Published:Updated:

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான 58 மனுக்கள் தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ( vikatan )

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தங்களது தீர்ப்பை வழங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 58 மனுக்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான 58 மனுக்கள் தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தங்களது தீர்ப்பை வழங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 58 மனுக்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Published:Updated:
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ( vikatan )

2016 நவம்பர் 8-ல் அமல்படுத்தப்பட்ட ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர்.

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளிலும், ஏடிஎம்-களிலும் நீண்டவரிசையில் காத்திருந்தனர். வயதானவர்கள் பலர் உயிரிழந்தனர். பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதால் பல அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் சிரமத்தைச் சந்தித்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
பணமதிப்பிழப்பு நடவடிக்கை

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், லஞ்சம் ஊழலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சரியாகத் திட்டமிடப்படாமல் திடீரென்று அரசு எடுத்ததால்தான் பெரும் பிரச்னைகளை மக்கள் சந்திக்க நேர்ந்தது என்று பொருளாதார வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பலர் வழக்குகளையும் தொடர்ந்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தங்களது தீர்ப்பை வழங்கி உள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவு என்பதால் மத்திய அரசின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 58 மனுக்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரி என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது சரியான நடவடிக்கை அல்ல என்று நீதிபதி நாகரத்தினா எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. எதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் முக்கியமான கேள்வி. இதற்குப் பதில் சொல்லப்போவது அரசா, நீதிமன்றமா?