Published:Updated:

“கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா?” வாசகர்களின் கணீர் கமென்ட்ஸ்

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

I N T E R A C T I O N

“கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா?” வாசகர்களின் கணீர் கமென்ட்ஸ்

I N T E R A C T I O N

Published:Updated:
கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

நம்ம நாட்டுல கிரெடிட் கார்டு யூஸ் பண்றவங்க குறைவுதான். இதனால நிறைய நன்மைகள் இருக்கு. சில தீமைகளும் இருக்கு. மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்க “கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா? ஏன்..?” அப்படின்னு ஒரு சீரியஸான கேள்வியை நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் ஒரு கேள்வி கேட்டோம். இதற்கு வாசகர்கள் தங்களுடைய அனுபவத்தில் இருந்து கமென்ட் செய்திருந்தார்கள். அவர்களின் கணீர் கமென்ட்ஸில் இருந்து சில...

“தீக்குச்சி மாதிரிதாங்க இந்த கிரெடிட் கார்டும். விளக்கையும் ஏற்றலாம் குடிசையையும் பற்ற வைக்கலாம். இதனால நன்மையும் இருக்கு. தீமையும் இருக்கு. கிரெடிட் கார்டு கைக்கு வந்த பிறகு தேவை இல்லாத அனைத்தையும் வாங்க சொல்லும். நோய், பகை, கடன் இல்லா வாழ்வே நல்லது. அதனால உங்க கிரெடிட் கார்டை முடிந்தவரை அளவோடு பயன்படுத்தவும்”னு அறிவுரை வழங்கியிருக்காரு பிரசன்ன நாராயணசாமி. கருத்து கந்தசாமியா இருக்கீங்களே ஜி!

“எதை எந்த நேரத்தில் வாங்கணும், வாங்க கூடாது என்ற பக்குவம் இருந்தால் மட்டும் கிரெடிட் கார்டுல கையை வைங்க”ன்னு மிரட்டல் தொனியில அலர்ட் கொடுத்துக்காரு அப்துல் ரஹ்மான். ரைட்டு!

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

“கிரெடிட் கார்டு, காசு இல்லாதவர் களுக்கு அட்சய பாத்திரம்”னு கமென்ட் பண்ணிருக்காரு கண்ணன். ஆனா, எடுத்த காசை எல்லாம் திரும்ப கட்டணுமே சார், அதுக்கு எங்க போறது?

“ஏழைகளுக்கு அது ஒரு சாபம், பணக்காரர்களுக்கு அது சுபம்”னு பதிவிட்டிருக்காரு ஜெயப்பிரகாஷ். ‘நச்’ கமென்ட்.

“கிரெடிட் கார்டைப் பொறுத்த மட்டில் இ.எம்.ஐ-ஆக மாற்றிக் கொண்டால் நல்லது. இல்லை யென்றால் மீட்டர் வட்டியைவிட மோசம்”னு பிராக்ட்டிகல் டிப்ஸ் கொடுத்துருக்காரு பெருமாள் மாணிக்கம். தேங்ஸ்ப்பா...

“தொடக்கூடாது... தொட்டால் விடாது. பெரிய நிறுவனங்களில் பணிபரியும் மேலாளர் போன்றோர் பணி நிமித்தம் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்வோர்க்கு கிரெடிட் கார்டு பயன்தரும். பாமரனுக்கு இது பெரும் சுமையே”ன்னு சொல்லிருக் காரு சேவியர் ஜோசப். கிரெடிட் கார்டு விடாது கறுப்பு போல..!

“அது கிரெடிட் கார்டு அல்ல; கழுத்தை நெரிக்கும் தூக்குக் கயிறு”னு கமென்ட் பண்ணிருக்காரு செல்வம் மணி. ஆத்தி!

“அநாவசிய செலவு பண்றது தெரியாம பண்ணிருவோம். கடைசில மொத்தமா கட்டும்போதுதான் தெரியும் வலி”னு குமுறியிருக்காரு முஹமது அர்ஷாத். அச்சு அசல் அனுபவபூர்வமான வார்த்தைகள்...

“மற்றவர்கள் தரும் நமக்கு சொந்தமில்லாத பணம் என்றுமே ஆபத்துதான். என்னதான் பிளான் பண்ணி ஆன்டைம் பேமன்ட் செய்தாலும் கிரெடிட் கார்டு ஆபத்துதான்”னு சொல்லிருக்காரு காசி சின்னத்தம்பி. சின்னத்தம்பி, நீங்க பெரீய தம்பி..!

“கிரெடிட் கார்டு நல்லதுங்க. கையில் பணம் இல்லை என்ற கவலை தேவையில்லை. அதே சமயம், கார்டு இருப்பதால் அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எந்த வங்கியோட கார்டை யூஸ் பண்றோம், எது ரிவார்ட்ஸ் அதிகம்னு பார்த்து வாங்கினா நல்லது”னு வழிகாட்டி இருக்காரு. பூவரசன்! எந்த விஷயமா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணணும். ஓகே!

இவர்களைத் தவிர இன்னும் நிறைய பேர் கமென்ட் பண்ணிருந் தாங்க. எல்லாருமே குறிப்பிட்டிருந்த பொதுவான ஒரு கருத்து என்னென்னா... “அவசர பண தேவைக்கு கிரெடிட் கார்டு பயன் படுத்துறது நல்லதுதான். ஆனா, அதைப் பயன்படுத்தி அநாவசிய செலவு செய்வதைத் தவிருங்கள்.’’