Published:Updated:

அடிக்கடி ‘கைமாத்து’ கேட்பவர்களைச் சமாளிப்பது எப்படி..? வாசகர்களின் ‘அடடே’ கமென்ட்ஸ்!

கைமாத்து
பிரீமியம் ஸ்டோரி
கைமாத்து

I N T E R A C T I O N

அடிக்கடி ‘கைமாத்து’ கேட்பவர்களைச் சமாளிப்பது எப்படி..? வாசகர்களின் ‘அடடே’ கமென்ட்ஸ்!

I N T E R A C T I O N

Published:Updated:
கைமாத்து
பிரீமியம் ஸ்டோரி
கைமாத்து

அலுவலகத்தில் (சில சமயத்தில் அக்கம்பக்கத்து வீடுகளிலும்) அடிக்கடி ‘கைமாத்து’ கேட்பவர் களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழி சொல்லுங்களேன்!” அப்படின்னு நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். இதற்கு வாசகர்கள் தங்களின் சொந்த அனுபவத்தில் இருந்து நிறைய அசத்தல் கமென்ட்டு களை அள்ளித் தந்திருந்தனர். அவற்றில் சில இதோ...

யாராவது உங்ககிட்ட கடன் கேட்டா, “நானே உங்ககிட்ட கேக்கலாம்ன்னு இருந்தேன்” அப்டின்னு ஒரே வார்த்தையிலே முடிச்சிவிட்ருங்க’னு சொல்லி அசத்தியிருந்தாரு ஷான் பாஷா. அதானே, யார்கிட்ட..?

“ரெண்டு தடவ அவங்க நம்ம கிட்ட கேட்டா மூணாவது தடவ நாம கேப்போம்”னு சொல்லிருக்காரு சுரேஷ் நந்தகுமார். ஃபாலோ பண்றோம் பாஸு.

கைமாத்து
கைமாத்து

“பணம்தான் உறவுகளை முறியடிக்கும். யாராவது உங்ககிட்ட கடன் கேட்கும்போது உங்ககிட்ட காசு இல்லைன்னா, அதை நேரடியா சொல்லிடுங்க. அவங்க வேற இடத்துல ரெடி பண்ணிக்குவாங்க. உறவும் நீடிக்கும்”ன்னு ரிலேஷன் ஷிப்புக்கு முதல் மரியாதை கொடுத்துருக்காரு பா.கண்ணன். சூப்ப்பர்பு!

“கடன் கொடுத்து வேறு ஒருவரால் ஏமாற்றப்பட்ட நிகழ்வைச் சொல்லி, ‘வாய்ப்பில்லை ராஜா’னு சொல்லிடுங்க”னு சொல்லியிருக்காரு சாந்தகுமார். சொந்தக்கதை சோகக்கதை.

“எப்ப பார்த்தாலும் காசு இல்லை, ரொம்ப கஷ்டம்’னு பஞ்சப்பாட்டு பாடணும். கடன் கேக்க வர்றவன் அவன் பையில இருக்குற காசை நம்ம கிட்ட குடுத்துட்டுப் போகணும். அப்படி இருக்கணும் உங்க பர்ஃபாமன்ஸ்”னு சொல்லி 1000 வாலாவைத் தெறிக்கவிட்டிருக்காரு பிரசன்ன நாராயணசாமி!

“உங்களால் முடியுமென்றால் உதவுங்கள்..! பணத்தின் மதிப்பே அது கைமாறும்போதுதான்”னு சொல்லிருக்காரு பாஸ்டின். அருமை பாஸ், பை த பை, ஒரு 1,000 ரூபா கிடைக்குமா?

“மனைவிகிட்ட கேக்கணும்” அப்படின்னு மட்டும் சொல்லிப் பாருங்க. உங்ககிட்ட இருந்து பணம் வராதுங்குறதை அவங்களே புரிஞ்சுக்குவாங்க’னு சொல்லிருக்காரு பிரபு. அற்புதம், அற்புதம்..!

“நான் பலமுறை இப்படி உதவி செய்து ரூ.3.4 லட்சம் கொடுத்துள் ளேன். ஆனா, நான் திரும்பக் கேட்ட நேரத்துக்கு யாரும் திருப்பித் தரவே இல்லை. அதனால எவன் எந்த சூழ்நிலையைக் காரணம் காட்டி பணம் கேட்டாலும் தர வேண்டாம்”னு எச்சரிக்கை விடுக்கிறாரு காசி சின்னத்தம்பி. சரியாத்தான்யா சொல்லியிருக்காரு.

“கேக்குறவன்கிட்டயே வழி கேட்டா என்ன பண்றது”னு நம்மளையே திரும்பிக் கேட்ருக்காரு ட்ரம்ப்! ட்ரம்ப்ஜி, உங்க உண்மையான பெயரே இதுதானா..?!

“முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, இல்லை என்று சொல்லுங்கள். உங்கள் அருகே இருப்பவர் கேட்டால், இல்லை என்று சொல்லப்போவதை ஒத்திகை பாருங்கள்”னு சொல்லிருக்காரு பிரேம். அதாவது, ‘நோ’ சொல்றதைக் கூட பிளான் பண்ணி பண்ண சொல்றாரு போல!

“மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்து உதவி செய்து ஏமாந்து நிற்கும் மனிதர்களில் எனக்கும் பெரிய இடம் உண்டு. நல்ல யோசனையா சொல்லுங்க...”ன்னு நம்ம கிட்ட ஐடியா கேட்ருக்காரு பிரகாஷ் கோபால். இங்க இருக்கிற பல டிப்ஸ்கள்ல உங்களுக்குப் பிடிச்சதைக் கேட்ச் பண்ணிக்குங்க. என்ஜாயி எஞ்சாமி..!

சரி, இப்ப நீங்க சொல்லுங்க...“ அடிக்கடி ‘கைமாத்து’ கேட்பவர்களை நீங்க எப்படிச் சமாளிப்பீங்க..?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism