Published:Updated:

கடன் சுமையில் தள்ளும் செயலிகள்: ரிசர்வ் வங்கி செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கடன்

வங்கிகள் வருமானம் எவ்வளவு, கடன் திரும்ப செலுத்தும் திறன், ஏற்கெனவே உள்ள கடன்கள், சிபில் ஸ்கோர் போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்து பின்னரே கடன் வழங்குகிறார்கள். ஆனால், பல தனியார் நிறுவனங்கள் தனிநபர்களுக்கு மொபைல் செயலிகள் மூலமாகக் கடன் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றன...

கடன் சுமையில் தள்ளும் செயலிகள்: ரிசர்வ் வங்கி செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

வங்கிகள் வருமானம் எவ்வளவு, கடன் திரும்ப செலுத்தும் திறன், ஏற்கெனவே உள்ள கடன்கள், சிபில் ஸ்கோர் போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்து பின்னரே கடன் வழங்குகிறார்கள். ஆனால், பல தனியார் நிறுவனங்கள் தனிநபர்களுக்கு மொபைல் செயலிகள் மூலமாகக் கடன் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றன...

Published:Updated:
கடன்

மொபைல் செயலிகள் மூலமாக வழங்கும் கடன்களில் பெரும்பாலானோர் அதிக வட்டி கொடுமையால் கடன் சுமையில் சிக்குவதோடு சட்ட விரோதமான செயல்கள் மூலம் கடனை வசூலிப்பது போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வேண்டுமென மக்கள் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், இது தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் அய்யா பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

மொபைல் ஆஃப் லோன்
மொபைல் ஆஃப் லோன்

அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் தேவையாக உள்ளன. வங்கிக்கு நேரடியாகச் சென்றோ, வங்கி ஊழியர்கள் நேரடியாக வாடிக்கையாளர்கள் இருப்பிடத்துகு வந்தோ அவர்களுக்கு வருமானம், கடன் திரும்ப செலுத்தும் திறன், ஏற்கெனவே உள்ள கடன்கள், சிபில் ஸ்கோர் போன்றவற்றை யெல்லாம் ஆராய்ந்து பின்னரே கடன் வழங்குகிறார்கள்.

ஆனால், பல தனியார் நிறுவனங்கள் வங்கி அல்லாத நிறுவனங்கள் உட்பட தனிநபர்களுக்கு மொபைல் செயலிகள் மூலமாகக் கடன் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இந்தச் செயலிகள் கடன் திரும்ப செலுத்தும் திறன் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. எந்தக் கட்டணமும் இல்லை, ஆவணங்கள் தேவையில்லை, ஒரே க்ளிக் உடனே கடன் என்ற வகையில் விளம்பரங்கள் செய்து வாடிக்கையாளர்களை வலையில் விழ வைக்கின்றன. கடன் வாங்கிய பிறகு, அதை வசூலிக்கப் பல்வேறு முறைகேடான வழிகளைப் பின்பற்று கின்றன. பெண்கள் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து மிரட்டுவது போன்ற குற்றங்களும் நடக்கின்றன.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
RBI

எனவே, இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தவும், குற்றங்களைக் குறைக்கவும் இதுபோன்ற கடன் செயலிகளுக்குத் தனி விதிமுறைகளை உருவாக்கி முறைப்படுத்த வேண்டும்" இவ்வாறு தனது மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் செயலர்கள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.