Published:Updated:

தவறுதலாக வேறு வங்கிக்கணக்கில் செலுத்திவிட்ட பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி? | Doubt of Common Man

வங்கிப் பணப்பரிவர்த்தனை
News
வங்கிப் பணப்பரிவர்த்தனை

எப்போதும் நேரடியாக வங்கிக் கணக்கு எண்ணைக் கொண்டு பணம் செலுத்தும் போது, மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் எழில் கோபிநாத் என்ற வாசகர், "தவறுதலாக இன்னொருவரின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

வங்கிப் பணப்பரிமாற்றம் என்பது இன்று நம்முடைய தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. முதலில் எல்லாம் வங்கிப் பணப்பரிமாற்றம் என்பது எப்போதாவது நிகழும் ஒரு நடைமுறையாக இருந்தது. ஆனால், இன்றோ ஒரு டீ குடித்து விட்டு அதற்கான பில்லைக் கூட நேரடியாக வங்கி பரிவர்த்தனை மூலம் தான் செய்கிறோம் (UPI-யை தான் குறிப்பிடுகிறோம்). UPI மூலம் ஒரு வங்கிக் கணக்கில் இணைந்த மொபைல் எண்ணைக் கொண்டு பணப்பரிவர்த்தனையைத் தவிர்த்து நேரடியாக UPI மூலமே வங்கிக் கணக்கிலும் நம்மால் பணம் செலுத்த முடியும். ஆனால், இப்படியான சூழல்களில், தவறு நிகழும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன.அப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தவறுதலாக நாம் செலுத்திய பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது என நம்முடைய வாசகர் ஒருவர் டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
UPI
UPI

எப்போதும் நேரடியாக வங்கிக் கணக்கு எண்ணைக் கொண்டு பணம் செலுத்தும் போது, மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஒன்றுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் IFSC Code ஆகியவற்றைச் சரி பார்த்த பிறகே பணத்தை அனுப்ப வேண்டும். RBI விதிகளிலும், நாம் கொடுக்கும் வங்கிக் கணக்கு எண், பெயர் ஆகிய தகவல்களுக்கான முழுப்பொறுப்பு நாம் தான் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தத் தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால், அதற்கான நஷ்டத்தையும் நாம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். சரி, தவறுதலாகப் பணத்தை வேறொருவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிடும் பட்சத்தில், நாம் உள்ளீடு செய்த தகவல்கள், பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட நேரம், ஆன்லைன் பரிவர்த்தனை என்றால் அதன் ஸ்கிரீன்ஷாட்கள் ஆகியவற்றை உடனடியாக சேமித்து வைத்துக் கொள்வது அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதனைத் தொடர்ந்து உடனடியாக நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையையோ அல்லது அருகில் இருக்கும் வங்கிக் கிளையையோ அணுகி தவறான வங்கிக் கணக்கிற்கு நாம் பணம் அனுப்பிய நிகழ்வைக் குறிப்பிட்டுக் கூறி, அதற்குரிய ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து அது எந்த வங்கிக் கிளையைச் சேர்ந்தது, எந்த நபருக்குச் சென்றிருக்கிறது போன்ற விபரங்களை வங்கி நமக்கு அளிக்கும். ஒரே வங்கியைச் சேர்ந்த கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், நாம் பணம் செலுத்திய வங்கிக் கணக்கிற்குச் சொந்தமான நபரை அழைத்து இந்த நிகழ்வு குறித்து விசாரித்து விட்டு, இந்த பணம் தவறாக தன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது என அவர் அனுமதித்தால் மட்டுமே அவருடைய கணக்கிலிருக்கும் பணத்தை நம்முடைய வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியும்.

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை

வேறு ஒரு வங்கியின் வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கும் பட்சத்தில், அந்த வங்கியின் கிளையைத் தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ இந்த பிரச்னையை விவரிக்க வேண்டியிருக்கும். அதனைத் தொடர்ந்து அந்த வங்கி தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு உரிய நபரிடம் பேசி, உறுதி செய்து அதன் பின்னரே நம் கணக்கில் அப்பணம் வரவு வைக்கப்படும். எனவே, பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போதே கவனமாக மேற்கொள்வது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man