியன் டாலராகக் குறைந்து போனது. ஆனால், அந்த ஆண்டில் இந்தியாவின் எஃப்.டி.ஐ முதலீடு 27% உயர்ந்து, 64 பில்லியன் டாலராக அதிகரித்தது. தொழில் நுட்பம், உற்பத்தி, ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறைகளில் இந்தியாவில் எஃப்.டி.ஐ முதலீடு அதிகரித்துள்ளது.

உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை...

விநியோகச் சங்கிலி பரவலாக்கம், மூலதனச் செலவு அதிகரிப்பு, உள்நாட்டு உற்பத்தியை உயர்வு ஆகியவற்றுக்காக சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பி லான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (Production-Linked Incentive - PLI) திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பி.எல்.ஐ திட்டம் மூலம் லாபம் அடைந்து வருகின்றன.

லாபமடையும் முக்கிய துறைகள்...

பகிர்வுப் பொருளாதாரம், சேவை ஒருங்கிணைப்பு, சந்தா மாடல் ஆகிய மூன்று கருத்துகள், சர்வதேச விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு, உள்நாட்டு நுகர்வு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை போன்ற வற்றால் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிக லாபம் அடையும்.

தொழில்நுட்பம்...

கிளவுட் கம்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் மூலம் இந்தியத் தொழில்நுட்பத் துறையின் வருமானம் 2021-22–ம் நிதியாண்டில் 16% அதிகரித்து, 22 பில்லி யன் டாலர்களாக உயர்ந்து உள்ளது. இந்த வருமானம் அடுத்த நான்கு ஆண்டு களில், ஆண்டுதோறும் 12.5% அதிகரித்து, 36 பில்லியன் டாலர்களாக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

2019-ம் ஆண்டில் இந்தியத் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்ஸிங் வணிகத்தின் மதிப்பு 154 பில்லியன் டாலர்களாக இருந்தது. மென்பொருள் உருவாக்குநர்களுக்கான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழி லாளர் செலவுகளில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான செலவு இந்தியாவில் இருப்பதால், இது சாத்தியமாகி இருக்கிறது. இந்தியாவின் வணிக செயல்முறை அவுட்சோர்ஸிங் மாதிரி உலகை வழி நடத்துகிறது. பிலிப்பைன்ஸ், போலந்து மற்றும் சீனாவில் மதிப்புக் கூட்டப்பட்ட சந்தையின் போட்டியை சமாளித்து இந்தியா வெற்றி பெற்று வருகிறது. குறைவான செலவு, பரந்து விரிந்த விரிவான உள்நாட்டு சந்தை போன்றவை கிழக்கு ஆசிய நாடுகளின் போட்டியை சமாளிக்க இந்தியாவுக்கு உதவி வருகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...

இந்தியா, 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்காக 450 ஜிகாவாட்டை நிர்ணயித்து உள்ளது. இந்தப் புதிய திறனில் 62% சூரிய சக்தியாக இருக்கும். இந்தியாவில் தற்போதைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மொத்த மின் உற்பத்தியில் 39 சதவிகிதமாக உள்ளது. புதை படிவ (Fossil) எரிபொருள் உற்பத்தி ஆண்டுதோறும் 5% வளர்ச்சியடைகிறது என்றால், வரும் 2030-ம் ஆண்டில் மொத்த உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு 56 சதவிகிதமாக இருக்கும். இது மொத்த மின் உற்பத்தியில் 9% ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது.

மாறிவரும்  இந்தியப் பொருளாதாரம்... வளர்ச்சிக்கு  வழிவகுக்கும் 3  வணிகத் துறைகள்..!

இந்தியாவின் மெகா டிரெண்ட்...

இந்தியாவின் வேகமான நகரமயமாக்கல் மற்றும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது மெகா டிரெண்டாக உள்ளது. இவை வருமானம் அதிகரிப்பு, உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு மற்றும் பன்னாட்டு சப்ளை சங்கிலி பரவலாக்கம் ஆகிய வற்றுக்கு வழிவகுக்கிறது. 2022-25-ம் ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இருக்கும்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

* தனிப்பட்ட நிறுவனங்கள், குறிப்பிட்ட தொழில்கள் அல்லது துறைகள் அல்லது பொதுவான சந்தை நிலைமைகளை பாதிக்கும் காரணிகளால் பங்கு விலைகள் அதிக ஏற்ற இறக்கமாக இருக்கும்.

* வெளிநாட்டு நிறுவனப் பங்குகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகள், நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் அரசியல் மாற்றங்கள் உள்ளிட்ட பல ரிஸ்க்குகளை உள்ளடக்கியது.

* வளர்ந்து வரும் நாடுகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு கள், குறைந்த பணப் புழக்கம், மாறும் சட்டத் திட்டங்கள், அரசியல், வணிக மற்றும் சமூக கட்டமைப்புகள் மாற்றம் ஆகிய வற்றுடன் தொடர்புடைய ரிஸ்க்குகளை உள்ளடக்கிய தாகும். குறிப்பிட்ட நாடுகள், தொழில்கள், துறைகள், முதலீட்டு வகைகள் ஆகியற்றின் மீதான ரிஸ்க் சூழ்நிலை மற்றும் காலத்துக் கேற்ப மாற்றத்துக்கு உள்ளாகும்.

குறிப்பு: இங்கு குறிப்பிடப் பட்டுள்ள விவரங்கள் விளக்கிச் சொல்வதற்காக மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன; பரிந்துரை அல்ல. முதலீட்டாளர்கள் அலசி ஆராய்ந்து சொந்தமாக முதலீட்டு முடிவை எடுக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்!