Published:Updated:

`₹2 கோடி லாபம்; ₹50 லட்சத்தை நிவாரண நிதிக்கு கொடுத்துவிட்டேன்!' - அசத்திய பங்குச்சந்தை டிரேடர்

கொரானா நிவாரண நிதி
கொரானா நிவாரண நிதி

ஒரு பங்குச் சந்தை வர்த்தகர் இந்த அளவுக்கு அதிக தொகையை நிவாரண தொகை கொடுத்திருப்பது இதுவே முதல் முறை எனலாம்.

பங்குச் சந்தை நிபுணர், ஆப்ஷன் டிரேடர் பி.ஆர். சுந்தர், கொரானா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். இதனை அவர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.

பி.ஆர்.சுந்தர்
பி.ஆர்.சுந்தர்

கொரோனா நிதியாக ரூ.50 லட்சம் கொடுத்திருப்பது பற்றி பி.ஆர்.சுந்தர் கூறும்போது, ``குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் நான் எனது கம்பெனி கணக்கு மூலம் செய்யும் ஆப்ஷன் டிரேடிங்கில் கிடைக்கும் லாபத்தில் 25 சதவிகித தொகையை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க முடிவு செய்திருந்தேன். ஏப்ரல் 1 முதல் மே 16 வரையில் என் கம்பெனி அக்கவுன்டில் செய்த ஆப்ஷன் டிரேடிங் மூலம் கிடைத்த லாபம் சுமார் 2 கோடி. அதில் 25%, அதாவது ரூ.50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரிடம் கொடுத்திருக்கிறேன். கடந்த முறை கொரானா நிதியாக ரூ. 85 லட்சம் கொடுத்துள்ளேன்” என்றார்.

இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக சென்னை, மும்பை, பெங்களுரு, சிங்கப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் ஆப்ஷன் டிரேடிங் கட்டண வகுப்புகளை நடத்தி வருகிறார். அவர் ஒரு நாள் மற்றும் இரண்டு நாள்கள் வகுப்புகளை நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பரவல் சூழலில் இந்த வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறார்கள். இவர் தனது நிறுவனம் மூலம் இந்த வகுப்புகளை நடத்தி வருகிறார்.

கொரானா நிவாரண நிதி
கொரானா நிவாரண நிதி

இது தவிர அவர் தனிப்பட்ட முறையில் ஆப்ஷன் டிரேடராக இருக்கிறார். ஆப்ஷன் டிரேடிங் என்பது பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை ஏறும் அல்லது இறங்கும் என்கிற கணிப்பின் அடிப்படையில் வர்த்தகம் செய்வதாகும். இதில், குறைவான முதலீட்டில் அதிக தொகைக்கு வர்த்தகம் செய்ய முடியும். எந்த அளவுக்கு அதிக லாபம் ஈட்ட முடியுமோ, அந்த அளவுக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது.

ஒரு பங்குச் சந்தை வர்த்தகர் இந்த அளவுக்கு அதிக தொகையை நிவாரண தொகை கொடுத்திருப்பது இதுவே முதல் முறை எனலாம். அதற்காக பி.ஆர். சுந்தரை பாராட்டுவோம்.

அடுத்த கட்டுரைக்கு