Published:Updated:

Gold: எகிறும் தங்கத்தின் விலை; மேலும் உயரும் என எச்சரிக்கும் நிபுணர்; என்ன காரணம்?

தங்கம்
News
தங்கம்

உலக தங்கக் கவுன்சிலின் கணக்கின்படி, சென்ற வருட தங்க தேவையைவிட 350 டன் அதிகமாக நடப்பு ஆண்டில் தேவைப்படுகிறது. 2014-ம் ஆண்டு நமது தங்கத்தேவை 898.6 டன்னாக இருந்துள்ளது. அதன் பிறகு, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நமது தங்கத்தேவை தற்போது 900 டன்னாக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் தங்கம் இல்லாத வீடே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தங்கம் நம் எல்லோரது வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்க விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் நமது மக்களின் தங்க தேவை குறைவதே இல்லை.

கொரோனா லாக்டௌனுக்குப் பிறகு, கடந்த நவம்பரில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தேறியுள்ளன. பல பண்டிகைகளும் வரும் மாதங்களில் வரவிருக்கின்றன. மேலும், மெல்ல மெல்ல பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் மக்கள் தங்கள் பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இதையொட்டி மக்கள் தங்கம் வாங்க தங்கக்கடைகளை நோக்கி பயணிக்கின்றனர். இதனால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத தங்கத்தேவை இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது.

Gold
Gold
Photo by vaibhav nagare on Unsplash

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலக தங்கக் கவுன்சிலின் கணக்கின்படி, சென்ற வருட தங்க தேவையைவிட 350 டன் அதிகமாக நடப்பு ஆண்டில் தேவைப்படுகிறது. 2014-ம் ஆண்டு நமது தங்கத்தேவை 898.6 டன்னாக இருந்துள்ளது. அதன் பிறகு, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நமது தங்கத்தேவை தற்போது 900 டன்னாக உயர்ந்து உள்ளது.

இப்படி தங்கத்தேவை உயர்ந்துகொண்டு இருக்கும்வேளையில், நேற்று முன்தினம் இரண்டு முறை தங்கத்தின் விலை ஏறியுள்ளது. இது தங்கம் வாங்க வந்த மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சென்னையில் நேற்று முன்தினம் காலை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 என அதிகரித்து ரூ.4,545-க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் விலை ரூ.240-ஆக உயர்ந்து, ரூ.36,360-க்கு விற்பனை ஆனது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மாலையிலும் தங்கத்தின் விலை உயர்ந்தது. மாலையில் மேலும் ஒரு கிராமுக்கு விலை ரூ.11 உயர்ந்து, ரூ.4,556-க்கு விற்கப்பட்டது. ஒரு சவரனின் விலை ரூ.88-ஆக உயர்ந்து, ரூ.36,448-க்கு விற்கப்பட்டது.

தங்கத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, விலையும் ஏறிக் கொண்டேபோகிறது. ஆனால், மக்களின் தங்கத்தேவை மற்றும் தங்கமோகம் மட்டும் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை.

தங்க விலை உயர்வுக்கான காரணம் குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.

``தங்கத்தின் விலைக்கும் அமெரிக்காவின் பொருளாதாரப் புள்ளிவிபரங்களுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதால், அதிக ஏற்ற, இறக்கங்களுடன் வர்த்தகமாகி வருகிறது.

கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்
கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்

சென்ற புதன்கிழமையன்று அமெரிக்காவின் எஃப்.ஓ.எம்.சி கூட்டத்தின் முடிவில், 2022-ல் மூன்று முறை வட்டி விகிதங்களை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு சந்தையில் எந்த விதமான எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே, சந்தைகளால் எதிர்பார்க்கப்பட்ட செய்தி இது என்பதால், தங்கத்தின் சர்வதேச விலை மேல்நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது.

தற்போது, கோவிட்19-க்கு அடுத்தபடியாக ஒமிக்ரான் பரவல் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க ஃபெடரல் கூற்றின்படி, அடுத்த ஆண்டின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த முடியாமல்போனாலோ, தள்ளிவைக்கப்பட்டாலோ சர்வதேச அளவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

இன்றைய நிலையில், அமெரிக்கா டாலர் இன்டெக்ஸ் 95 - 96 ஆக காணப்படுகிறது. இது, 95-க்குக் குறைவாக இறக்கம் கண்டால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது’’ என்றார்.

தங்கம் விலை உயர்ந்து வருவதைப் பார்த்து, பலரும் நகைகளை வாங்கி வருகிறார்கள். விலை இன்னும் உயர்ந்தால் என்ன செய்வது என்கிற பயம்தான் அவர்கள் தற்போது தங்கம் வாங்க முக்கியமான காரணம் ஆகும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 76 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டதாலும் நம் நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இன்னும் சிலர், தங்கத்தை நகைகளாக வாங்காமல் இ.டி.எஃப் முறையில் காகிதத் தங்கமாகவும், தங்கப் பத்திரங்களிலும் முதலீடு செய்துவருகிறார்கள்.