Published:Updated:

கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் கூடுதல் எச்சரிக்கை! இழப்பைத் தவிர்த்திடுங்கள்...

கிரெடிட் கார்டு பில்
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு பில்

C R E D I T C A R D

கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் கூடுதல் எச்சரிக்கை! இழப்பைத் தவிர்த்திடுங்கள்...

C R E D I T C A R D

Published:Updated:
கிரெடிட் கார்டு பில்
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு பில்

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், vbuildwealth.com

கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் அது ஒரு வரம். அதுவே விதிமுறைகள் தெரியாமல் பயன் படுத்தினால் கூடுதல் சுமையாக மாறி சாபமாகிவிடும்.

ஒருவரின் கிரெடிட் கார்டு பில் தொகை ஜூன் 1 –ம் தேதி நிலவரப்படி, ரூ.20,100 என வைத்துக்கொள்வோம். அவர் ரூ.20,000 கட்டிவிடுகிறார். சிறிய தொகையான ரூ.100 நிலுவையாக வைத்திருக்கிறார்.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
vbuildwealth.com
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர், vbuildwealth.com

நிலுவையால் ஏற்படும் பாதிப்பு...

கிரெடிட் கார்டில் இப்படி ரூ.100-ஐ பாக்கி வைப்பதால் ஏற்படும் பெரிய பாதிப்பை அறிந்தால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள்.

அவரின் பில் தேதி மே 20 என வைத்துக்கொள்வோம். அவர் அந்தத் தேதிக்குப் பிறகு உணவு உள்ளிட்ட பொருள்களை ரூ.11,000-க்கு வாங்கி இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இந்த நிலையில், பாக்கியுள்ள ரூ.100-க்கு தாமதக் கட்டணம் 3% என்கிற கணக்கில் 3 ரூபாயைக் கேட்பார்கள் என நினைத்தால் அது மகா தவறு. பில் தேதிக்குப் பின்னர் வாங்கியத் தொகையான ரூ.11,000-க்கும் 3% அபராதக் கட்டணம் அதாவது, ரூ.330 கட்ட வேண்டும். மேலும், இதன்பிறகு நடக்கும் எந்தப் பரிவர்த்தனைக்கும் (பொருள்கள் வாங்குதல்) வாங்கிய முதல் நாளிலிருந்தே வட்டி கட்ட வேண்டும்.

இது பற்றித் தெரியாமல், ஜூன் 10-ம் தேதி 9,000 ரூபாய்க்கு சில பொருள்களை அவர் வாங்குகிறார். தற்போது அவரின் பாக்கித் தொகை ரூ.20,000 ஆகும். ஒவ்வொரு பொருளுக்கும் அது வாங்கிய தேதியிலிருந்து வட்டி போடப்படும். அவரின் அடுத்த பில் ஜூன் 20-ம் தேதி வரும்போது வட்டி 600 ரூபாய் எனப் போடப்பட்டிருப்பதைக் காணலாம். சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 200 ரூபாய் சேர்க்கப்பட்டு, கூடுதலாக ரூ.800 கட்ட வேண்டும். அதாவது, இப்போது அவரின் கிரெடிட் கார்டு பில் தொகை ரூ.21,000 ஆகும். ரூ.100 கட்டாமல் விட்டதால், கூடுதலாக ரூ.800 கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் கூடுதல் எச்சரிக்கை! இழப்பைத் தவிர்த்திடுங்கள்...

கற்பிக்கும் பாடம்...

இதிலிருந்து கிரெடிட் கார்டு பயன் படுத்துபவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது மிக அவசியம். பணம் கட்டும்போது அது, கெடுதேதிக்கு (Due date) முன்னரே எந்தவொரு சிறிய தொகையையும், அதாவது, ஒரு ரூபாயைக்கூட பாக்கி இல்லாமல் செலுத்திவிட வேண்டும் என்பதாகும்.

செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை...

இதேபோல், கிரெடிட் கார்டில் பலர் கட்ட வேண்டிய மொத்தத் தொகைக்கு (Total outstanding amount), பதில், செலுத்த வேண்டிய குறைந்த பட்சத் தொகையைக் (Minimum amount due) கட்டி வருவார்கள். இது எப்போதாவது நடந்தால் பரவா யில்லை. இதையே பழக்கமாக வைத்துக்கொண்டால் வட்டிக்குச் செல்லும் தொகை அதிகரிக்கும். செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை என்பது கட்ட வேண்டிய மொத்தத் தொகையில் 5% ஆகும். இப்படிச் செய்வதன் மூலம் கையில் போதிய தொகை இல்லாத நேரத்தில் தாமதக் கட்டணத்தைத் தவிர்க்கலாம். கிரெடிட் ஸ்கோர் குறையாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், குறைந்தபட்சத் தொகை போக மீதி உள்ள தொகைக்கு வட்டி கட்ட வேண்டும். கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை, அதற்கு ஆண்டுக்கு 35 - 40% வரை வட்டி இருக்கிறது. இந்த வட்டி, பாக்கி உள்ள தொகைக்கு தினசரி கணக்கிடப்படும். மேலும், கிரெடிட் கார்டு பாக்கி இருக்கும்பட்சத்தில், உங்களுக்கு வட்டி இல்லா சலுகைக் காலம் இருக்காது. நீங்கள் வாங்கும் பொருள் களுக்கான தொகைக்கு முதல் நாள் முதலே வட்டிப் போடப்படும். மேலும், பாக்கித் தொகையைக் கட்டி முடிக்காத வரைக்கும் கிரெடிட் வரம்பு குறைக்கப்பட்டிருக்கும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்கள் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டியது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism