Published:Updated:

கொரோனா வைரஸ் தாக்குதலால் சர்வதேசப் பங்குச்சந்தைகளில் பாதிப்பு!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( AP )

யுனைடேட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரத்தில் 8.7% இறக்கத்தைச் சந்தித்தது. சீனா அமெரிக்காவுக்கு இடைப்பட்ட ஆகாய மார்க்கத்தில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ள காரணத்தால் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மத்திய சீனாவின் வுகான் மாவட்டத்திலுள்ள கடல் உயிரினங்கள் மொத்த விற்பனை சந்தையிலிருந்தே இந்த வைரஸ் பரவியிருக்கும் என்று கருதப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது சர்வதேசப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து சரிவை ஏற்படுத்தியுள்ளது.

விமானப்போக்குவரத்து
விமானப்போக்குவரத்து
AP

கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய தன்மையுடையதால், தற்போது இதன் தாக்கம் அமெரிக்காவிலும் எதிரொலிக்கிறது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் வரும் பயணிகளிடமிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே சீனாவுக்குச் செல்லும் விமானப்பயணிகள், தங்களது பயணத்தை ஒத்திவைக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல, சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக சீனாவோடு தொடர்புடைய டிராவல் ஏஜென்ஸி நிறுவனங்கள் பெரிய பாதிப்பைச் சந்திக்கின்றன.

யுனைடேட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரத்தில் 8.7% இறக்கத்தைச் சந்தித்தது. சீனா அமெரிக்காவுக்கு இடைப்பட்ட ஆகாய மார்க்கத்தில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ள காரணத்தால் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளது. டிராவல்ஸ் நிறுவனம் மட்டுமல்லாது, சீனாவிலுள்ள ரெஸ்ட்டாரன்ட்களில் உணவருந்தும் மக்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவருவதால் உணவு பதப்படுத்துதல், ரெஸ்ட்டாரன்ட்கள் துறை சார்ந்த பங்குகளும் பெருமளவு அடிவாங்குகின்றன.

விமானப்போக்குவரத்து
விமானப்போக்குவரத்து
AP

லாஸ் வேகாஸ் சேன்ட்ஸ், வெய்ன் ரிசார்ட்ஸ் ஆகிய சுற்றுலா நிறுவனங்கள், சீனாவின் தெற்கு கடற்கரைப்பகுதியில் நல்ல வருமானம் ஈட்டி வந்தன. தற்போது அவற்றின் பங்குகள் 8% அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளன. 2003-ம் ஆண்டில், சார்ஸ் வைரஸ் தாக்குதல் தீவிரமாக இருந்தபோது ஹாங்காங் பங்குச்சந்தை 10% சரிவைச் சந்தித்திருந்தது. அதேபோன்றதொரு அசாதாரணமான நிலைதான் தற்போது சீனாவிலும், அதோடு பெருமளவு வர்த்த உறவு வைத்துள்ள நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதத்தில் அமெரிக்கா - இரான் போர்ப்பதற்றத்தின் தாக்கத்தை அனுபவித்த சர்வதேச பங்குச்சந்தைகள், தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு