Published:Updated:

கொரோனா 2.0... சந்திக்க வேண்டிய பொருளாதார பாதிப்புகள்..! ஓர் அலசல் பார்வை

பொருளாதார பாதிப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதார பாதிப்புகள்

E C O N O M Y

கொரோனா 2.0... சந்திக்க வேண்டிய பொருளாதார பாதிப்புகள்..! ஓர் அலசல் பார்வை

E C O N O M Y

Published:Updated:
பொருளாதார பாதிப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதார பாதிப்புகள்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவைக் கடுமையாகத் தாக்கி வருகிறது. தனிப்பட்ட முறையில், உடல்நல பாதிப்புக்கள், உயிர் இழப்புக்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பின் போதாமை என நமது மக்கள் படும் அல்லல்கள் ஒரு பக்கம் பெரும் சோகத்தை அளித்து வருகிறது என்றால், மறுபக்கம், கொரோனாப் பேரலையால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள பாதிப்புக்கள் குறித்த கவலைகளும் பரவலாக எழுந்துள்ளன. கடந்த வருட பொருளாதார பாதிப்பிலிருந்தே இன்னமும் நாம் முழுமையாக மீண்டு வராத நிலையில், புதிய அலை தரும் அதிர்ச்சிகள் என்னென்ன..?

பொருளாதார பாதிப்புகள்
பொருளாதார பாதிப்புகள்

நம்பிக்கையுடன் தொடங்கிய 2021...

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை ஒருவாறாக முடிவுக்கு வந்ததும், மேலைநாடுகளின் ட்ரில்லியன் டாலர் பொருளாதார மீட்சித் திட்டங்களும், தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பும் சீர்மிகு 2021-ம் ஆண்டுக்கான பெரியதொரு நம்பிக்கையை உருவாக்கியது. கொரோனா உருவாகிய தேசமாகிய சீனாவுக்கு மாற்றைத் தேடிவந்த மேலை நாடுகளைக் கவரும் வகையில் இந்தியாவில் உற்பத்திக் கேந்திரங் களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கவே, மத்திய அரசும் பல உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்களைத் தொடர்ச்சியாக அறிவித்தது. 2021-ம் ஆண்டில் உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா அமையும் என உலக வங்கி முதல் ரிசர்வ் வங்கி வரை மதிப்பிட்டன. இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் புதிய உச்சங்களைத் தொட்டதால், உற்சாகத்துக்குக் குறையில்லாமல் இருந்தது.

அச்சம் தரும் கொரோனாப் பேராழி...

கடந்த மார்ச் ஆரம்பத்தில் சிறு அலையாக உருவெடுத்த கொரோனா ஏப்ரலில் சுனாமியாக வடிவெடுத்து இந்தியாவைத் தாக்கத் தொடங்கியது. கொரோனா உருமாற்றம், மாநிலத் தேர்தல்கள் மற்றும் மதம் சார்ந்த திருவிழாக்கள் ஆகியவை கொரோ னாப் பரவலைத் துரிதப்படுத்தின.

முழு முடக்கத்தால் விளைந்த பொருளாதார வீழ்ச்சி குறித்த கடந்த கால கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் நாடு தழுவிய வகையிலான முழு முடக்கம் இந்த முறை இருக்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தொடக்கத்தில் மாநில அரசுகளும்கூட முடக்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயக்கம் காட்டின. ஆனால், கொரோனா பரவல் வேகம் அதிகரித்ததுடன், அத்தியாவசிய மருத்துவ வசதி களுக்கும் கடும் தட்டுப்பாடு உண்டாகவே, பொது முடக்க நடவடிக்கையை கையில் எடுக்க வேண்டிய அவசியம், மகாராஷ்டிரம், டெல்லி உள்ளிட்ட பல மாநில அரசுகளுக்கு உருவாகிவிட்டது. ஒப்பீட்டளவில் சற்றுக் குறைவான பாதிப்புக்களைச் சந்தித்துள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வார இறுதி நாள்களில் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன.

ஆரம்பக் கட்டத்தில், கொரோனா 2.0-வின் பொருளாதார தாக்கம் குறை வாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டாலும், அதிகப்படியான உயிரிழப்புக்கள், மருத்துவ உள்கட்டமைப்பு போதாமை மற்றும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியவற்றின் காரணமாக, வருங்காலங்களில் மக்களின் நடமாட்டத்துக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையே தற்போது நிலவுகிறது.

பொருளாதாரத்தின் வெப்பமானி யாகக் கருதப்படும் பங்குச் சந்தைக் குறியீடுகள் சமீப காலமாகக் கடும் சரிவைச் சந்தித்து வருவதும் வரவுள்ள பொருளாதாரச் சுணக்கத்துக்குக் கட்டியம் கூறுகிற மாதிரி அமைந் திருக்கிறது.

கொரோனா 2.0... சந்திக்க வேண்டிய பொருளாதார பாதிப்புகள்..! ஓர் அலசல் பார்வை

பாதிக்கப்படும் தொழில்துறைகள்...

இந்தியாவின் முக்கிய வணிகக் காரணிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நொமுரா குறியீடு (Nomura India Business Resumption Index) கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய சராசரி அளவுகளைவிட 16% குறைந் துள்ளது. கடந்த 18.04.2021-ம் தேதியில் நொமுரா குறியீடு 83.8 ஆகும். இது முந்தைய வார அளவைவிட 0.6 புள்ளிகள் குறைவாகும். இந்தியாவுக்கான கூகுள் இயக்கக் குறியீடும் (Google Mobility Report) நடப்பு மாதத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, உணவகங்கள், விற்பனைக்கூடங்கள், சினிமா தியேட்டர்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவை குறைவான பயன்பாட்டையே கண்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகமாகும்பட்சத்தில், வணிகச் செயல்பாடுகள் மேலும் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள தனிமைப்படுத்துதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வணிகம் சார்ந்த விமானப் பயணங்களை மேலும் மட்டுப் படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறையைப் பெருமளவுக்கு சார்ந்திருக்கும் சுற்றுலாத்துறையும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் போன்ற உற்பத்தி சார்ந்த மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பது வாகன உற்பத்தியை வெகுவாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம், கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, தனது வாகன உற்பத்தியை நான்கு நாள் களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், முக்கிய மாநிலங்களில் தற்போது நடைமுறைபடுத்தப் பட்டுள்ள பொது முடக்க நடவடிக்கைகள் வாகன விற்பனையை 30% வரை பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது. பொது வாகவே, இந்த மாநிலங்களில் அறுவடைக் காலத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் விற்பனை சிறப்பாக இருக்கும் என்றும், தற்போதைய பொது முடக்க நடவடிக்கைகள் மக்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்றும் விற்பனை யாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

கடந்த பொது முடக்கத்தின் போது, வருங்காலம் குறித்த அச்சம் காரணமாக, சாதாரண மக்களின் நுகர்வு விகிதம் குறைந்தது. அதேபோல, தற்போதும் நுகர்வு குறைந்து சேமிப்பு விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி, பயன்படுத்தும் பொருள்களின் (Consumer Discretionary Items) உற்பத்தித் துறை சரிவைச் சந்திக்கும். இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளி யிட்ட நுகர்வோர் நம்பிக்கை குறித்த மதிப்பாய்வின்படி, (Consumer Confidence Survey), ஜனவரி 2021 மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் 2021 மாதத்தில் நுகர்வோர் நம்பிக்கை பலவீனமடைந்து உள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், மேலை நாடுகளின் பொருளாதார மீட்சி சிறப்பாக உள்ள காரணத்தால், பன்னாட்டு நுகர்வைச் சார்ந்திருக்கும் இந்திய ஏற்றுமதித் துறைகள் சிறப்பாகச் செயல்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வீட்டிலிருந்தே பணி புரியும் வகையிலான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் அதிகம் பாதிப் படைய வாய்ப்புக்கள் இல்லை. மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகள் சிறப்பாகவே செயல்படும். வாடிக்கை யாளர்கள் அதிகம் வாங்க விரும்பாத பொருள்கள் (Consumer Non-Discretionary Items) சார்ந்த துறைகளும் கொரோனா இரண்டாவது அலையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப் பில்லை.

அடுத்தது என்ன..?

வருங்காலத்தில், கொரோனா உருமாற்றத்துக்கும் தடுப்பூசி களுக்கும் உள்ள நேரப் போட்டி கடுமையானதாக இருக்கும். மேலைநாடுகளைப்போல, மூன்றாவது மற்றும் நான்காவது கொரோனா அலைகளுக்கும் நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதும் மத்திய, மாநில அரசுகளின் தலையாயப் பணியாக இருக்கும். கொரோனா கட்டுப்பாடு மற்றும் பொது முடக்க நடவடிக்கைகள் அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதுடன் அமைப்புசாரா நிறுவனங் களுக்கும் தொழிலாளர்களுக்குரிய வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதும் மிகவும் அவசியம்.

பொருளாதார மீட்சித் திட்டங்களைப் பொறுத்தவரை, இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியே அதிகமான பங்கை அளித்து வந்துள்ளது. தற்போதைய கொள்கை வட்டி விகிதத்தைக் (Repo Rate) காட்டிலும் நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ள நிலையில், கொள்கை வட்டி விகிதங்களை மேலும் குறைப்பது சிரமமான காரியமாகவே இருக்கும்.

பொருளாதார மீட்சிக்காக செயற்கையாக அதிகரிக்கபட்டுள்ள பணப்புழக்கம், பணவீக்கத்தை அதீதப்படுத்தும் அபாயமுள்ளது என்பதால், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. எனவே, பொருளாதார மீட்சிக்கு இந்த முறை மத்திய அரசு அதிகப்படியான பங்கை அளிக்க வேண்டியிருக்கும். இந்த சவால்களை எல்லாம் சந்திக்க நாம் தயாராவது தவிர வேறு வழியில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism