Published:Updated:

SIP என்றால் என்ன? அதில் பாதுகாப்பாகவும் முதலீடு செய்வது எப்படி? | Doubt of Common Man

SIP முதலீட்டு முறை

Systematic Investment Plan என்பதன் சுருக்கமே SIP எனப்படுகிறது. இது மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யப்படும் ஒரு முதலீட்டு வழிமுறை.

SIP என்றால் என்ன? அதில் பாதுகாப்பாகவும் முதலீடு செய்வது எப்படி? | Doubt of Common Man

Systematic Investment Plan என்பதன் சுருக்கமே SIP எனப்படுகிறது. இது மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யப்படும் ஒரு முதலீட்டு வழிமுறை.

Published:Updated:
SIP முதலீட்டு முறை
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் கோபிநாத் என்ற வாசகர், "SIP என்றால் என்ன? அதில் பாதுகாப்பாகவும் லாபம் தரும்படியும் முதலீடு செய்வது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

பணத் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதனை நல்ல முறையில் முதலீடு செய்து இலாபம் ஈட்டும் வழிமுறைகளைத் தேடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். SIP என்னும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. சிறிய தொகையை முதலீடு செய்தாலே நல்ல ரிடர்ன்ஸ் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. SIP என்றால் என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறையப் பேருக்கு இருக்கிறது. அதே போல் இது குறித்துத் தெரிந்து கொள்ள நம் வாசகர் ஒருவருக்கும் ஆர்வம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

நம் வாசகரின் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள ஃபினான்ஸ் பிளானர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் பேசினோம். அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

SIP என்றால் என்ன?

“Systematic Investment Plan என்பதன் சுருக்கமே SIP எனப்படுகிறது. இது மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை படிப்படியாக, மாதாந்திர அல்லது காலாண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்யும் முறை.

தொடர்ச்சியான வைப்புத் தொகையை (recurring deposit) போலவே, ஒரு முதலீட்டாளர் நிலையான கால இடைவெளியில் (மாதாந்திர அல்லது காலாண்டு) SIP மூலம் முதலீடு செய்யலாம். மாதத்திற்கு ரூ.100க்கு கூட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யத் தொடங்கலாம். தொடர்ச்சியான வைப்புத்தொகையில் 6-7% ரிடர்ன்ஸ் கிடைக்கும். SIP-இல் சந்தை நிலவரத்தைப் பொருத்து 12% வரை அல்லது அதற்கு மேலும் கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. SIP-இல் முதலீடு செய்வதால் பல நன்மைகள் உள்ளன.

SIP
SIP

ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முறையில் முதலீடு செய்து வந்தீர்கள் என்றால், உங்கள் வட்டிக்கு வட்டி கிடைக்கும். நீண்ட கால முதலீடுகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரூபாய் செலவு சராசரி என்னும் Rupee Cost Averaging-ன் படி நீங்கள் குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறீர்கள். எத்தனை பங்குகள் வாங்க முடியும் என்பது நிகர சொத்து மதிப்பு அல்லது NAV (Net Asset Value)-வைப் பொருத்து மாறும். இதன்படி, சந்தையில் பங்குகளின் விலை ஏறும்போது நீங்கள் குறைந்த அளவில் பங்குகளும், பங்குகளின் விலை குறையும்போது அதிக பங்குகளும் வாங்குவது சாத்தியமாகிறது.” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதுகாப்பாகவும் இலாபம் தரும்படியும் முதலீடு செய்வது எப்படி?

“முதலில் நீங்கள் உங்கள் வங்கிக்குச் சென்று KYC (Know Your Customer) சரிபார்க்க வேண்டும். இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) விதிமுறைகளின்படி KYC சரிபார்ப்பை மேற்கொள்வது கட்டாயமாகும், இது இல்லாமல் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய முடியாது.

SIP-ல் முதலீடு செய்யும் முன் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் உண்டு. உங்கள் நிதி இலக்குகளைச் சரியாகத் திட்டமிட்டு, ஒவ்வொரு இலக்கையும் ஒரு குறிப்பிட்ட தொகை மற்றும் அவற்றை அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு SIP-ல் முதலீடு செய்வது முக்கியம். வீடு வாங்குவது, ஓய்வு பெறுவது போன்ற குறிக்கோள்களுக்கு SIP-ல் இருந்து கிடைக்கும் இலாபம் கைகொடுக்கும்.

முதலீடு
முதலீடு

எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ரிடர்ன்ஸ் வேண்டும் எனத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். அதே போல் கடந்த 5-10 வருடங்களில் அதிக இலாபம் கொடுத்த பங்குகள் குறித்து அறிந்து முதலீடு செய்ய வேண்டும். SIP சந்தை நிலவரங்களால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியது என்றாலும் நீண்ட கால முதலீடுகளில் பெரும்பாலும் இலாபத்தையே அளிக்கும்.” என விளக்கினார் சுரேஷ்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism