Published:Updated:

சிறு குறு தொழில்நிறுவனங்களுக்கு கடன் உதவி; ஃபேஸ்புக் செய்யப்போவது என்ன?

Facebook
Facebook

இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடனை பெற்றுத் தரும் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்காக சிறு தொழில் கடன் நிறுவனமான இன்டிஃபையுடன் கைகோர்த்துள்ளது ஃபேஸ்புக்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கிலும் கொரோனாவின் தாக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்தான். குறிப்பாக, இந்தியாவின் ஜி.டி.பி-யில் அதிகம் பங்கு வகிக்கும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கொரோனாவால் சந்தித்துள்ள நிதிப் பிரச்னைகள் ஏராளம்.

வெளிநாடுகளைப் போல, இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியிருந்தாலும், இன்னும் அவர்களுக்கான தேவை பூர்த்தியாகவில்லை என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்நிலையில், இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கடன்
கடன்
சிக்கலில் சிறுதொழில் நிறுவனங்கள்; மத்திய அரசின் உதவிகள் உண்மையில் கைகொடுத்திருக்கின்றனவா?

அந்த அறிவிப்பில், இந்தியாவில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடனை பெற்றுத் தரும் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் துவங்கியுள்ளாதாகத் தெரிவித்துள்ளது. இதற்காக சிறு தொழில் கடன் நிறுவனமான இன்டிஃபையுடன் கைகோர்த்துள்ளது ஃபேஸ்புக். இந்த டை-அப் மூலம் இன்டிஃபை நிறுவனத்தின் கடன் தொடர்பான திட்டங்கள் இனி ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும். இந்த கடன் திட்டங்களில் பயனாளர்கள் எளிதாக கடன் பெற முடியும் என்றும், கடன் திட்டங்களுக்கான செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் எளிதாக இருக்கும் என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் இந்த திட்டத்தை முதன்முதலில் இந்தியாவில் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இது குறித்து பேசிய ஃபேஸ்புக் இந்தியா பிரிவின் தலைவர் அஜித் மோகன், ``குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதில் கடன் பெற்றுத் தரும் நோக்கில் இந்த திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த திட்டத்தை உலக அளவில் கொண்டு செல்வதில் ஃபேஸ்புக் நிறுவனம் கவனம் செலுத்தும். இந்தியாவில் தற்போது இன்டிஃபை நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது போல, எதிர்காலத்தில் மற்ற நிறுவனங்களுடனும் ஃபேஸ்புக் நிறுவனம் கைகோர்க்கும்.

ஏனெனில் இந்தியாவில் நாடு முழுவதும் 20 கோடி தொழில் நிறுவனங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றன. இவர்களுக்கு எங்களுடைய நிறுவனத்தின் பிளாட்ஃபார்ம் வழியாக கடன் தகவல்கள் சென்று சேரும் போது, அது அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு எந்தவொரு வருமானமும் கிடையாது. கடன் வழங்கும் நிறுவனத்துக்கும் பயனாளர்களுக்கும் ஒரு பாலமாக மட்டுமே ஃபேஸ்புக் இருக்கும்" என்றார் அவர்.

Facebook
Facebook
Vikatan
சிறு குறு நிறுவனங்கள் விரைவில் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கு தயாராக வேண்டும்... ஏன்?

இன்டிஃபை - ஃபேஸ்புக் கடன் சேவை திட்டத்தின் மூலம் தொழில்முனைவோர்கள் ரூ.5 - 50 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும், இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 17-20% வரையில் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் தொழில்முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக வட்டியில் 0.2% சலுகை தரப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. கொரோனாவின் கோரதாண்டவத்தால் பல்வேறு தொழில்நிறுவனங்கள் நலிவடைந்திருக்கும் இந்த வேளையில், ஃபேஸ்புக்கின் இந்த கடன் சேவை திட்டம் நிச்சயம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஆரம்ப காலகட்டத்தில் நிறுவனம் ஆரம்பிக்க மூலதனம் இல்லாமல் தவிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் பயன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு