இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முடிந்த 2019-20-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளின் எண்ணிக்கை (ஃபோலியோ) 73 லட்சம்... அதாவது, 9% அதிகரித்து மொத்தம் 8.97 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 55% உயர்ந்து 60.11 லட்சமாகவும், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்டில் ஃபோலியோக்களின் எண்ணிக்கை 84% அதிகரித்து 25.74 லட்சமாகவும் உள்ளன. ஃபோலியோக்களின் எண்ணிக்கை, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டில் 22% உயர்ந்து 93.84 லட்சமாகவும், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் 9% உயர்ந்து 85.71 லட்சமாகவும் உள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஈக்விட்டி ஃபண்டுகளின் ஃபோலியோ எண்ணிக்கை 15 லட்சம் அதிகரித்து 6.44 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கடன் சார்ந்த ஃபண்டுகளில் ஃபோலியோ எண்ணிக்கை 45 லட்சம் குறைந்து 71.78 லட்சமாக உள்ளது. மொத்தமுள்ள 45 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் 11 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில்தான் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் குறைந்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களிடம் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதையே இது காட்டுவதாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தினர் கருதுகிறார்கள்.