நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சரியா?

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை
பிரீமியம் ஸ்டோரி
News
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

செல்போன்மூலம் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் யு.பி.ஐ தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்த பிறகு, பலரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தெருவோர டீக்கடை, பூக்கடைகளில் ரூ.5, 10 எனக் குறைந்த அளவிலான தொகைகூட இந்த யு.பி.ஐ மூலம் பரிமாற்றம் செய்யப் பட்டு வருகிறது.

தினேஷ்
தினேஷ்

இது ஆரோக்கியமான வளர்ச்சியாகக் கருதப் பட்டாலும், இன்றைக்கு சில வணிக நிறுவனங்கள் ரொக்கப் பணத்தை (Cash) வாங்க மாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்திருக் கின்றன. கார்டு அல்லது யு.பி.ஐ மூலமாகத் தரப்படும் பணம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சில நிறுவனங்கள் சொல்லத் தொடங்கியிருக்கின்றன.

நம்முடைய மக்கள் ‘டிஜிட்டல் பொருளா தாரத்தை’ நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டு இருந் தாலும்கூட, எல்லா மக்களும் ரொக்கப் பணத்தைப் பயன் படுத்துவதை விட்டுவிட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தத் தயாராகி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. உண்மை நிலை அப்படி இருக்க, ரொக்கப் பணத்தை வாங்க மாட்டோம் என்று ஒரு வணிக நிறுவனம் கூறுவது சட்டரீதியாக சரியா என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷிடம் கேட்டோம். அவர் தெளிவான விளக்கத் தைத் தந்தார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் 
என்பது சரியா?

‘‘ரூபாய் நோட்டுகள் முற்றிலும் தடை செய்யப் பட்டு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அரசு ஆணை பிறப்பிக்கிற வரையில், ரூபாய் நோட்டு களை வாங்க மாட்டோம் என யார் சொன்னாலும் அது சட்டப்படி தவறுதான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளில் சமத்துவமும் ஒன்று. அப்படிப் பார்க்கையில், யு.பி.ஐ அல்லது கார்டு பரிவர்த்தனை மட்டும் தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சமத்துவத்துக்கு எதிரானது. இந்தியா போன்ற நிதி சார்ந்த கல்வி அறிவு அதிகம் இல்லாத மக்கள் கணிசமான அளவுக்கு வாழும் நாட்டில், எல்லோரும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத் துக்குத் தயாராக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

டெபிட் கார்டு அல்லது யு.பி.ஐ வசதி இல்லாதவர்கள் ரொக்கப் பணத்தைக் கொண்டு ஒரு பொருள் வாங்கக் கூடாதா..? அப்படி வாங்க முடியாத சூழல் என்பது சமத்துவம் என்கிற அடிப்படை உரிமைக்கு எதிரானதாக அமைகிறது. ஆகவேதான், அதை சட்டத்துக்கு எதிரானது எனச் சொல்கிறோம்.

அப்படி என்றால், டிஜிட்டல்மயமாவது எதிர்க்கப்பட வேண்டியதா எனில், இல்லை. உண்மையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. யு.பி.ஐ அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பெட்டிக்கடைகளில்கூட நாம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடி கிறது. இதன் மூலம் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் அரசால் கண்காணிக்க முடிகிறது. எல்லா பணப் பரிவர்த்தனைகளுக்கும் கணக்கில் வந்த பிறகு அதற்கேற்ப வரி விதிக்க முடியும், வரி ஏய்ப்பு குறையும். இது போன்று பல நன்மைகள் இருப்பதால், டிஜிட்டல்மயமாவது நல்லது. ஆனால், இதை உடனே செயல்படுத்திவிட முடியாது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் 
என்பது சரியா?

படிப்படியாகத்தான் மக்களை டிஜிட்டல்மயம் நோக்கி நகர்த்த முடியும். டிஜிட்டல்மயத்தை ஊக்குவித்தாலுமேகூட நமது நாடு இன்னும் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் ‘கேஷ்லஸ்’-ஆக சமாளிக்கும் நிலை உருவாகவில்லை. டோல்கேட்டில் ஃபாஸ்ட்டாக்கை பலரும் பயன்படுத்தினாலும், இன்னும்கூட பணம் செலுத்தும் வசதி இருக்கவே செய்கிறது. ரொக்கப் பயன்பாட்டை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்பதை இது காட்டுகிறது.

எனவே, எந்த வணிக நிறுவனமாக இருந்தாலும் பொருள்களை வாங்க வரும் மக்களிடம் பணத்தை வாங்க மாட்டோம் எனச் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால், ஒரு பயனீட்டாளராக வழக்கு தொடரலாம்” என்று பேசி முடித்தார் தினேஷ்.

இந்த விவகாரத்தை அரசு கவனிப்பது அவசியம்!