Published:Updated:

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் பென்ஷன் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் பென்ஷன் திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஃப்யூச்சர் ஜெனரலி சரல் பென்ஷன் திட்டம் (Future Generali Saral Pension Scheme)

ஃப்யூச்சர் ஜெனரலி நிறுவனம், நிம்மதியான ஓய்வு வாழ்க்கைக்கு பென்ஷன் வழங்கும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் இரண்டு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் வகையில், பாலிசிதாரருக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் தொகை வழங்கப்படும். அவரின் மரணத்துக்குப் பிறகு முதலீட்டுத் தொகை முழுவதும் நாமினிக்குத் திரும்ப அளிக்கப்படும்.

இரண்டாவது வகையில், பாலிசிதாரர் மற்றும் நாமினிக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வழங்கப்படும். பாலிசிதாரரின் மறைவுக்குப் பிறகு, முதலீட்டுத் தொகை முழுவதும் பாலிசிதாரரின் வாரிசுதாரருக்கு வழங்கப்படும். பென்ஷன் தொகையை மாதம் / காலாண்டு / அரையாண்டு / ஆண்டு தவணை களில் பெறும் வசதி உள்ளது. நிம்மதியான ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் திட்டமிடுபவர்கள் இந்தப் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

எடெல்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்: என்.சி.டி திட்டங்கள் (NCD Scheme)

இந்தப் புதிய கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 6-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். ஒரு பத்திரத்தின் முகமதிப்பு ஆயிரம் ரூபாய். குறைந்தபட்சம் 10 பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். வட்டி தொகையாக 9.7% நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வட்டித் தொகையைத் தவணை களில் வாங்கிக் கொள்ளலாம் அல்லது முதிர்வுத் தேதிக்குப் பிறகு, முதலீட்டுத் தொகையுடன் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம். திட்டக் காலமாக 3 ஆண்டு, 5 ஆண்டு, 7 ஆண்டு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். குறைந்த ரிஸ்க்கில் வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் வேண்டுபவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

ஹெச்.டி.எஃப்சி சரல் பென்ஷன் திட்டம் (HDFC Saral Pension Scheme)

இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ எளிமையான பென்ஷன் திட்டத்தைக் காப்பீட்டு நிறுவனங்கள் அனை வருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது. அதனால் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனமும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பென்ஷன் விரும்புவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் பென்ஷன் திட்டம்!

பாரத பிரதமரின் கிசான் மந்தன் யோஜனா (PM Kissan Mandhan Yojana)

மத்திய அரசு கொண்டுவந்த பாரத பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு தற்போது பாரத பிரதமரின் கிசான் மந்தன் யோஜனா என்ற புதிய திட்டத்தின்கீழ் மாதத்துக்கு 3,000 ரூபாய் பென்ஷனாக வழங்கப்பட இருக்கிறது.

இந்தப் புதிய திட்டத்தில் சேர எந்தப் புதிய ஆவணங்களும் தரத் தேவையில்லை. கிசான் சம்மன் நிதி யோஜனா பயனாளிகள் அனைவரும் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இந்தத் திட்டத்தில் சேர பயனாளரின் வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு குறைந்தபட்சத் தொகையைப் பயனாளிகள் செலுத்த வேண்டும். பயனாளிகளின் வயது 18 முதல் 30-க்குள் இருந்தால், மாதம் 55 ரூபாய் செலுத்த வேண்டும். அவரின் வயது 30-க்கு மேல் இருந்தால், மாதம் ரூ.110 ரூபாய் செலுத்த வேண்டும். 40 வயதுக்கு மேல் இருந்தால், மாதம் ரூ.200 செலுத்த வேண்டும். அவ்வாறு குறைந்த பட்சம் 20 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் சேமித்து இருந்தால், பயனாளருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்.

நமது நாட்டில் அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் பென்ஷன் கிடைத்து வருகிறது. நமது நாட்டில் பெருவாரியாக உள்ள விவசாயிகள் தமது வயதான காலத்தில் எந்த உதவித் தொகையும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் இந்தத் திட்டம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம். சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலத்துக்கு குறைவாக உள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும். அரசு வழங்கும் சலுகைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது நமது கையில்தான் உள்ளது. அதனால் தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism