Published:Updated:

பிஎஃப் பணம்: இடிஎஃப் முதலீடு மூலம் ரூ.68,000 கோடி வருமானம்..!

பிஎஃப் ( PF )

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இபிஎஃப்ஓ நிறுவனம் மக்களின் பிஎஃப் பணத்தில் 85 சதவிகிதத்தை கடன் சார்ந்த திட்டங்களிலும், 15 சதவிகிதத்தை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் இடிஎஃப் முதலீடுகளிலும் முதலீடு செய்துவருகிறது.

பிஎஃப் பணம்: இடிஎஃப் முதலீடு மூலம் ரூ.68,000 கோடி வருமானம்..!

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இபிஎஃப்ஓ நிறுவனம் மக்களின் பிஎஃப் பணத்தில் 85 சதவிகிதத்தை கடன் சார்ந்த திட்டங்களிலும், 15 சதவிகிதத்தை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் இடிஎஃப் முதலீடுகளிலும் முதலீடு செய்துவருகிறது.

Published:Updated:
பிஎஃப் ( PF )

வேலையிலிருந்து ஓய்வுபெறும்போது வயதான காலத்தில் பணத் தேவைக்கு யாரையும் நம்பியிருக்க வேண்டாம் என்பதற்காக வேலை செய்யும்போதே வருமானத்தில் ஒரு சிறு பகுதியை (12%) கட்டாயமாகச் சேமித்து வைப்பதுதான் பணியாளர் சேமநல நிதி (இ.பி.எஃப்).

இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை அந்தந்தப் பணியாளர்கள் கணக்கில் நிர்வகித்துவருகிறது அரசுக்குச் சொந்தமான பணியார் சேமநல நிதி நிறுவனம் (EPFO).

வட்டி குறைப்புக்குப் பிறகு பிஎஃப் லாபகரமான முதலீடா?
வட்டி குறைப்புக்குப் பிறகு பிஎஃப் லாபகரமான முதலீடா?

முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றுகிற அனைவருக்குமே பெரும்பாலும் பிஎஃப் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு வட்டி (8.1%) வழங்கப்படுகிறது.

அதேசமயம் இவ்வாறு குவியும் பல லட்சம் கோடி மதிப்பிலான நிதியை வெறுமனே வைத்திருப்பதற்குப் பதிலாக நிதி சார்ந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்யப்படும் முதலீட்டில் கணிசமான வருமானத்தையும் மத்திய அரசு ஈட்டிவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இபிஎஃப்ஓ நிறுவனம் மக்களின் பிஎஃப் பணத்தில் 85 சதவிகிதத்தை கடன் சார்ந்த திட்டங்களிலும், 15 சதவிகிதத்தை பங்குச் சந்தையில் வர்த்தக மாகும் இடிஎஃப் முதலீடுகளிலும் முதலீடு செய்து வருவதாகக் கூறியிருக்கிறது.

2015-ல் இருந்தே பிஎஃப் பணம் இடிஎஃப்பில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பங்குச் சந்தையில் முதலில் சதவிகித பிஎஃப் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. இதையடுத்து 2016-17-ல் இது 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 2017-18-ல் 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

பிஎஃப் வாடிக்கையாளர்கள்
பிஎஃப் வாடிக்கையாளர்கள்
PF members

இடிஎஃப்பில் 2021-22 நிதி ஆண்டில் மட்டும் ரூ.43,568.02 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.32,070.84 கோடியும், 2019-20 நிதி ஆண்டில் ரூ.31,501.09 கோடியும் இடிஎஃப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டிலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ரூ.12,199.26 கோடி இடிஎஃப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தக் காலத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு ரூ.84,477.67 கோடியாகும்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இடிஎஃப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ள இபிஎஃப் பணம் எவ்வளவு வருமானம் ஈட்டியிருக்கிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மார்ச் 2022 வரை இடிஎஃப்பில் செய்யப்பட்ட முதலீடு ரூ.1.59 லட்சம் கோடி எனவும். இந்த முதலீடு தற்போது ரூ.2.27 லட்சம் கோடியாக வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

25  வயது,  20,000  சம்பளம்...  60  வயது,  ரூ.1.38  கோடி..!  - பிஎஃப்  ரகசியம்
25 வயது, 20,000 சம்பளம்... 60 வயது, ரூ.1.38 கோடி..! - பிஎஃப் ரகசியம்

பிஎஃப் பணத்தை இடிஎஃப்பில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.68,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு அரசுக்கு கிடைக்கும் வருமானம் பி.எஃப் உறுப்பினர்களின் பி.எஃப், பி.எஃப் இன்ஷூரன்ஸ், பி.எஃப் ஓய்வூதியம் பிறவற்றுக்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது.