Published:Updated:

ரூபாய் மதிப்பு சரிவு... ஏற்றுமதியாளர்களுக்குக் கொண்டாட்டம்!

ரூபாய் மதிப்பு
பிரீமியம் ஸ்டோரி
ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு சரிவு... ஏற்றுமதியாளர்களுக்குக் கொண்டாட்டம்!

ரூபாய் மதிப்பு

Published:Updated:
ரூபாய் மதிப்பு
பிரீமியம் ஸ்டோரி
ரூபாய் மதிப்பு

ஆகாஷ்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது. அதாவது, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76.98 வரை சென்று, எப்போது 77-ஐ வேண்டுமானாலும் தொடலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி அன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 76.87 என்கிற உச்சத்தைத் தொட்டது. அதற்கடுத்து இப்போதுதான் 76.98 என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு...
ஏற்றுமதியாளர்களுக்குக் கொண்டாட்டம்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 130 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. தவிர, சர்வதேச சந்தையில் ஒரு டிராய் தங்கம் 2020 டாலர் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் நாணயங்களின் மதிப்பு கடும் ஏற்ற, இறக்கமான சூழ்நிலையை அடைந்திருக்கிறது.

தென் கொரியாவின் நாணயமான ஒன் (Won) 3.02% அளவுக்கும், பிலிப்பைன்ஸின் பெஸ்சோ 2.25%, தைவான் டாலர் 2.10% அளவுக்கும் மதிப்பு குறைந்துள்ளன. இந்தோனேசியா, சிங்கப்பூர் நாட்டு நாணயம் 1 அளவுக்கும், மலேசியா, ஹாங்காங், ஜப்பான், சீன நாடுகளின் நாணயங்கள் 1 சதவிகிதத்துக்குள் இறக்கம் கண்டுள்ளன.

ஆனால், கடந்த இரு வாரங்களில் டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 3.42% அளவுக்குக் குறைந்துள்ளது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிந்ததால், ஏற்றுமதியாளர்களுக்குக் கொண்டாட்டமான மனநிலையில் இருக் கின்றனர். ஆனால், இறக்குமதியாளர்கள் அதிக டாலரைத் தந்து பொருள்களை வாங்க வேண்டிய திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism