Published:Updated:

சிறு, குறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு.. கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி கருத்தரங்கம்!

ராணுவ தளவாட உற்பத்தி  கருத்தரங்கம்
News
ராணுவ தளவாட உற்பத்தி கருத்தரங்கம்

கூடிய விரைவில், நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் உருவாகும் என்று கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளவாட உற்பத்தியில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா, ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, “தென்னிந்தியாவின் பாதுகாப்பு நடைபதையாக (Defence Corridor) தமிழகம் இருக்கிறது. சிறு,குறு நிறுவனங்கள் அதிகம் இருப்பதால், தமிழகம் அனைத்து தொழிலிலும் உற்பத்தியின் மையமாக இருக்கிறது. அரசும் நமக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்து வருகிறது.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால், பாதுகாப்பு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்துக்கு சென்றுவிடும். சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்போதுதான், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்” என்றார்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா, “தேசத்தின் வளர்ச்சிக்கான இன்ஜினாக தமிழகம் இருக்கிறது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஒசூர் ஆகிய பகுதிகள் ஒரு பாதுகாப்பு நடைபாதையாகவும், உத்தரப்பிரதேசம் ஒரு பாதுகாப்பு நடைபாதையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏதாவது ஓர் காரணத்தில் நம் தொழில் முடங்கும்போது, அடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பாக ராணுவ தளவாட உற்பத்தி இருக்கும். நம்மிடம் ஏற்கெனவே தொழில்நுட்பம் இருக்கிறது. அதை இதில் பொருத்தினால் போதும். வாய்ப்புகள் இங்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன” என்றார்.

ப்ரீத்தம் லால்
ப்ரீத்தம் லால்

இதில், ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் கழகத்தின் தலைமை ஆலோசகர் அட்மிரல் ப்ரீத்தம் லால் (ஓய்வு), விமானப் படை கமெண்டர் கே.என்.வி.நாயர் (ஓய்வு), கர்னல் சஞ்சீவ் குமார் ஷர்மா (ஓய்வு) ஆகியோர் ராணுவத்தில் உள்ள நடைமுறைகள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் தளவாட உற்பத்தியில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் போன்றவை குறித்து விளக்கினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருத்தரங்குக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராமமூர்த்தி, “சிட்கோவுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியுள்ளோம். ராணுவ தளவாட உற்பத்தியில் இருக்கும் வாய்ப்பை, சிறு, குறு நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

கூடிய விரைவில், நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் உருவாகும்” என்றார்.