Published:Updated:

`அது Decontrol-ஆ Remote control-ஆ?' - பெட்ரோல் விலை குறித்து மத்திய அரசை தாக்கிய தயாநிதி மாறன்!

தயாநிதி மாறன்

``ஒன்றிய அரசுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். ஆனால், பெட்ரோல் விலையை 10 ரூபாய் வரை குறைத்து இருக்கிறோம் என்றும் சொல்கிறீர்கள். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது."

`அது Decontrol-ஆ Remote control-ஆ?' - பெட்ரோல் விலை குறித்து மத்திய அரசை தாக்கிய தயாநிதி மாறன்!

``ஒன்றிய அரசுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். ஆனால், பெட்ரோல் விலையை 10 ரூபாய் வரை குறைத்து இருக்கிறோம் என்றும் சொல்கிறீர்கள். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது."

Published:Updated:
தயாநிதி மாறன்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ல் 2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் எதுவுமே இல்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அதையடுத்து மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை தொடர்பான விவாதம் நடந்தது.

அப்போது, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், எரிபொருள் விலை உயர்வில் பா.ஜ.க அரசு நடந்துகொள்ளும் விதம் பற்றிக் கேள்வி எழுப்பினார்.

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது பேசிய அவர், ``ஒன்றிய அரசுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். ஆனால், பெட்ரோல் விலையை 10 ரூபாய் வரை குறைத்து இருக்கிறோம் என்றும் சொல்கிறீர்கள்.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்று 90 டாலர் எனும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், உள்நாட்டு பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கு முந்தைய காலங்களில் குறிப்பாக, கொரோனா நெருக்கடி காலத்திலும்கூட, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது இங்கே உள்நாட்டில் அவசர அவசரமாக விலையை உயர்த்தினீர்கள்.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளபோதும் ஒன்றிய அரசுக்கு விலையை ஏற்றவதில் விருப்பமில்லை. இதற்கு வரவுள்ள ஐந்து மாநிலங்களின் தேர்தல்தான் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போது மட்டும் எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைக்க முயற்சி செய்கிறீர்கள். உண்மையிலேயே இது `டிகன்ட்ரோலா’ (Decontrol) அல்லது `ரிமோட் கன்ட்ரோலா’ (Remote Control) என்று சந்தேகமாக இருக்கிறது'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், பெட்ரோல், டீசல் மீதான விலையைக் குறைக்காமல் இருக்க காரணம், எண்ணெய்க் கடன் பத்திரங்கள் மீதான கடனை செலுத்தி வருவதால், விலைக் குறைப்பு செய்யும் சாத்தியம் இல்லை என ஒன்றிய அரசு கூறியது. கடந்த ஆண்டுகளில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் மீது வசூலிக்கப்பட்ட வரியின் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு, அந்த வருவாய் என்ன ஆனது, எதற்கு செலவு செய்யப்பட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் ஒன்றிய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்திடமிருந்து எழுத்துபூர்வமாக மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டார்.

Petrol
Petrol
Photo: Vikatan / K.Rajesekaran

இவை தவிர, எண்ணெய் கடன் பத்திரங்கள் மூலம் அரசாங்கத்துக்கு தற்போது நிலுவையில் உள்ள மொத்த கடன் தொகை எவ்வளவு, இந்தக் கடனை திருப்பி செலுத்துவது குறித்து ஜூன் 2014 முதல் டிசம்பர் 2021-ம் ஆண்டு வரையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட கொள்கை முடிவுகள் என்ன, கடந்த ஏழு நிதியாண்டுகளில் அந்தக் கடன் பத்திரங்களின் மீது ஒன்றிய அரசு ஆண்டுதோறும் செலுத்திய வட்டி எவ்வளவு என்கிற கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மத்திய அரசிடமிருந்து வரும் என்று எதிர்பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism