Published:Updated:

கிரெடிட் கார்டு... பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகள்! - 10 எச்சரிக்கை டிப்ஸ்

C R E D I T C A R D

பிரீமியம் ஸ்டோரி

கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை...

வி.தியாகராஜன் 
ஆடிட்டர்
வி.தியாகராஜன் ஆடிட்டர்

1. எந்தக் காரணத்தைக் கொண்டும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வேறு ஒருவரிடம் பயன்படுத்தத் தராதீர்கள். நீங்களே நேரடியாகச் சென்று கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன் படுத்துங்கள்.

2. OTP, CVV, PIN, UPI MPIN-யை யாரிடமும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பகிராதீர்கள்!

3. கடைகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது உங்களின் பார்வையில் இருக்குமாறு பயன்படுத்துவது சிறந்தது.

4. ஆன்லைனில் பொருள்கள் வாங்கும்போது அது பாதுகாப்பான வலைதளம்தானா என்று உறுதி செய்துகொண்டு பொருள்கள் வாங்கவும். ஷாப்பிங் வலைதள முகவரி https:// என்று இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பொருள்கள் ஆர்டர் கொடுக்கவும். என்னதான் பாதுகாப்பான வலைதளமாக இருந்தாலும் அதில் உங்களின் கடன் அட்டை பற்றிய விவரங்களை சேகரித்து வைப்பதைத் தவிர்க்கவும்.

5. மெயிலிலோ, வாட்ஸ் அப்பிலோ வரும் சந்தேகத்துக்கிடமான வலைதள முகவரி லிங்குகளையும் க்ளிக் செய்ய வேண்டாம். மெயிலிலும் வாட்ஸ் அப்பில் வரும் சந்தேகத்துக்கு இடமான இணைப்புகளையும் திறக்க வேண்டாம்.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

6. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தும்போது, அந்த விவரங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் வசதியையும், உங்களின் மெயிலுக்கு தகவல் வரும் வசதியையும் தங்களின் வங்கிக் கணக்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பரிவர்த்தனை நடந்தாலும், அது தங்களுக்கு குறுஞ்செய்தியாக வரும். அதை வைத்து உடனடி நடவடிக்கை களை மேற்கொள்ளலாம்.

7. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விவரங்களை மற்றவர் களுக்குத் தெரியுமாறு எங்கும் எழுதி வைக்காதீர்கள். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் ‘பின்’ (PIN) எண்ணை மாதத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. அந்த ‘பின்’ எண்ணை அந்த அட்டையிலேயே எழுதி வைக்காதீர்கள். இந்த மாதிரி பாஸ்வேர்டு்களையும், ‘பின்’ எண் களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு என்றே சில செயலிகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி அந்த பாஸ்வேர்டையும் ‘பின்’ எண்ணையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்தச் செயலிகள்மூலம் தகவல் திருடப்பட வாய்ப்பிருக்கிறதா என்பதைக் கவனிப்பதும் அவசியம்.

8. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள விவரங்களை நண்பர்களோ, உறவினர்களோ, வங்கியிலிருந்தோ தொடர்பு கொண்டு கேட்டால் தயவுசெய்து தராதீர்கள். வங்கியிலிருந்து தொடர்பு கொள்கிறோம் என்று சூழ்ச்சி செய்து தங்களிடம் உள்ள கடன் மற்றும் பற்று அட்டைகளின் விவரங்களை வாங்கி மோசடிகள் செய்து விடுவார்கள்.

9. இணையத்திலிருந்து எந்த விதமான செயலியைத் தரவிறக்கி பயன்படுத்தினாலும் அது பாதுகாப் பான செயலிதானா என்று உறுதிப் படுத்திக்கொண்டு பயன்படுத்துவது நல்லது. யாரேனும் உங்களுக்கு வாட்ஸ் அப்பிலோ, குறுஞ்செய்தியிலோ லிங்க் அனுப்பி, இந்தச் செயலியைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினால் தயவுசெய்து செய்யாதீர்கள். அந்தச் செயலி மூலமாகத் தங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விவரங்களைப் பெற்றுக்கொண்டு, மோசடிப் பேர்வழிகள் கைவரிசையைக் காட்டி விடுவார்கள்.

10. கிரெடிட் கார்டைப் பயன் படுத்த வேண்டும் என்றால் மட்டுமே அதை வெளியில் கொண்டுபோக வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் வைத்து விட்டுச் செல்வதே சரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு