Published:Updated:

`பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 வரை உயர்த்த முடியும்!’ -விவாதமின்றித் தாக்கலான மசோதா

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தச் சட்டத்திருத்தம் மூலம் மத்திய அரசு வரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ள முடியும்.

மக்களவையில் நிதிச் சட்டத்தின் 8-ஆவது பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் வகையில், நிதி மசோதா 2020-ஐ மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தாா். அந்த மசோதா விவாதங்களின்றி மக்களவையில் நிறைவேறியது. இதன் மூலம் மத்திய அரசு வரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ள முடியும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்தப் புதிய சட்டத்திருத்தத்தின்படி பெட்ரோல், டீசல் மீதான சிறப்புக் கலால் வரிக்கான உச்சவரம்பு முறையே ரூ.18 மற்றும் ரூ.12-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பானது, பெட்ரோலுக்கு ரூ.10-ஆகவும், டீசலுக்கு ரூ.4-ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

`எஸ் வங்கி' ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் போனது ஏன்?! - விளக்கம் கொடுத்த நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்தாலும் உடனடியாக விலை மாற்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் வரும் காலங்களில் 8 ரூபாய் வரை ஒரே நேரத்தால் மத்திய அரசால் கலால் வரியை உயர்த்த முடியும். இதனால் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் வரலாம்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

கடந்த 14-ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தியது. இதன் மூலம் அரசுக்கு ரூ.39,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த வரி உயர்வால், பெட்ரோல், டீசல் மீதான கலால் அதன் வரி உச்சவரம்பை எட்டியது. தற்போது இந்த உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் கலால் வரி அதிகரிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு