Published:Updated:

இந்தியப் பொருளாதாரத்தை சரி செய்ய கூடுதல் பணத்தை அச்சடிக்கலாமா? சாதக, பாதகங்கள் என்னென்ன?

பணம் அச்சடிப்பு
பிரீமியம் ஸ்டோரி
பணம் அச்சடிப்பு

MONEY

இந்தியப் பொருளாதாரத்தை சரி செய்ய கூடுதல் பணத்தை அச்சடிக்கலாமா? சாதக, பாதகங்கள் என்னென்ன?

MONEY

Published:Updated:
பணம் அச்சடிப்பு
பிரீமியம் ஸ்டோரி
பணம் அச்சடிப்பு

கடந்த 2020-ம் ஆண்டில் காரசாரமாக விவாதிக்கப் பட்ட பணத்தாள் அச்சடிப்பு விவகாரம், தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக் கிறது. கடந்த வாரத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைக் கூட்டத் தொடரில், ‘பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் உள்ளதா?’ என மக்களவை உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “2020-21-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3% வீழ்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் வழங்கப் படுவதால், பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருக்கின்றன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் காரணமாக 2020-21-ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதை உறுதியாக இருக்கிறது. அதனால், புதிய பணத்தாள்கள் அச்சிடுவதற்கான யோசனை மத்திய அரசுக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை சரிசெய்வதற்காக அதிக அளவில் பணத்தாள்களை அச்சிடலாமா, அப்படி அச்சிட்டால் எதிர்மறையான விளைவுகள் உருவாகுமா என்பதைத் தெரிந்து கொள்ள பொருளாதார அறிஞர் சோம வள்ளியப்பனிடம் பேசினோம்.

சோம வள்ளியப்பன்
சோம வள்ளியப்பன்

பணவீக்கமும் பண அச்சடிப்பும்!

“எந்தக் கணக்கும் இல்லாமல் பணத்தாள்களை அச்சடித்துக் கொண்டே இருந்தால், பணவீக்கம் அதிகமாகும். பொதுவாக, அதைக் கண்காணிக்க வெவ்வேறு ஃபார் முலாக்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று, ஒரு நாட்டின் உற்பத்தி விகிதத்தை (GDP) அடிப்படையாக வைத்து ரூபாய் நோட்டுகளை அச்சிடும் கணக்கை நிர்ணயிப்பதாகும். இதுதான் மிகச் சரியான ஃபார்முலா. இதைத்தான் இந்திய அரசும் ஃபாலோ செய்ய நினைக்கிறது.

கோவிட் -19 தொற்று காரணமாக இந்தியாவின் அனைத்துத் துறைகளும் பேராபத்தைச் சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, உற்பத்தித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம், பொருள்களுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. பொருள் களுக்கான தேவை அதிகமாக இருந்து, அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்போது பணவீக்கம் அதிகமாகும்.

ஏற்கெனவே பணவீக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், புதிய பணத்தாள்களை அச்சிடுவது மேலும் பணவீக்கத்தை அதிகப்படுத்தவே செய்யும். அதனால்தான் மத்திய அரசாங்கம் பணத்தாள்கள் அச்சிடுவதை நிறுத்தி வைத்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் போது, அதற்கு இணையான புதிய பணத்தாள்கள் அச்சிடுவதை அரசு அப்போது பரிசீலனை செய்யும் என நான் நினைக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு நாட்டின் ஜி.டி.பி விகிதம் மைனஸில் இருந்தால், புழக்கத்தில் உள்ள குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப எடுத்துக்கொள்ளலாம். நிலைமை சரியாகி, உற்பத்தி அதிகரிக்கும்போது அதிக அளவில் பணத்தாள்களை அச்சிட்டு மீண்டும் புழக்கத்துக்கு விடலாம்.

இன்னும் சில நாடுகள், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கம், அந்நியச் செலாவணி (வெளிநாட்டு கரன்சிகள்), பாண்டுகள் போன்றவற்றின் மதிப்புக்கு இணை யான அளவில் பணத்தாள்களை அச்சிடும். இதற்கு மேல் அச்சிட்டாலும், பணவீக்கம் அதிகமாகும். மேலும், பணத்தின் மதிப்பானது விலைகள் அதிகரிப்பதன் காரணமாக வீழ்ச்சியடைவதால், வணிகத் தீர்மானங்களை மேற்கொள்வதும், முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிரமமானதாக மாறும். நம்பகத்தன்மையும் குறையும். இது பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தியப் பொருளாதாரத்தை 
சரி செய்ய கூடுதல்  பணத்தை அச்சடிக்கலாமா? சாதக, பாதகங்கள் என்னென்ன?

கடன் வாங்கிச் சமாளிக்கலாம்...

ஒரு நாடு, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளும்போது, அதற்குத் தேவையான நிதியைக் கடனாகப் பெற்றோ, வரியாக வசூலித்தோ செலவு செய்ய வேண்டும். அப்படி யில்லாமல், அரசின் தேவை களுக்கான நிதிக்கு, புதிய பணத்தாள்களை அச்சிட்டு செலவழிக்க ஆரம்பித்தால், அது மற்ற குடியரசுகளுக்குச் செய்யும் நியாயமற்ற விஷயமாகும்.

உதாரணத்துக்கு, பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலரை அதிக அளவில் இருப்பில் வைத்திருக்கின்றன. இந்தச் சமயத்தில், அமெரிக்க அராசாங்கம் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அதிக அளவில் டாலரை அச்சிட்டால், டாலரின் மதிப்பு குறைய வாய்ப்புண்டு. இது அதிக அளவில் டாலரை இருப்பு வைத்திருக்கும் நாடு களுக்கு ஆபத்து. டாலரின் வர்த்தகமாகும் பொருள்களை வாங்கும்போது, உதாரணத்துக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும்போது அதிக அளவில் டாலர்களைச் செலவழிக்க வேண்டியிருக்கும்.

அதே போல, இந்திய ரூபாய் தாள்கள் அச்சடிப்பது அதிகமா னாலும், ரூபாயின் மதிப்பு குறையும். விலைவாசி உயரும். இது நியாய மாக, நேர்மையாக பணம் சம்பாதித்து வைத்திருக்கும் மக்களின் பணத்துக்கு ஆபத்தாகும். அதனால், பொருளாதார சரிவை சரிசெய்வதற்காக இந்திய அரசு உடனடி யாக பணத்தாள்களை அச்சிடாமல், உள்நாட்டு உற்பத்தி அளவைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல ரூபாய் நோட்டு களை அச்சிடுவதே சரி’’ என்றார்.

பணத்தாள்களை அதிக அளவில் அச்சிட்டால், பணவீக்கம்தான் அதிகரிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்!

இரண்டாம் இடத்தில் இந்தியா!

பணத்தை அச்சடிக்கும் தாளை அதிக அளவில் நுகர்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. முதலிடத்தில் சீனா உள்ளது. பிரத்யேகமான காகிதங்கள், மை, பாதுகாப்பு அம்சங்கள், அச்சிடும் செயல்முறைகள் என ரூபாய் நோட்டுகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு மிகப் பெரிய தொகையும் தொழில்நுட்பமும் அவசியம் தேவை. ஒவ்வோர் ஆண்டும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க, இந்தியா 22,000 மெட்ரிக் டன் காகிதங்களைப் பயன்படுத்துகிறது. பணம் அச்சடிப்பதற்கான மொத்தச் செலவில் 40% காகிதங்களுக்காகச் செலவிடப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான ‘water marked’ காகிதங்களை, ஜெர்மனியைச் சேர்ந்த ‘Giesecke & Devrient’ மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘De La Rue’ என்ற நிறுவனங்களிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.