Published:Updated:

மீண்டெழுமா இந்தியப் பொருளாதாரம்?

மீண்டெழுமா இந்தியப் பொருளாதாரம்?
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டெழுமா இந்தியப் பொருளாதாரம்?

ஜூ.வி 2020

2018 -ம் ஆண்டு உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, தனது பொருளாதார வளர்ச்சி காரணமாக சீனா மற்றும் அமெரிக் காவுக்குப் பெரும் போட்டியாளராக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், அதிர்ச்சி தரும் வகையில், இந்தியப் பொருளாதாரம் 2019-ம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

“இந்தியாவின் தற்போதைய பொருளாதார மந்தநிலை, ஐ.சி.யூ பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன். கடந்த மூன்றாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2018-ம் ஆண்டின் முதல் பகுதியிலிருந்ததை விடப் பாதி வேகத்தில்தான் வளர்ந்துள்ளது. வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதத்தை எட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளே கடந்த காலாண்டில் இந்தியாவைவிட வேகமாக வளர்ந்துள்ளன.

முதலீடுகள், உற்பத்தி குறைதல், கிராமப்புறங்களில் சிக்கல்கள், ஒழுங்கற்ற வருமானங்கள், ஏற்றுமதியில் மந்தம், வங்கி மற்றும் நிதித் துறைகளில் குழப்பம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் குறியீடுகள் மற்றும் கார் தயாரிப்பில் செய்யப்படும் தொடர் குறைப்புகள், மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதை உறுதி செய்கின்றன.

“உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சமீப காலம் வரை இந்தியாவும் ஒன்றாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டார்கள். ஆனால், தற்போது இந்தியா குறிப்பிடத்தக்கப் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து வருகிறது” எனச் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய உதவி இயக்குநர் ரணில் சல்கடா தெரிவித்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நுகர்வோர் செலவு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வேலை யின்மையும், மக்களுக்கு அரசுமீது நிலவி வரும் நம்பிக்கையின்மையும் தான் இந்த வீழ்ச்சிக்கான முக்கியக் காரணங்கள். அதிக வேலைவாய்ப்பை வழங்கி வந்த ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தித் துறைகள் தொடர்ச்சியான மந்த நிலையைச் சந்தித்துவருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் முறையே 8.2, 7.2, 6.8 சதவிகிதம் படிப்படியாகக் கீழ்நோக்கிச் சரிவடைந்து வருகிறது. 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஜி.டி.பி வளர்ச்சியில் வீழ்ச்சியடைவதன் மூலம், மக்களின் வருமானம், வாங்கும் திறன், சேமிப்புகள், முதலீடுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. குறைவான வருமானத்தால் பால் மற்றும் பால் பொருள்களின் நுகர்வு குறைந்துள்ளது. இது ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது.

மீண்டெழுமா இந்தியப் பொருளாதாரம்?
மீண்டெழுமா இந்தியப் பொருளாதாரம்?

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை வீடுகள் விற்பனையைக் கடுமையாகப் பாதிப்படையச் செய்துள்ளது. விற்கப்படாமல் இருக்கும் வீடுகள் விற்பனையாகக் கொச்சியில் 80 மாதங்கள், ஜெய்ப்பூரில் 59 மாதங்கள், லக்னோவில் 55 மாதங்கள், சென்னையில் 72 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஆண்டுக் கணக்கான தேய்மானம் காரணமாக ரியல் எஸ்டேட்டில் லாபத்தின் சதவிகிதம் கணிசமாகக் குறைகிறது. ரியல் எஸ்டேட் துறையின் முதலீட்டின்மூலம் கிடைக்கும் வருமானம் (ROI) தற்போது இந்திய நகரங்களில் மிகக் குறைவாகவே உள்ளது. ரியல் எஸ்டேட் துறையின் பிரச்னைகளைக் களைவதற்காக மத்திய அரசாங்கம் 25,000 கோடி ரூபாயைச் சமீபத்தில் ஒதுக்கியது. ஆனால், அது துறையின் வீழ்ச்சியைத் தடுக்கத்தான் பயன்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி தொடர்ச் சங்கிலி செயல்படாகப் பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உட்பட அனைத்து முதலீடுகளின் மதிப்பும் கணிசமாகக் குறைந்துவிட்டன. “தற்போதுள்ள நிலையிலிருந்து பங்குச் சந்தை மேலேறி வர இரண்டு ஆண்டுகள்கூட ஆகலாம். இந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தை கீழே இறங்கும் வாய்ப்புகளே அதிகம். குறிப்பாக, பெரும் முதலீட்டு நிறுவனங்கள் (Large cap) மற்றும் முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை இறங்க வாய்ப்புள்ளது. கார்ப்பரேட் வரிச் சலுகைக்குப் பிறகு பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ், நிஃப்டி சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன. ஆனால், இது நிரந்தரம் இல்லை. இறக்கத்தைச் சந்தித்தே, மீண்டும் ஏறும்” என்கிறார் பங்குச்சந்தை ஆலோசகர் வா.நாகப்பன்.

நமது பொருளாதாரத்தில் விவசாயத்துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. ஆனால், அந்தத் துறைமீது அரசு போதுமான கவனம் செலுத்த வில்லை. விவசாயப் பொருள்களுக்காக மதிப்பு சர்வதேசச் சந்தையில் குறைந்துவருகிறது. பருவநிலை மாற்றங்கள் சீராக இல்லாததால், விவசாயம் பெரும் நஷ்டத்தையே சந்தித்துவருகிறது. ஆனால், இந்த நிலையைச் சரிசெய்வதாக நினைத்துக் கடன்களைத் தள்ளுபடி செய்வது சரியான முடிவல்ல. அதற்குப் பதிலாகப் புதிய தொழில்நுட்பங்கள், விதைகள் அல்லது நிலங்களை மேம்படுத்துவது என உழவர்களின் அணுகுமுறையை மேம்படுத்துவது சிறந்த தீர்வாக அமையும்.

மீண்டெழுமா இந்தியப் பொருளாதாரம்?
மீண்டெழுமா இந்தியப் பொருளாதாரம்?
விலைவாசி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, தொழிலாளர் நலன், நிலப்பயன்பாடு போன்றவற்றில் அடுத்தடுத்து வந்த அரசுகளின் கொள்கை முடிவுகளின் விளைவுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.

இத்தனை ஆண்டுகளாகச் சீர்த்திருத்தம் செய்யாமல் போனதன் உச்சக்கட்ட விளைவுகள்தான் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்னைகள். விலைவாசி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, தொழிலாளர் நலன், நிலப்பயன்பாடு போன்றவற்றில் அடுத்தடுத்து வந்த அரசுகளின் கொள்கை முடிவுகளின் விளைவுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். பண மதிப்பிழப்பு மற்றும் மிக மோசமாகத் திட்டமிடப்பட்ட ஜி.எஸ்.டி வரி அமலாக்கம் போன்ற அரைகுறையான சீர்திருத்தங்கள் மோசமான வழிகளுக்கு இட்டுச்சென்றன.

பொருளாதாரத்தின் அமைப்பு ரீதியிலான பிரச்னை களுக்கு மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பொருளா தாரத் தீர்வுகள் அவசியம். ஆனால், இல பட்நாயக், ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், அரவிந்த் பனாகாரியா, அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் விரால் ஆச்சாரியா போன்ற தகுதியான பொருளாதார வல்லுநர்கள் மோடியின் அரசிலிருந்து வெளியேறுவதைப் பார்த்தால், இத்தகைய தீர்வுகள் வெகுதொலைவில் இருப்பதாகத் தான் தெரிகின்றன. இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அண்மையில் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, உடனடியாகக் கொள்கை வகுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் எடுத்துச் செல்ல முடியும்.

“வங்கிகள்... சிறிதே நல்லது!” - ஜோதி சிவஞானம், பொருளாதார நிபுணர்

ரு வங்கி நஷ்டத்தைச் சந்திக்கிறது எனில், அதன் வராக்கடன்களை வசூலித்து, தேவையான சிக்கன நடவடிக்கைகளை எடுத்து லாபமீட்டும் வங்கியாக மாற்றுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். பதிலாக, வேறொரு லாபமீட்டும் வங்கியுடன் இணைப்பதால், அந்த வங்கியின் லாபம், இந்த நஷ்டத்துக்கு ஈடுகட்டப்பட்டுவிடும். வராக்கடன்கள் வராக்கடன்களாகவே இருக்கும்.

கடந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் லாபம் ஒட்டுமொத்தமாக ரூ.1,60,000 கோடி. ஆனால், வராக்கடன்களைச் சரிசெய்வதற்காகப் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு ரூ.60,000 கோடி என்று கணக்குச் சொல்லப்படுகிறது. இப்போது வங்கிகள் இணைக்கப்பட்டிருப்பதால் உடனடியாக எந்த லாபமும் கிடைத்துவிடாது. அதிகம் உள்ள வங்கிக் கிளைகளை மூட வேண்டும், ஊழியர்களைக் குறைக்க வேண்டும். ஆனால், ஊழியர்களைக் குறைக்கப்போவதில்லை என்று இப்போது சொல்கிறார்கள்.

வங்கிக் கிளைகளை மூடும்போது, கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள வங்கிக் கிளைகள் அதிகளவு மூடப்படும் அபாயம் இருக்கிறது. இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் தற்போது வராக் கடன்கள் ரூ.8-9 லட்சம் கோடி அளவுக்கு இருக்கிறது. அவற்றை வசூலிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்க வேண்டும். கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து சிக்கனமான செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். வங்கிகளின் திறனை மேம்படுத்தி, அவற்றை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும்.

வங்கிகள் என்பவை கடன் கொடுத்து, வட்டி பெற்று லாபம் சம்பாதிப்பவை. ஆனால், இப்போது கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இருந்தாலும் கடன் பெறும் நிலையில்/திருப்பிக் கட்டும் தகுதியுடன் யாரும் இல்லை. அந்த நிலை மாற வேண்டும். வங்கிகளை இணைத்தால் பொருளாதாரம் எப்படி மேம்படும்? ஏற்கெனவே மிகப் பெரிய வங்கியாகப் பாரத ஸ்டேட் வங்கி இருக்கிறது. இன்னும் பெரிய பெரிய வங்கிகளை உருவாக்கி என்ன செய்யப்போகிறோம். பாரத ஸ்டேட் வங்கி பெரிய வங்கியாக இருப்பதால் குறிப்பிடத்தக்கப் பலன் ஏதாவது உண்டா? உண்மையில் பெரிய வங்கிகளை நிர்வகிப்பதில்தான் ஏகப்பட்ட சிரமங்கள் உண்டு. திறன் குறைவாக இருக்கும். சிறிய வங்கிகளே நல்லது.

செய்ய வேண்டியது, வாராக்கடன் அளவைக் குறைத்து வங்கிகளை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதுதான். நஷ்டத்தைச் சந்திக்கும் வங்கிகளை லாபமீட்டும் வங்கிகளுடன் இணைப்பது அல்ல. மேலும், சிறுகுறு நிறுவனங்களுக்குக் கடன் தொகை சென்றடையும் வகையில் வங்கித்துறை சீரமைக்கப்பட வேண்டும்.