Published:Updated:

கிரிப்டோகரன்சியில் `Insider Trading’ அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

கிரிப்டோகரன்சி ( cryptocurrency )

கிரிப்டோகரன்சி முதலீடு குறித்த சர்சைகள் போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில்தான், முதன்முறையாக கிரிப்டோ சந்தையில் உள் வர்த்தகம் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சியில் `Insider Trading’ அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

கிரிப்டோகரன்சி முதலீடு குறித்த சர்சைகள் போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில்தான், முதன்முறையாக கிரிப்டோ சந்தையில் உள் வர்த்தகம் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Published:Updated:
கிரிப்டோகரன்சி ( cryptocurrency )

கிரிப்டோ சந்தையில் முதன்முறையாக உள் வர்த்தகம்  (Insider Trading) நிகழ்ந்துள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரோ, நிர்வாகிகளோ அந்த நிறுவனத்தின் தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொண்டு தனக்கு நிதி ஆதாயம் கிடைக்கும் வகையில், பங்குகளிலும், பத்திரங்களிலும் வர்த்தகம் செய்வதே உள் வர்த்தகம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு நியாயமற்ற செயல். 

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து சமீபத்தில் பொதுவெளியில் பேசிய ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர். கிறிஸ்டின் லகார்ட், ``கிரிப்டோகரன்சி என்பது மதிப்பில்லாதது. ஒரு பைசாவுக்குக்கூட பிரயோஜனம் இல்லாதது. நம்பகத்தன்மையற்றது. கிரிப்டோகரன்சி என்பது எதை அடிப்படையாகக் கொண்டது என்ற எந்தவித தகவலும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனவே, அவற்றை உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசுகளும் கட்டுப்படுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் எந்தவித விதிகளும் இல்லாமல் இருக்கும் கிரிப்டோகரன்சியில் ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது. அது ஆரம்பத்தில் நல்ல லாபத்தைத் தருவதுபோல் இருந்தாலும் பின்னாளில் மிகமோசமான ஏமாற்றத்தைத் தரும். குறிப்பாக, இளைஞர்கள் கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதேபோல கிரிப்டோகரன்சி குறித்து பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான வாரன் பஃபெட், ``மிகக் குறைந்த விலையில் கிரிப்டோகரன்சியை என்னிடம் கொடுத்தாலும் அதை நான் வாங்க மாட்டேன். ஏனெனில், அது பயனற்ற முதலீடு" எனத் தெரிவித்திருந்தார்.

இப்படி கிரிப்டோகரன்சி குறித்து மோசமான கமென்ட்கள் இருந்தாலும், எலான் மஸ்க் மாதிரியான ஆட்கள் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். இந்த முதலீடு குறித்த சர்சைகள் போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில்தான், முதன்முறையாக கிரிப்டோ சந்தையில் உள் வர்த்தகம் நிகழ்ந்துள்ளது கண்டறியப் பட்டுள்ளது.

NFT
NFT

NFT என்பது மாற்ற முடியாத டிஜிட்டல் டோக்கன். NFT-க்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாக OpenSea உள்ளது. சந்தைப்படுத்த உள்ள NFT-க்களின் விவரங்களை OpenSea ரகசியமாக வைத்து இருக்கும். OpenSea யின் முகப்பு பக்கத்தில் NFT-ன் அம்சங்கள் பதிவிட்ட பின்னரே, அதை வாங்க முன்வருவோர் பணத்தைக் கொடுத்து வாங்குவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிறுவனத்தில் முன்னாள் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வந்த 31 வயதான நதானியேல் சாஸ்டெய்ன் நியூயார்க் நகரம் மன்ஹாட்டனில் வசித்து வருகிறார். இவர் நிறுவனத்தின் ரகசிய தகவல்களைப் பயன்படுத்தி வெவ்வேறு 11 சந்தர்ப்பங்களில் சுமார் 45 NFT-க்களை வாங்கியுள்ளார்.

opensea
opensea

அதாவது, சாஸ்டெய்ன் எந்த NFT-கள் முகப்பு பக்கத்தில் இடம்பெற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, முகப்பு பக்கத்தில் அந்த NFT-க்கள் தோன்றிய சிறிது நேரத்திலேயே NFT-களை அவர் வாங்கியுள்ளார். பிறகு, வாங்கியதைவிட இரண்டு முதல் ஐந்து மடங்கு லாபத்தில் விற்றுள்ளார். எனவே, கிரிப்டோ சொத்துகளில் உள் வர்த்தகம் செய்ததாக சாஸ்டெய்ன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism