Published:Updated:

`தொழிலில் சரிவு ஏற்பட்டாலும் அஞ்ச வேண்டாம்!' - தொழில்முனைவோர்களுக்கு நிபுணர்கள் சொல்லும் வழிகள்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
News
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

நடிகர் அமிதாப் பச்சனின் ஏ.பி.சி நிறுவனம் சரிந்தபோது இந்த பாலிசியின் மூலம் தன் மனைவிக்கு கிடைத்த பணத்தைக் கொண்டுதான் அமிதாப் மீண்டுவந்தார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றுபவர்கள் எம்.எஸ்.எம்.இ என்று சொல்லப்படுகிற சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள்தாம். ஆனால், அவர்கள் தங்கள் தொழிலைக் கவனிப்பதுபோல, குடும்பத்தைக் கவனிப்பதில்லை என்பது கசப்பான உண்மை. நன்றாக நடந்துவரும் தொழிலானது எதிர்பாராத காரணத்தால் திடீரென முடங்கினால், குடும்பத்தின் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு பல சிறு தொழில்முனைவோர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு கருத்தரங்கம் சென்னையில் உள்ள ஆந்திரா சாம்பர் ஆப் காமர்ஸில் (Andhra Chamber of Commerce) அண்மையில் நடந்தது. `Financial Protection to Entrepreneurs and Family' என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் சிறு தொழில்முனைவோர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பொருளாதாரத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் பல்வேறு விஷயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டன.

 நாகராஜ் கிருஷ்ணமூர்த்தி
நாகராஜ் கிருஷ்ணமூர்த்தி
நிவேதா நா

இந்தக் கருத்தரங்கில் முதலில் பேசிய கோட்டக் மஹிந்த்ரா வங்கியின் துணைத் தலைவர் நாகராஜ் கிருஷ்ணமூர்த்தி,

``இந்தக் கருத்தரங்கத்தின் முக்கிய நோக்கமே தொழில் முனைவோருக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியான,

எம்ப்ளாயர் - எம்பிளாயி பெனிவிட் (Employer- employee benefit),

கீமேன் இன்ஷூரன்ஸ் (Keyman Insurance),

பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் (Partnership Insurance),

ஹெச்.யு.எப் (HUF) மற்றும் எம்.டபிள்யூ.பி.ஏ (MWPA)

- பற்றிய விஷயங்களை எடுத்துச் சொல்வதே ஆகும். ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை ஃபிரன்ட்லைன் ஊழியர்கள், மிடில்லைன் ஊழியர்கள் மற்றும் அப்பர்மிடில் லைன் ஊழியர்கள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு நிறுவனத்தில் பெரும்பாலும் மிடில்லைன் மற்றும் அப்பர் மிடில்லைன் ஊழியர்களுக்கே முக்கியத்துவம் தரப்படும். ஏனெனில், அவர்கள்தாம் மேனேஜர் போன்ற பதவிகளில் இருக்கும் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் ஆவர். ஆனால், ஃபிரன்ட்லைன் ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் அந்த நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு, வேறு நிறுவன வேலைக்குச் செல்லலாம். எனவே ஃபிரன்ட்லைன் தொழிலாளர்களைவிட மற்ற இரு தொழிலாளர்களுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜை அதிகமாக நிறுவனங்கள் எடுக்கும்.

இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான செக்கை 25-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களிடம் நிறுவனம் கொடுக்கும்பட்சத்தில் பிரிவு 32(1)-கீழ் இந்த நிறுவனம் கட்டும் வருடப் பிரீமியத்துக்கான வரி முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

சில நிறுவனங்கள் ஐந்து வருடத்துக்குமேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனக்‌ஷூரன்ஸுக்கான பிரீமியம் கட்டிவரும். அந்த ஊழியர் திடீரென வேலையை விட்டு, வெளியேறும்போது அந்த பிரீமியம் தொகையை லாபக் கணக்கிலிருந்து கழித்துவிட்டு, மீதமுள்ளதை மட்டும் வரியைக் கட்டினால் போதும்.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)

இந்தப் பாலிசியை நிறுவனத்தின் தலைவரும் தன்னை நிறுவனத்தின் ஊழியராகச் சேர்த்துக்கொண்டு எடுக்கலாம். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் நான்கு இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவர்கள் தலா ரூ.10 லட்சம் என பிரிமீயம் கட்டுகிறார்கள். இந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி லாபம் வருகிறது என வைத்துக்கொண்டால், ரூ.3 கோடி லாபத்தில் ரூ.40 லட்சத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள ரூ.2.6 கோடிக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். இது மட்டுமல்லாமல், ரூ.10 லட்சம் பிரீமியம் கட்டும்போது, பாலிசியைப் பொறுத்து ரூ.1 - ரூ.1.5 கோடி வரை அவர்களுக்குக் கவரேஜ் கிடைக்கும்.

ஒரு நிறுவனத்தை இரண்டு பார்ட்னர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள். பிறகு, ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு பார்ட்னர் தொழிலில் இருந்து விலகுகிறார். பார்ட்னர்களின் எண்ணிக்கை குறையும்போது அந்த நிறுவனத்தின் நிலைத்தன்மை ஆட்டம் காணும். மேலும், எஞ்சி இருக்கும் பார்ட்னர் மீதே அனைத்து சுமைகளும் வந்துவிழும். இந்தச் சூழ்நிலையில்தான் பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் தேவைப் படுகிறது. இதில் இரண்டு பார்ட்னர்களுக்குமே அவரவர் முதலீடுகள், வருட லாபம் மற்றும் வருட டர்ன் ஓவரைக் கணக்கிட்டு, பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் வழங்கப்படும். ஒரு பார்ட்னர் இல்லாமல் போகும்பட்சத்தில் நிறுவனம் தடுமாறாமல் செயல்பட இந்த பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் நிச்சயம் உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து பேச ஆரம்பித்தார் கோட்டக் மஹிந்திரா வங்கியின் சீனியர் டெபிட்டி வைஸ் பிரசிடன்ட் ஜி.பாலமுருகன். `கீ பெர்ஷன் இன்ஷுரன்ஸ் பாலிசி' பற்றி அவர் பேசினார்.

``கீ பெர்சன் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்பது நிறுவனத்தின் முக்கிய நபர் மீது எடுக்கப்படுவதாகும். ஒரு நிறுவனத்தின் `கீ பெர்சன்’ என்பது அந்த நிறுவனத்தின் சேர்மன், எம்.டி, மேனேஜிங் டைரக்டராக மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு ஹோட்டலில் `கீ பெர்சன்' என்பது தலைமைச் சமையல்காரராகக் கூட இருக்கலாம். அவர் இல்லாமல் போகும் நேரத்தில் அந்தத் தருணத்தை சமாளிக்க இந்த பாலிசி நிறுவனத்துக்கு பெரிய உதவியாகச் செயல்படும்.

`மேரிட் வுமன் பிராபர்ட்டி ரைட்’ என்பது அருமையான இன்ஷுரன்ஸ் திட்டமாகும். இந்தத் திட்டத்தைத் திருமணமான ஒரு பெண் எடுத்திருந்தால், ஒரு நிறுவனத்திற்கோ, அதன் நிறுவனருக்கோ ஏதாவது அசம்பாவிதம் நிகழும்பட்சத்தில் இந்த பாலிசியின் மூலம் இழப்பீடு கிடைக்கும். இந்த இழப்பீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை நீதிமன்றத்தால் கூட ஜப்தி செய்ய இயலாது. நடிகர் அமிதாப் பச்சனின் ஏ.பி.சி நிறுவனம் சரிந்தபோது இந்த பாலிசியின் மூலம் தன் மனைவிக்கு கிடைத்த பணத்தைக் கொண்டுதான் அமிதாப் மீண்டுவந்தார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

அடுத்து, ஹெச்.யு.எஃப் எனச் சுருக்கமாகச் சொல்லப்படுகிற `Hindu Undivided Family’ ஆகும். தொழில்முனைவோர்கள் இந்த ஹெச்.யு.எஃப் மூலம் கணிசமான வரிச் சலுகையைப் பெற முடியும். பொதுவாக, பான் கார்டு வைத்திருப்பவர் ரூ.1.5 லட்சம் ரூபாய் வரைக்கும் வரி கட்டத் தேவையில்லை. `Hindu Undivided Family’யின்படி பான் கார்டு வைத்திருப்பவர், மேலும் ரூ.1.5 லட்சத்துக்கு வரி கட்டத் தேவையில்லை. இதில் கர்த்தாவாக குடும்பத்தின் மூத்த நபர் இருப்பார்’’ என்று பேசி முடித்தார்.

இந்தக் கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்தினார் சிறுதொழில்முனைவோர்களுக்கு ஆலோசகரான ஆனந்த். சிறுதொழில்முனைவோர்கள் அவசியம் எடுக்க வேண்டிய இன்ஷுரன்ஸ் பாலிசிகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்வதாக அமைந்திருந்தது இந்நிகழ்ச்சி.