Published:Updated:

அரசின் திட்டங்கள் குறித்து சரியான புள்ளிவிவரங்கள் இல்லையே... ஏன்?

புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்...
பிரீமியம் ஸ்டோரி
புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்...

நிகழ்வு

அரசின் திட்டங்கள் குறித்து சரியான புள்ளிவிவரங்கள் இல்லையே... ஏன்?

நிகழ்வு

Published:Updated:
புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்...
பிரீமியம் ஸ்டோரி
புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்...

தேவசேனா

கொரோனா பெருந்தொற்று தமிழகப் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங் களை உண்டாக்கியது என்பதை ஆராய்ந்து உரிய தரவுகளுடன் எழுதிய கட்டுரைகள் ‘‘பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள் கையும்’’ என்ற தலைப்பில் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் (MIDS) ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்...
புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்...

இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய தமிழக அரசின் நிதி மற்றும் திட்டம், மனித வளம் ஆகிய துறைகளின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘‘அரசின் கொள்கை களானது, அதன் தத்துவங்கள், மதிப்பீடுகள், அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படை யிலேயே உருவாக்கப்படுகின்றன. ஆனால், அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அதன் சரியான இலக்கை எட்டுகிறதா என்பது தெரிவதே இல்லை. காரணம், சரியான தரவுகள் இல்லை. பெரும்பாலும், முறையான எந்த விதமான ஆய்வுகளும் தரவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமலே அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை அந்தத் துறையின் மூலம் நாம் எந்தப் பலனையும் அடையவில்லை. சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் போன்ற ஆய்வு நிறுவனங்கள் முன்வந்து அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். அதன்மூலம் மக்களுக்கு பலன் தரும் கொள்கைகளை அரசு வகுக்க வழி உண்டாகும்” என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ.ஜெய ரஞ்சன், ‘‘மத்திய அரசு சார்பாக மாநில அமைப்புகள் குறித்த தரவுகளைச் சேகரிக் கிறார்கள். ஆனால், அந்தத் தரவுகள் உடனடி யாக மாநில அரசுகளுக்குக் கிடைப்பதில்லை. அது நம்மிடம் திரும்ப வரும்போது தொடர்பற்ற தாகவும் பயனற்றதாகவும் போய்விடுகிறது. மாநில அரசு அதற்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான தரவுகள்தான் சரியான திட்டங்களை உருவாக்க உதவும்” என்று தெரிவித்தார்.