Published:Updated:

``பிசினஸ்மேன்களை விடுத்து அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களைக் கொண்டாடுகிறோம்" - சீறும் தொழிலதிபர்!

புத்தக வெளியீடு

கொங்கு மண்டலத்தின் தொழில் துறை சாதனையாளர்களில் முக்கியமானவராக அறியப்படுபவர் ஏ.வி.வரதராஜன். இவரது ஏ.வி.வி குரூப் தொழில் நிறுவனம் சுமார் 3,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

``பிசினஸ்மேன்களை விடுத்து அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களைக் கொண்டாடுகிறோம்" - சீறும் தொழிலதிபர்!

கொங்கு மண்டலத்தின் தொழில் துறை சாதனையாளர்களில் முக்கியமானவராக அறியப்படுபவர் ஏ.வி.வரதராஜன். இவரது ஏ.வி.வி குரூப் தொழில் நிறுவனம் சுமார் 3,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

Published:Updated:
புத்தக வெளியீடு

வேலை இல்லை என்ற திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகித்தான் வருகிறது. படித்த இளைஞர்களிடையே படித்துவிட்டேன் படித்த படிப்புக்கான வேலை இல்லை என்று, இன்னும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கோவையின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஏ.வி.வரதராசன், ``கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா, இல்லையா” என்கிற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

கொங்கு மண்டலத்தின் தொழில்துறை சாதனையாளர்களில் முக்கியமானவராக அறியப்படும், இவரது ஏ.வி.வி குரூப் தொழில் நிறுவனம் சுமார் 3,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா, இல்லையா
கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா, இல்லையா

ஏ.வி.வரதராஜன் எழுதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சிறப்பு விருந்தினரான கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இயகோகா சுப்ரமணியம், ``ஏ.வி.வரதராஜன் சிறந்த தொழில்முனைவோர்; இவர் தன்னுடைய தொழிலை 1987-ல் தொடங்கி பல தொழில்முனைவோர்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.

தொழில்துறையில் வளர்ச்சி கண்டுவரும் நாம் வேலையில்லை என்பதற்கு இடமில்லை. ஏனென்றால், இந்தியர்களுக்கு தொழில்களில் அதிக நாட்டமும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கு தொழிலில் வளர்ச்சி பெறக்கூடிய நல்ல மூளையும் உள்ளது. அது மட்டுமல்லாமல், வேலையில்லை என்று நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு இருக்கிறோம். வேலை என்பதை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நம் இந்தியாவிலேயே நல்ல தொழில்முனைவோர்களும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு இடையூறாக இருப்பது இங்குள்ள சிஸ்டம்தான். அதாவது, மற்ற நாடுகளில் எல்லாம் தொழில்முனைவோர் என்றாலே நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும்‌. ஆனால், நம் நாட்டில் தொழில்முனைவோர் மீதுள்ள பார்வையே வேறு; ஏதோ தொழில்முனைவோர்கள் என்றாலே அவர்கள் மக்களை அடிமையாகவும் அவர்களின் உழைப்பை சுரண்டுபவர்களாகவும் பார்க்கிறார்கள். அது மட்டுமல்லாமல், தொழில் நிமித்தமாக ஏதேனும் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு லஞ்சமாகவும், பரிசாகவும் மற்றவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. ஊழல் இல்லாமல் எந்த நாடும் இல்லை. இருப்பினும், நம் நாட்டில் ஊழல் சற்று அதிகமாகவே உள்ளது. அப்படிப்பட்ட சூழலையும் கடந்துதான் ஒவ்வொரு தொழில் முனைவோரும் தொழிலை செய்துவருகிறோம்.

ஐயகோகா சுப்பிரமணியம்
ஐயகோகா சுப்பிரமணியம்

தொழில்முனைவோர்கள்தான் நாட்டின் உண்மையான தலைவர்கள் என்பதை மறந்துவிட்டு அரசியல்வாதிகளையும், சினிமா துறையில் உள்ளவர்களையும் தலைவர்களாக நாம் போற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே தொழிலாளர்கள்தான் உண்மையான தலைவர்கள். ஏனென்றால், மற்றவர்களுக்குக் கொடுத்து வந்தவர்கள்தான் நாங்கள். கொரோனா காலத்தில்கூட எத்தனையோ குடும்பங்கள் வேலையை இழந்து இருந்தன. ஆனால், தொழில்துறையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு நாங்கள் முறையான சம்பளம் கொடுத்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலனையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.

தொழிலை அறத்தோடு நிர்வகிப்பதுதான் தொழில் செய்வது. அது போல கொடுத்து வந்தவர்கள்தான் நாங்கள். தலைவன் என்பவன் தொழில் செய்து சோறு போடுபவன். தொழில் செய்வது பாவம் போல் பேசப்படும் உலகில் அதை சேவையாக செய்பவர்கள்தான் அதிகம். தொழில் என்பது எவ்வளவு கோடி என்பதில்லை, எத்தனை பேர் வேலை செய்கிறார் என்பதுதான்.

தொழிலதிபர்கள் வசதிகளை அனுபவிப்பதில்லை. தொழிலை பற்றி மட்டும்தான் நினைத்துகொண்டு இருக்கிறார்கள். தொழில்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தொழில் செய்ய வேண்டிய நேரத்தைவிட வரி தொடர்பான விஷயங்களைப் பார்ப்பதற்குத்தான் அதிக நேரம் செலவிடுகிறோம்.

உள்நாட்டு உற்பத்தியை மதிக்காதது போலவே, உள்நாட்டுப் படிப்பையும், தொழிலையும் யாரும் மதிப்பதில்லை. ஒவ்வொரு இந்தியனும் பிறக்கும்போதே எம்.பிஏ பட்டதாரிதான். பிறகு எதற்கு வெளிநாட்டு எம்.பி.ஏ குழந்தைகளின் சிந்தனைகளை மாற்ற வேண்டும். இந்தியர்களால் முடியாது என்றால் இறைவனாலும் முடியாது.

ஏ.வி.வரதராஜன்
ஏ.வி.வரதராஜன்

உற்பத்தி அதிகமானால் தொழில்துறை வளரும், தொழில்துறை வளர்ந்தால் நாடு வளரும், நாடு வளர்ந்தால் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நன்மை அடைவார்கள். இந்தக் கருத்துகளைத்தான் இந்தப் புத்தகத்தின் ஏ.வி.வரதராசனும் தனது 60 ஆண்டுக்கால தொழில் அனுபவத்தின் சாரத்தை ரத்தம் சிந்தி எழுதியிருக்கிறார்’’ என்று பேசினார் இயகோகா சுப்ரமணியம்.

அவரைத் தொடர்ந்து புத்தக ஆசிரியர் ஏ.வி.வரதராசன் பேசினார். ``நம் நாட்டில் தொழில் வளர்ச்சி பின்தங்கும் நிலை உருவாகி இருக்கிறது. சிறு தொழிலைவிட குறுந்தொழில்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.

இந்தியாவில் பணம் இல்லை என்பது தவறு. நிறைய பணம் உள்ளது. ஆனால், அப்பணத்தைத் தொழில் வளர்ச்சிக்கு ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்தப் புத்தகம், இருக்கும் தொழிலை மேம்படுத்துவதற்காக அல்ல. புதிய தொழில்களை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகத்தான். எனது 60 ஆண்டுக் கால தொழில் சார்ந்த அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்’’ என்று பேசி முடித்தார் ஏ.வி.வரதராஜன்.

தொழில் வளர்ச்சி குறித்து, தமிழகத்தின் தொழில் வரலாறு குறித்தும் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கலாம்!