கிரெடிட் கார்டு என்பது கணக்கில் பணம் இல்லாமல் பொருள்களை வாங்குவ தற்கான ஓர் அட்டை. இதைத் தமிழில் கடன் அட்டை என்று சொல்லலாம். நீங்கள் வாங்கிய பொருளுக்கான பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த கிரெடிட் கார்டு கம்பெனிக்குச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை எனில், அது கடனாக ஏற்கப்பட்டு அதற்கான வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு குறித்து பலரும் அடிக்கடி கேட்கும் கேள்விகளும் அதற்கான பதில்களும் இனி...

கிரெடிட் கார்டுக்கும் டெபிட் கார்டுக்கும் என்ன வித்தியாசம்?

“கணக்கில் பணம் இல்லாமல் செலவு செய்வதற்கு கிரெடிட் கார்டு உதவும். டெபிட் கார்ட், உங்கள் சேவிங்ஸ் அக்கவுன்டில் இருக்கும் பணத்தை எடுக்க, அதன் மூலம் பொருள்களை வாங்கப் பயன்படும்.”

எதன் அடிப்படையில் கிரெடிட் கார்டு் கொடுக்கப்படுகிறது?

“ஒருவருடைய வருமானத்தின் அடிப்படையில், கிரெடிட் கார்டு கொடுக்கப்படுகிறது. அத்துடன் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) என்ற விவரத்தில் அடிப்படையில் கடன் அட்டை வழங்குவது முடிவு செய்யப்படுகிறது. சிலருக்கு அதிக வருமானம் இருக்கும். ஆனால், அவர்களின் பணி ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைப்பது கடினம்.”

ஒருவரே பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது நல்லதா?

‘‘ஒருவர் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் பல நேரங்களில் மாதம் செலுத்த வேண்டிய தவணை தவறி விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.அத்துடன் ஓர் ஒழுங்கு இல்லாமல் பல இடங்களில் அநாவசியமான செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு சுயகட்டுப்பாடு இருக்கும்பட்சத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் வைத்துக்கொள்ளலாம். இருந்தாலும் இரண்டுக்கும் மிகாமல் இருப்பது சாலச் சிறந்தது.”

கிரெடிட் கார்டு வாங்க இதற்கு முன்னால் கடன் வாங்கியிருக்க வேண்டுமா?

“கிரெடிட் கார்டு கிடைப்பதற்கு, ஒருவர் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தி இருக்க வேண்டிய அவசியமில்லை. பலர், நிதி ரீதியாக பலமாக இருப்பார்கள். அவர்கள் கடன் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. இது மாதிரியானவர்களுக்கு அவர் களுடைய வருமானத்தின் அடிப் படையில் கிரெடிட் கார்டு கொடுக்கப் படுகிறது.”

ஆண்டு சந்தா இல்லாமல் கிரெடிட் கார்டு கிடைக்குமா?

“உங்களுடைய வருமானம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், ஆண்டுச் சந்தா இல்லாமல் உங்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்கக்கூடும். இன்றைக்கு சில பொதுத்துறை சார்ந்த வங்கிகள் ஆண்டு சந்தா அடிப்படையில் கிரெடிட் கார்டு கொடுக்கின்றன. ஆண்டுச் சந்தா இல்லாமல் வாங்கினாலும் அதற்கான பயன் பெரிய அளவில் மாற்றம் இருப்பதில்லை.”

கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

“கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பாக பண விஷயத்தில் உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இருக்கிறதா, உங்களுக்கு மாத வருமானத்தில் சேமிக்கும் பழக்கம் இருக்கிறதா அல்லது குடும்பச் செலவு போக ஏதேனும் உபரி நிதி இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின் கிரெடிட் கார்டு வாங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஏனென்றால், உங்களிடம் மாதச் சேமிப்பு பழக்கம், உபரி நிதி இல்லை என்றால், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் கடனாளி ஆவது உறுதி.”

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

“நிதிப் பரிவர்த்தனைகள் அதிகளவில் டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. கூடவே, மோசடிகளும் அதிகரித்துவிட்டன. உங்களுடைய கிரெடிட் கார்டை உபயோகிக்கும்போது சரியான செலவு மற்றும் பாதுகாப்பான இடத்தில் உபயோகிக்கிறீர்களா என்று பார்க்க வேண்டும். அத்துடன் ஏதாவது பொருள் வாங்க உபயோகித்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் எஸ்.எம்.எஸ்-ஐ பார்த்து நீங்கள் செலவு செய்த தொகை சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வெளிநாட்டில் பணப் பரிவர்த்தனை செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனில், உங்கள் கார்டை ஹேக்கிங் செய்ய வாய்ப்புள்ளது.

நீங்கள் சராசரியாக மாதச் செலவு எவ்வளவு செய்வீர்களோ, அதைப்போல் இரண்டு, மூன்று மடங்கு கார்டு லிமிட் வைத்துக்கொள்வது நல்லது. உங்கள் கார்டில் நீங்கள் செலவு செய்யாமல் ஏதேனும் எஸ்.எம்.எஸ் வந்தால், உடனடியாக கிரெடிட் கார்டு கம்பெனியை அணுகி, புகார் தெரிவிப்பது அவசியம்.”

கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச தொகையைத் தொடர்ந்து கட்டிவருவது நல்லதா?

‘‘குறைந்தபட்ச தொகையைத் (minimum due) தேர்வு செய்து கிரெடிட் கார்டில் திருப்பிச் செலுத்துவது மிகவும் அபாயகர மானது. ஏனென்றால், கிரெடிட் கார்டின் வட்டி விகிதம் மிகவும் அதிகமானது. முழுப் பணத்தையும் திருப்பிச் செலுத்த இயலாதபோது கிரெடிட் கார்டு நிறுவனத்தை அணுகி, அவர்களிடம் பாக்கி தொகையைத் தவணைக் கடனாக மாற்றுவது புத்திசாலித்தனம்.”

நான் வாங்கிய கிரெடிட் கார்டு கடனை சில காரணங்களால் குறைந்த பட்ச தவணையைக்கூட கட்ட முடியாத நிலையில் இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?

“கோவிட்-19 வைரஸ் பரவல் போன்ற எதிர்பாராத நெருக்கடி யான காலகட்டத்தில் கிரெடிட் கார்டு குறைந்தபட்ச தொகை செலுத்த முடியவில்லை எனில், அதை எப்படியாவது அடைக்க ஏற்பாடு செய்யவும். காரணம், ஆண்டுக்கு குறைந்தபட்ச வட்டி 36 - 45% வரை வசூலிக்கப் படுவதாகும். இந்தக் கடனை அடைக்க வேலை பார்க்கும் நிறுவனத்தில் கடன் வாங்கலாம் அல்லது நீங்கள் நல்ல நிறுவனத்தில் பணி செய்வதாக இருந்தால், பர்சனல் லோன் வாங்கலாம். இதைவிட உங்களிடம் தங்கம் இருந்தால், அதை அடகு வைத்து கிரெடிட் கார்டுக்கான தொகையைத் திரும்பக் கட்டி விடலாம். தங்க நகை கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு என்பதால், அதைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.”

கிரெடிட் கார்ட்டில் பொதுவாக செய்யும் தவறுகள் என்னென்ன?

“சுயக்கட்டுப்பாடு இல்லாத வர்கள் அதிகமாகச் செலவு செய்வதற்கு வாய்ப்புள்ளது. கையில் பணம் இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் செலவு செய்வ தற்கு ஒரு கட்டுப்பாடு இருக்கும். கிரெடிட் கார்டில் லிமிட் சில லட்சம் இருந்தால் தேவையில்லாத செலவுகள் செய்ய வாய்ப்புள்ளது. உங்களுடைய நிதிநிலை சரியில்லாத நிலையில் கிரெடிட் கார்டை வீட்டில் வைத்துவிட்டு ஷாப்பிங் செய்ய செல்வது நல்லது. இல்லை எனில், நீங்கள் மினிமம் டியூ கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.”

அடிஷனல் கிரெடிட் கார்டு என்பது என்ன?

“உங்கள் கிரெடிட் கார்டின் மூலம் குடும்பத்தாருக்கு யாருக்கு தேவையோ, அவர்களுக்கு அடிஷனல் கார்டு வாங்கிக் கொடுக்க முடியும். கொடுக்கும் போது கார்ட் லிமிட்டைக் குறைத்துக் கொடுப்பது நல்லது. இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் படிப்பதற்கு வெளியூர் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்போது அவர்களிடம் போதிய பணம் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது போன்ற நேரங்களில் இந்த அடிஷனல் கார்டு பயனுள்ளதாக இருக்கும்.’’

அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு எந்த மாதிரியான கிரெடிட் கார்டு தேவைப்படும்?

‘‘கிரெடிட் கார்டை உபயோகிக்கும்போது அதற்காக கிரெடிட் பாயின்ட்கள் கொடுப்பது வழக்கம். இது ஒரு வியாபார உத்தி. உங்கள் கிரெடிட் கார்டு வகையைப் பொறுத்து அதற்கான ரிவார்ட் பாயின்ட்கள் கிடைக்கும். நீங்கள் அதிகம் பயணம் செய்வதாக இருந்தால், அதற்காக உள்ள ஸ்பெஷல் கார்டை வாங்கிக் கொள்ளவும். நீங்கள் நினைத்த நேரம் எல்லாம் பயணம் செய்பவராக இருந்தால், ஏர்போர்ட் லவுன்ச்சில் (lounge) உணவு உட்கொள்ள முடியும். இதற்கான செலவு மிக மிகக் குறைவு. இந்த கார்டு இருந்தால், அளவில்லா உணவுகளை ரூ.2 - 25-க்கு சாப்பிட முடியும்.”

சிறுவர்களுக்கு கிரெடிட் கார்டு வாங்க முடியுமா?

“சிறுவர்களுக்குத் தனியாக கிரெடிட் கார்டு வாங்க இயலாது. பெற்றோர், அவர்களுடைய கார்டின் மூலம் அடிஷனல் கார்டுகளைப் பெற்று பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியும்.

கிரெடிட் கார்டில் எப்போது பணம் எடுத்துச் செலவு செய்யலாம்?

“எமர்ஜென்சி காலகட்டத்தில் உங்களிடம் பணம் இல்லை என்றால், அத்துடன் வேறெந்த வாய்ப்பும் இல்லை என்கிற பட்சத்தில் மட்டுமே கிரெடிட் கார்டில் பணம் எடுப்பது பற்றி யோசிக்க வேண்டும். பணம் எடுத்த நாளிலிருந்தே வட்டி போடுவது தொடங்கிவிடும். இதை மனதில் வைத்துக்கொண்டு பணத்தை ஏ.டி.எம்மில் எடுக்க வேண்டும்."

கிரெடிட் கார்ட்டைப் பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா?

“கிரெடிட் கார்டு வாங்குவதில் தவறில்லை. எனக்கு தெரிந்த ஒரு நபருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இரவில் அவர் தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். ஆனால், அப்போது அவரிடம் பணம் இல்லை. இப்போது இருப்பதுபோல் அப்போது அவ்வளவாக ஏ.டி.எம் வசதியும் இல்லை. கிரெடிட் கார்டு இருந்ததால் அவர் தந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது அதை ஆராய்ந்து அதை உபயோகிப்பது புத்திசாலித்தனம்.”