தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச பி.எஃப் பென்ஷன் ரூ.3,000...நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..!ழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.எஃப்) பென்ஷன் குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாயாக உள்ளது. அதை ரூ.3,000-ஆக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தொழிலாளர்கள் ஊதியத்தில் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் நிதியில் ஒருபகுதி பென்ஷன் திட்டத்துக்காகச் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு பென்ஷன் திட்டத்துக்காக ஒருவரின் ஊதியத்தில் அதிகபட்சம் 2014-ம் ஆண்டு வரை மாதம் ரூ.541 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இது ரூ.1,250-ஆக உயர்த்தப்பட்டது. தொழிலாளர் வைப்பு நிதியில் ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கணக்கு வைத்திருந்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்கும்.

தற்போதுள்ள விலைவாசியில் ரூ.1,000 பென்ஷன் தொகையாக வழங்குவதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, இந்தத் தொகையை ரூ.3,000-ஆக உயர்த்தித் தர வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு தமது பரிந்துரையைச் சமர்ப்பித்துள்ளது. பல தொழிலாளர்கள் சரியாக நீண்டகாலத்துக்கு இந்தத் திட்டத்தில் சேமிக்காததால் 1,000 ரூபாய்க்கும் குறைவான பென்ஷன் தொகை பெற்று வருகின்றனர். பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி மஹதாப் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது!