Published:Updated:

`பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை.. எங்கு முதலீடு செய்யப்படும்?!'- நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை நீக்குவதன்மூலம் திரட்டப்படும் தொகையை எங்கே முதலீடு செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.

பி.பி.சி.எல் மற்றும் எல்.ஐ.சி நிறுவனங்களில் அரசின் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதன்மூலம் ரூ.2.10 லட்சம் கோடி திரட்டப்படவுள்ளது. இப்படித் திரட்டப்பட்ட தொகையை நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்குச் செலவிட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

டெல்லியில் இண்டஸ்ட்ரி சேம்பர் எஃப்.ஐ.சி.சி.ஐ கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்மலா சீதாராமன் பேசும்போது, ``பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை நீக்குவதன்மூலம் திரட்டப்படும் தொகையை எங்கே முதலீடு செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக இதைப் பயன்படுத்தப்போவதில்லை. உள்கட்டமைப்புப் பணிகளில் முதலீடு செய்து, அதன்மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்போம்.

நாங்கள் வழியைக் காட்டியுள்ளோம். திரட்டப்படும் பணம் எங்கெங்கே செலவிடப்படவுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். இதன்படி உங்கள் முதலீடுகளை எங்கே செலுத்தவேண்டும், எங்கே விரிவுபடுத்த வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான். நீங்கள் அரசுக்கு உதவினால், நாங்கள் தனியார் துறையைவிடப் பெரிய அளவில் உதவுவோம்" என்றும் கூறினார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
vikatan

இதற்கு உதாரணமாக, ``இந்தியாவில் தயாரிக்கப்படாத மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது அவற்றுக்கு வரி விதிக்கப்படும். வரிமூலம் சேகரிக்கப்பட்ட தொகையை, தரமான மருத்துவமனை வசதிகள் இல்லாத மாவட்டங்களில் அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும்" என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பின் செல்ல