Published:Updated:

``அசோகா பல்கலைக்கழகம் அந்த தகுதியை இழந்துவிட்டது!" - ஏன் ராஜினாமா செய்தார் அரவிந்த் சுப்பிரமணியன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனின்
தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனின்

அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணியைத் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார் பிரபல பொருளாதார நிபுணரான அரவிந்த் சுப்பிரமணியன். இந்த ராஜினாமாவின் பின்னணியில் நடந்துதான் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், தனது பதவிக்காலம் முடிந்தவுடன், அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அவருக்குப் பதவி நீட்டிப்பு செய்து தர மோடி அரசாங்கம் தயாராக இருந்தபோதும், அவர் அமெரிக்காவுக்குச் சென்றதைப் பலரும் வியப்புடன் பார்த்தனர்.

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம், கடந்த ஜூலை மாதம் அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராகச் சேர்ந்தார். பொருளாதாரக் கொள்கை தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் ஒரு மையத்தை உருவாக்கும் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

அசோகா பல்கலைக்கழகம்
அசோகா பல்கலைக்கழகம்

ஹரியானா மாநிலத்தில் சோனிபட் நகரத்தில் அமைந்திருக்கும் அசோகா பல்கலைக்கழகம் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக இருந்த பிரபல பொருளாதார நிபுணரும், இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகருமாக விளங்கிய அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியைத் திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார். அவரது இந்த ராஜினாமா இந்தியா முழுக்க கல்வியாளர்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றனர். அரவிந்த் சுப்பிரமணியனின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்?

விமர்சனத்துக்குத் தடா...

இந்தப் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறை பேராசிரியாராக இருந்தார் பிரதாப் பானு மேத்தா. ஆளும் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய தனது விமர்சனங்களைத் தயக்கம் இல்லாமல் பேசியும் எழுதியும் வந்தார் மேத்தா. அவரது இந்த செயல்பாடு ஆளும் கட்சியினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கவே, மேத்தாவுக்கு மறைமுகமான நெருக்குதல்கள் வரத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், சுயமாக சிந்தித்துச் செயல்பட முடியாது என்று நினைத்த மேத்தா, சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கேள்வி கேட்கும் தகுதியை இழந்தது!

மேத்தாவின் இந்தத் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து அரவிந்த் சுப்பிரமணியனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ''மேத்தாவை ராஜினாமா செய்யவிடாமல் தடுக்க அசோகா பல்கலைக்கழகம் தவறிவிட்டது. இதன்மூலம் கேள்வி கேட்கும் தகுதியையும் அந்தப் பல்கலைக்கழகம் இழந்துவிட்டது'' என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியன்.

அசோகா பல்கலைக்கழகம்
அசோகா பல்கலைக்கழகம்

''அசோகா பல்கலைக்கழகத்தில் தனியார் முதலீடு (private equity) ஏற்கெனவே உண்டு என்றாலும், தொழில்முறை சார்ந்த நிபுணர்கள் இனி சுதந்திரமாகச் செயல்படுவதற்கான இடத்தை இழந்துவிட்டது'' என்று சொல்லியிருக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியன்.

பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாளபிகா சர்க்காருக்கு அனுப்பியிருந்தாலும், இந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை பேராசிரியராக இருப்பார் என்று தெரிகிறது.

அரவிந்த் சுப்பிரமணியனின் ராஜினாமா மத்தியில் ஆளும் கட்சியினருக்கு தர்மசங்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு