Published:Updated:

கவாஸ்கர் ஆக ஆசை; ஆனால், இன்று வெற்றிகரமான தொழிலதிபர்..! #திருப்புமுனை - 29

naukri.com

கிரிக்கெட் வீரர் அல்லது சினிமா ஸ்டாராக வேண்டும் என்பதுதான் சஞ்சீவின் இலக்காக இருந்தது. ``சுனில் கவாஸ்கர் அல்லது ராஜேஷ் கண்ணாவாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதைவிட தொழில்முனைவோராவது எளிது என நினைத்திருந்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை...

கவாஸ்கர் ஆக ஆசை; ஆனால், இன்று வெற்றிகரமான தொழிலதிபர்..! #திருப்புமுனை - 29

கிரிக்கெட் வீரர் அல்லது சினிமா ஸ்டாராக வேண்டும் என்பதுதான் சஞ்சீவின் இலக்காக இருந்தது. ``சுனில் கவாஸ்கர் அல்லது ராஜேஷ் கண்ணாவாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதைவிட தொழில்முனைவோராவது எளிது என நினைத்திருந்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை...

Published:Updated:
naukri.com

சிலருக்குத் தன்னுடைய வெற்றி மட்டுமே முக்கியமானதாக இருக்காது. மற்றவர்களின் வெற்றியும் முக்கியம். இந்தியாவில் இணையதள நிறுவனங்களில் முன்னோடி இவர். 1997-ம் ஆண்டு நாக்ரி (Naukri) தளம் தொடங்கப்பட்டது. ஆனால், 2000-ம் ஆண்டு டாட்காம் பபுள் மற்றும் 2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் என இவருக்கு பெரிய சிக்கல்களை சந்தித்தது. அதனால், அந்த இரு ஆண்டுகள் நஷ்டமாக இருந்தாலும் அதன் அடுத்த சில ஆண்டுகளில் லாப பாதைக்குத் திரும்பியது நாக்ரி.

பிசினஸ்
பிசினஸ்
Business

2006-ம் ஆண்டு பங்குச் சந்தையிலும் பட்டியலானது இந்த நிறுவனம். நாக்ரி நிறுவனத்தை ஐ.பி.ஓ கொண்டு வந்ததுடன் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அதன் பிறகும் ஸ்டார்ட் அப் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் இந்த நிறுவனத்தைத் தொடங்கிய சஞ்சீவ் பிக்சந்தானி (Sanjeev Bikhchandani). திருப்புமுனைக்குமேல் திருப்புமுனை உருவாக்கிய இந்த சஞ்சீவின் பிசினஸ் பயணம் பற்றிப் பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுனீல் கவாஸ்கர் அல்லது ராஜேஷ் கன்னா ஆக வேண்டும்...

நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் சஞ்சீவ். அப்பா, மருத்துவர். பெரிய ஆசைகள் இருந்தாலும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படித்தார். இதைத் தொடர்ந்து லிண்டாஸ் விளம்பர நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

சஞ்சீவ்
சஞ்சீவ்

மூன்று ஆண்டுகள் வேலை செய்த பிறகு ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ படித்தார் 1989-ம் ஆண்டில் எம்.பி.ஏ படித்து முடித்தவுடன், ஹார்லிக்ஸ் பிராண்டின் அப்போதைய நிறுவனமான ஹிந்துஸ்தான் மில்க்பூட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மதுரையில் ஹார்லிக்ஸ் பிராண்டின் மார்க்கெட் ஸ்டடிக்காக வந்தார். அந்த ஸ்டடி வெற்றிகரமாக முடிந்தது. அப்படியே தொடர்ந்திருந்தால் அடுத்த சில ஆண்டுகளில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சி.இ.ஓ-வாக உயர்ந்திருக்க முடியும். ஆனால், சஞ்சீவ் அதைச் செய்யவில்லை.

அனைத்துக் குழந்தைகளுக்கும் இருப்பதைப் போல கிரிக்கெட் வீரர் அல்லது சினிமா ஸ்டாராக வேண்டும் என்பதுதான் சஞ்சீவின் இலக்காக இருந்தது. ``சுனில் கவாஸ்கர் அல்லது ராஜேஷ் கண்ணாவாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதைவிட தொழில்முனைவோராவது எளிது என நினைத் திருந்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. வேலையைவிட வேண்டும் என பல நாள்கள் நினைத்திருக்கிறேன். ஆனால், திருமணம் ஆன பிறகு, மனைவிக்கு நிரந்தர சம்பளம் கிடைத்து வந்ததால், வேலையைவிட முடிந்தது’’ என சஞ்சீவ் குறிப்பிட்டிருக்கிறார்.

முதலில் தொடங்கிய இரு நிறுவனங்கள்...

1990-ம் ஆண்டு இவரும் இவரின் நண்பர் கபில் வர்மாவும் சேர்ந்து `இண்ட் மார்க்’ மற்றும் `இன்ஃபோ எட்ஜ்’ ஆகிய இரு நிறுவனங் களைத் தொடங்கினார்கள். ஒரு நிறுவனத்துக்கு, சம்பளம் மற்றும் சர்வேகளை செய்யும். மற்றொரு நிறுவனம், பார்மா நிறுவனங் களுக்குத் தேவையான சேவைகளை வழங்கும். மூன்று ஆண்டுகள் ஒன்றாக இருந்த இவர்கள், அதன்பிறகு பிரிந்தார்கள். சர்வே செய்யும் நிறுவனம் சஞ்சீவ் வசம் வந்தது.

பிசினஸ்
பிசினஸ்

அந்தக் காலத்தில் பிசினஸ் இந்தியா பத்திரிகை முக்கியமானதாக இருந்தது. ஐ.ஐ.எம் படித்தவர்கள் அல்லது இதர பிசினஸ் ஸ்கூலில் படித்தவர் என யாராக இருந்தாலும் பிசினஸ் இந்தியா படிப்பார்கள். கட்டுரைகளுக்காக வாங்குவதைவிட வேலைவாய்ப்பு குறித்து தெரிந்துகொள்ள வாங்குபவர்களே அதிகம். கட்டுரையை விவாதிப்பதைவிட வேலைவாய்ப்பு என்பது பிரதானமாக இருந்தது. மேலும், அனைத்து வேலைவாய்ப்புகளும் பத்திரிகைகளில் வெளியாவதில்லை. அதனால் வேலைவாய்ப்பு என்பது முக்கியமான மற்றும் அதிக வாடிக்கையாளர்கள் ஆர்வம் காண்பிக்கும் பிரிவு என்பதில் சஞ்சீவ் கவனமாக இருந்தார்.

கண்காட்சி தந்த ஐடியா!

இந்தச் சமயத்தில், 1996-ம் ஆண்டு டெல்லி பிரகதி மைதானில் ஒரு கண்காட்சி நடந்தது. அங்கு இணையதளம் குறித்து ஸ்டால் போடப்பட்டிருக்கிறது. சர்வதேச தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதற்காக அந்தக் கண்காட்சிக்குப் போனார் சஞ்சீவ். கண்காட்சியில் பல ஸ்டால்களைப் பார்த்தவர், வேலைவாய்ப்பு குறித்து ஒரு இணையதளம் தொடங்கும் ஐடியாவுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

அந்தச் சமயத்தில், இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை 14,000 மட்டுமே. எழுத்துபிழை அல்ல, வெறும் 14,000 ஆயிரம் மட்டுமே. இவ்வளவு குறைவான நபர்களே இணையத்தைப் பயன்படுத்தி வந்தாலும், இதுதான் எதிர்கால மீடியா; இனிவரும் காலத்தில் பல லட்சம் பேர் இன்டர்நெட்டைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதியாக நம்பினார் சஞ்சீவ்.

அமெரிக்காவில் உள்ள சகோதரர் மூலமாக சர்வர் வாங்கினார். மாதம் 25 டாலர் தொகை. ஆனால், இந்தத் தொகை இல்லாததால், நிறுவனத்தின் பங்குகளை வழங்கினார். அதே போல, டெக்னாலஜி நபர்களுக்கும் சம்பளம் கிடையாது. 16% பங்குகளை வழங்கினார். இப்படிதான் `நாக்ரி.காம்’ தொடங்கப்பட்டது. ``நான் 20 வேலையை செய்து வந்தேன். 21வது வேலையாக இதைத் தொடங்கினேன்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

விளம்பரம் செய்ய கட்டணம்... 

1997-ம் ஆண்டு நாக்ரி தொடங்கப்பட்டது. அப்போது இந்தியா முழுவதும் வந்திருக்கும் வேலை வாய்ப்புகளை இந்தத் தளம் மூலம் வெளியிடப்பட்டது. ஆறு மாதங்களுக்கு எந்த விதமான கட்டணமும் இல்லை. இதைத் தொடர்ந்து நிறுவனங்கள் அணுகத் தொடங்கின. அப்போதுதான் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது நாக்ரி.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

இரண்டாவது ஆண்டில் ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டியது. அதனால் அதுவரை செய்திருந்த சிறு சிறு தொழில்கள் அனைத்தையும் மூடிவிட்டு, நாக்ரியில் மட்டுமே கவனம் செலுத்தினார் சஞ்சீவ்.

இந்தச் சமயத்தில் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்தன. ஆனால், நாங்கள் சிறிய கம்பெனியாகவே தொடரலாம் என முடிவெடுத்தோம். பெரிய முதலீட்டுடன் `ஜாப்ஸ் அஹெட்’ என்கிற நிறுவனம் செயல்படத் தொடங்கியது. இந்தப் போட்டியை சமாளிக்க முதலீட்டைப் பெற்று தொழிலை விரிவாக்கம் செய்வது தவிர்க்க முடியாமல் போனது. அதனால் ஐ.சி.ஐ.சி.ஐ வென்ச்சர் முதலீட்டைப் பெற்றது `இன்ஃபோ எட்ஜ்’ 15% பங்குகளை விற்று, ரூ.7.3 கோடி நிதி திரட்டியது. 2000-ம் ஆண்டு நிதி திரட்டப்பட்டது.

எஃப்.டி.க்குப் போன முதலீடு...

நிதி திரட்டிய சில மாதங்களில் டாட் காம் பபுள். அதனால் அடுத்த பல மாதங்களுக்குத் தேவைப்படும் தொகையை பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டது. அனைத்து விளம்பரங்களும் குறைக்கப்பட்டன. ஆனால் புதிய புராடக்ட்டுகள் உருவாக்கத்துக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பணம்
பணம்

அடுத்த ஆண்டு இரட்டை கோபுரத் தாக்குதல் நடைபெற்றது. இந்த சமயத்தில், மாதம் சுமார் ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டது. ஆனால், சிக்கனமாக இருந்ததாலும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்தியதாலும், 2002-ம் ஆண்டே லாபப் பாதைக்குத் திரும்பியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து லாபத்தில் இருந்த நாக்ரி, 2006-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலானது. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட முதல் இணையதள நிறுவனம் இதுதான்.

நாக்ரிக்குப் பிறகு...

அடுத்த சில ஆண்டுகளில் முக்கியமான பொறுப்புகளில் இருந்து இயக்குநர் குழு சார்ந்த பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். அப்போதுதான் இந்திய ஸ்டார்ட் அப் உலகில் கவனம் செலுத்த தொடங்கினார்.

கவாஸ்கர் ஆக ஆசை; ஆனால், இன்று வெற்றிகரமான தொழிலதிபர்..! #திருப்புமுனை - 29

2008-ம் ஆண்டு பாலிசி பஜார் நிறுவனத்தில் முதலீடு செய்தார். 2010-ம் ஆண்டு ஸொமேட்டோ நிறுவனத்தில் முதலீடு செய்தார். இது தவிர, சுமார் 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். இன்ஃபோ எட்ஜ் வென்ச்சர்ஸ் என்னும் முதலீட்டு நிறுவனம் மூலமாக மாதம் 300-க்கும் மேற்பட்ட நிறுவனர்களைச் சந்தித்து வருகிறார்.

இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால், அதற்கு பின்னால் சம்பளம் இல்லாமல் வேலை செய்த பல மாதங்கள் இருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது!

(திருப்புமுனை தொடரும்)