Published:Updated:

கிரெடிட் கார்டை யு.பி.ஐ-யுடன் இணைக்கும் திட்டம்... சாதகமா, பாதகமா?

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டை யு.பி.ஐ-யுடன் இணைக்கும் திட்டம்... சாதகமா, பாதகமா?

கிரெடிட் கார்டு

Published:Updated:
கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

இனி கிரெடிட் கார்டுகளையும் யு.பி.ஐ-யுடன் (UPI) இணைத்துக்கொண்டு பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி கூறியிருக் கிறது. ரிசர்வ் வங்கியின் முடிவால் மக்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என நிதி ஆலோசகரும் மை அஸெட் கன்சாலிடேஷன் (Myassetconsolidation.com) நிறுவனத்தின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

``ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் `ரூபே’ வகை கிரெடிட் கார்டுகளை மட்டும்தான் யு.பி.ஐ-யுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது. ரூபே வகை கார்டுகள் இந்திய வங்கிகளால் அளிக்கப் படுபவை, மாஸ்டர், விசா கார்டுகள் சர்வதேச வங்கிகளால் அளிக்கப்படுபவை. நம் நாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும் கிரெடிட் கார்டுகளில் மாஸ்டர், விசா கார்டுகளே அதிகம். இந்த நிலையில், கிரெடிட் கார்டுகளை யு.பி.ஐ-யுடன் இணைக்கும் ஆர்.பி.ஐ-யின் முடிவை நிச்சயம் வரவேற்கலாம்.

இதனால் என்ன நன்மை கிடைக்கும் எனில், இதுவரையிலும் கிரெடிட் கார்டை வைத்து ஸ்வைப்பிங் இயந்திரம் உள்ள கடை களில் மட்டும்தான் பொருள் வாங்க முடியும். இனி கிரெடிட் கார்டுகளை யு.பி.ஐ-யுடன் இணைப்பதன்மூலம் கூகுள் பே அக்கவுன்ட் வைத்திருக்கும் பெட்டிக்கடையில்கூட கிரெடிட் கார்டுமூலம் உங்களால் பொருள்களை வாங்க முடியும்.

கிரெடிட் கார்டை யு.பி.ஐ-யுடன் இணைக்கும் திட்டம்... சாதகமா,  பாதகமா?

உதாரணமாக, உங்கள் சேமிப்புக் கணக்கில் சுத்தமாகப் பணம் இல்லை. கிரெடிட் கார்டில்தான் பணப்பரிவர்த்தனை செய்து நீங்கள் ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டாக வேண்டும் என்கிற நிலையில், ஸ்வைப்பிங் இயந்திரம் வைத்திருக்கும் ஓரளவு பெரிய உணவகங்களில்தான் உங்களால் சாப்பிட முடியும். அந்த பில் தொகை உங்கள் பட்ஜெட்டுக்கு மீறியதாக இருந்தாலும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை.

ஆனால், கிரெடிட் கார்டை யு.பி.ஐ-யுடன் இணைப்பதன் மூலம், உங்கள் பட்ஜெட்டுக்கேற்ற சிறிய உணவகங்களில்கூட நீங்கள் சாப்பிட்டுவிட்டு கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பிவிடலாம். இது கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு மிகவும் நன்மை அளிப்பதாக இருக்கும்.

நம் நாட்டில் 6.64 கோடி பேர் கிரெடிட் கார்டு வைத்திருக் கிறார்கள். இவர்களில் ரூபே வகை கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும் பான்மை வகிக்கும் மாஸ்டர், விசா கிரெடிட் கார்டுகளுக்கும் யு.பி.ஐ மூலம் கடன் பெறும் வசதிகள் இணைப்பு வழங்கப்பட்டால் யு.பி.ஐ பரிவர்த்தனை இன்னும் உயரும். காரணம், ‘buy now pay later’ என்கிற முறையில் பலரும் பொருள்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதில் சில சிக்கல்கள் உள்ளன. அதாவது, மாஸ்டர், விசா கார்டுமூலம் பணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, இந்த சேவையைப் பெறுபவரிடம் இருந்து 1 - 2% கட்டணம் வசூலித்து அது சேவை தரும் நிறுவனத்துக்கு கட்டணமாகத் (Merchant Discount Rate) தரப்படும். ஆனால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி யு.பி.ஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அந்தக் கட்டணம் எவ்வளவாக இருக்கும் என இனிமேல்தான் முடிவாகும் என்பதால், கிரெடிட் கார்டுகள் யு.பி.ஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதில் சுணக்கமான நிலையே காணப்படும்’’ என்றவரிடம், இதனால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா என்று கேட்டோம்.

``நமது கார்டு, மொபைலைத் திருடிவிட்டார்கள் எனில், அதைக் கொண்டு கிரெடிட் லிமிட்டில் மீதமுள்ள பணத்தைத் திருடிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. விழிப்புணர்வு இல்லாதவர்களிடம், வங்கி யிலிருந்து பேசுவதாகக் கூறி, கார்டு எண், சி.வி.வி எண் உள்ளிட்டவற்றை வாங்கி, ஓ.டி.பி-யும் வாங்கி பணத்தைத் திருடலாம். இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு என்பதற் காக இஷ்டத்துக்கு செலவு செய்யும் மனநிலையும் பலரிடம் இருக்கிறது. நாம் செய்யும் செலவுகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல் பட்டால், பிரச்னை எதுவும் வராது’’ என்று பேசி முடித்தார் சுரேஷ் பார்த்தசாரதி.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இத்தகைய விஷயங்களில் கவனத்துடன் செயல் படுவது அவசியம்.

தாமஸ் ஃப்ராங்கோ
தாமஸ் ஃப்ராங்கோ

‘‘மோசடிகளை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது!’’

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது நிறைய மோசடிகளை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோ.

“பொதுவாகவே, யு.பி.ஐ-யில் பாதுகாப்பு இல்லை. நிறைய பேர் மோசடிக் கும்பலால் பணத்தை இழந்திருக்கின்றனர். மோசடி செய்ய எளிதான முறையாக யு.பி.ஐ இருக்கிறது. பென்ஷன் வாங்குகிற முதியோர்கள் பலரும் வங்கியிலிருந்து அழைப்பதாக நம்பி ஏமாந்துபோகின்றனர். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஊழியர்களிடம் பேசியதில், எளிதில் மோசடி நடப்பதற்கான சாத்தியங்கள் யு.பி.ஐ-யில் அதிகம் இருப்பதாக அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இது போன்று மோசடிப் புகார்கள் ஆயிரக்கணக்கில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்பக் கிடைப்பதில்லை. இந்த நிலையில், கிரெடிட் கார்டையும் யு.பி.ஐ-யுடன் இணைத்தால், எளிதில் பெரும் தொகையை மோசடிமூலம் இழக்கும் நிலை உருவாகும். யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் மோசடி நடந்துவிடாதபடி அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism