Published:Updated:

புதிய பங்கு வெளியீட்டை தள்ளி வைக்கும் நிறுவனங்கள்..! காரணம் இதுதான்..!

பங்கு முதலீடு...

பணவீக்க விகிதம் தற்போது சற்று கட்டுக்குள் வரத் தொடங்கி இருக்கிறது. அதனால் பங்குச் சந்தைகள் தற்போது சற்று உயரத் தொடங்கி இருக்கிறது. பங்குகளை வாங்கும் ஆர்வமும் முதலீட்டாளர்களிடம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

புதிய பங்கு வெளியீட்டை தள்ளி வைக்கும் நிறுவனங்கள்..! காரணம் இதுதான்..!

பணவீக்க விகிதம் தற்போது சற்று கட்டுக்குள் வரத் தொடங்கி இருக்கிறது. அதனால் பங்குச் சந்தைகள் தற்போது சற்று உயரத் தொடங்கி இருக்கிறது. பங்குகளை வாங்கும் ஆர்வமும் முதலீட்டாளர்களிடம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

Published:Updated:
பங்கு முதலீடு...

புதிய பங்கு மூலதன வெளியீட்டிற்கு விண்ணப்பித்த ஐந்து நிறுவனங்களின் பரிசீலினை காலம் இன்னும் ஒரு மாதத்தில் காலாவதியாக இருக்கிறது. ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

அவ்வாறு விண்ணப்பம் செய்த தேதியிலிருந்து ஓராண்டிற்குள் அந்த நிறுவனம் பங்கு வெளியிட வேண்டும். அவ்வாறு ஒரு நிறுவனம் ஓராண்டிற்குள் பங்குகளை வெளியிடவில்லை என்றால் அந்த விண்ணப்பம் காலாவதியானதாக கருதப்படும். அவ்வாறு நிகழும் பட்சத்தில் அந்த நிறுவனம் மீண்டும் பங்கு  வெளியிட வேண்டும் என்றால் மீண்டும் முதலில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிறுவனத்தின் சொத்து விவரங்கள் மறுஆய்வு மற்றும் இதர ஆவணங்கள் புதிதாக நடப்பு நிதி ஆண்டிற்காக வழங்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் புதிய பங்கு மூலதன வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் மிகப் பெரிய ஆதரவு இருந்தது. பெரும்பாலான நிறுவனத்தின் பங்குகளை புதிதாக பட்டியலிடப்படும் போது வாங்கி குறுகிய காலத்தில் அதிக லாபத்திற்கு முதலீட்டாளர்கள் விற்று வந்தார்கள்.

எல்ஐசி
எல்ஐசி

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த மிகப் பெரிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடு முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை வழங்கியுள்ளது. குறிப்பாக நமது நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் ஒன்றான எல் ஐ சி நிறுவனத்தின் புதிய பங்கு மூலதன வெளியீடு முதலீட்டாளர்களுக்கு 30% வரை நஷ்டத்தை வழங்கி இருக்கிறது.

மேலும் முக்கிய நிறுவனங்களான பேடிஎம், டெலிவரி போன்ற முன்னணி நிறுவனங்கள் அதன் வெளியிட்டு விலையை விட கணிசமாக குறைந்து தற்போது வர்த்தகமாகி வருகிறது.

மேலும் அதிகரிக்கும் பணவீக்க விகிதம், யுக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் போன்ற பல்வேறு காரணிகளால் பங்கு சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதனால் தற்போதைய நிலையில் தமது நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தால் தேவையான முதலீட்டினை திரட்ட முடியாது என்ற காரணத்தினாலும் நிறுவனங்கள் தமது புதிய பங்கு மூலதன முதலீட்டை குறித்த காலத்திற்குள் கொண்டு வரமுடியாமல் தள்ளி வைக்கின்றன. தற்போது சிஎம்ஆர் கிரீன் டெக், ஏபிஐ ஹோல்டிங்ஸ், வெல்னெஸ் ஃபார்எவர், கேப்பிட்டல் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஜேசன்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களின் விண்ணப்பம் இன்னும் ஒரு சில வாரங்களில் காலாவதியாக இருக்கிறது. சென்ற ஆறு மாதங்களில் இது போன்று 27 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் காலாவதியாகி உள்ளன.

பி.இ விகிதம்
பி.இ விகிதம்

பணவீக்க விகிதம் தற்போது சற்று கட்டுக்குள் வரத் தொடங்கி இருக்கிறது. அதனால் பங்குச் சந்தைகள் தற்போது சற்று உயர தொடங்கி இருக்கிறது. பங்குகளை வாங்கும் ஆர்வமும் முதலீட்டாளர்களிடம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. என்றாலும் சீனா போன்ற நாடுகளின் பங்கு சந்தைகளோடு ஒப்பிட்டால் நமது நாட்டின் பங்கு சந்தை அதிக விலையில் வர்த்தகமாகி வருகிறது. அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது நமது நாட்டு பங்கு சந்தைகளில் உள்ள பங்குகளை விற்று விலை குறைவான சீனா போன்ற நாடுகளின் பங்கு சந்தைகளில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக அதிக ஏற்றம் காண முடியாமல் பங்கு சந்தை தற்போது வர்த்தகமாகி வருகிறது. பங்கு சந்தைகள் இந்த சரிவுகளில் இருந்து மீளும் பொழுது அதிக அளவில் புதிய பங்கு மூலதன வெளியீடு நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்காகத்தான் பெரும்பாலான நிறுவனங்கள் தமது புதிய பங்கு வெளியிட்டினை தள்ளி வைத்துள்ளனர்.